புதிய வீரர்கள், பயிற்சியாளர்கள் என புதுப்பொலிவுடன் களமிறங்கும் பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு தொடக்கமே சவால் நிறைந்ததாகும். வரும் 23-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில் தோனியின் சிஎஸ்கே அணியைச் சந்திக்கிறது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து 11-வது சீசனில் விளையாடியுள்ளபோதிலும், 2 முறை மட்டுமே இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. இருமுறை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதன்பின் 7 முறை லீக் சுற்றோடு நடையைக் கட்டியுள்ளது பெங்களூரு அணி. கடந்த முறை மோசமாக விளையாடிய கோலி தலைமையிலான அணி 6-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
ஒட்டுமொத்தமாக ஆர்சிபி அணி இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 167 ஆட்டங்களில் விளையாடி 78 ஆட்டங்களில் வென்றுள்ளது, 84 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 2 ஆட்டங்கள் டையிலும், 3 ஆட்டங்களில் முடிவும் எட்டவில்லை.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 4 ஆயிரத்து 948 ரன்கள் சேர்த்துள்ளார். விக்கெட்டுகளை பொருத்தவரை யஜுவேந்திர சாஹல் 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அனுபவம் நிறைந்த வீரர்கள் பலர் பல்வேறு சீசன்களில் ஆர்சிபி அணியில் இருந்தும் அந்த அணியில் பட்டத்தை வெல்ல முடியவில்லை. ஆதலால், இந்த சீசனுக்கு பல்வேறு மாற்றங்களுடன் பெங்களூரு ராயல்ஸ் அணி களமிறங்குகிறது.
கர்ஸ்டன் பயிற்சி
பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி, பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் டிரன்ட் வுட்ஹில், பந்துவீச்சுப்பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் ஆகியோர் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டனர்.இவர்களுக்கு பதிலாக கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராகவும், ஆஷிஸ் நெஹ்ரா துணை பயிற்சியாளராகவும் உள்ளனர்.
9 வீரர்கள் நீக்கம்
இந்த முறை ஏலத்தில் பிரன்டன் மெக்கலம், கிறிஸ் வோக்ஸ், கோரே ஆன்டர்ஸன் உள்பட 9 வீரர்கள் அனுப்பப்பட்டு புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு மன்தீப் சிங் விற்கப்பட்டு அங்கிருந்து ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதவிர மே. இ.தீவுகள் பேட்ஸ்மேன் ஷிம்ரன் ஹெட்மயர், மும்பை ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோர் வாங்கப்பட்டுள்ளனர். சரியான கலவையில் வீரர்கள் இல்லாமல் இந்த மிகுந்த தடுமாற்றத்தில் இருந்து வந்தது.ஆனால், இந்த ஏலத்தில் முக்கிய வீரர்கள் பலரை எடுத்து, சமநிலைக்கு வந்துள்ளது.
புதிய வீரர்கள்
புதிய வீரர்களா, ஹமந்த் சிங், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர், ஹென்ரிச் கிளாசன், அக்ஷதீப் நாத், குருகீரத் சிங், மிலந்த் குமார், பிரயாஸ் பர்மன், ஷிவம் துபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய பலமே அதிரடி வீரர்கள் விராட் கோலி, டிவில்லியர்ஸ். ஆனால், இதற்கு வலு சேர்க்கும் வகையில், மே.இ.தீவுகள் வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் வந்துள்ளார்.
ஷிவம் துபே
வாஷிங்டன் சுந்தர்
டி கிராண்ட்ஹோம்
மார்கஸ் ஸ்டோனிஸ்
மொயின் அலி
யஜூவேந்திர சாவல்
டிம் சவுதி(வே)
அதிரடி தொடக்கம்
தொடக்க ஆட்டத்தில் பர்தீப் படேலுடன் இணைந்து களமிறங்க கிளாசன், ஹெட்மயர் இருக்கிறார்கள். இதில் கிளாசன், பர்தீப் படேல் இருவரும் விக்கெட் கீப்பர் என்பதால், இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். இதுதவிர தேவ்தத் படிகல், ஹிம்மத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களுக்கு தயாராக இருக்கிறார்கள்.
வலுவான நடுவரிசை
நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் வகையில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஷிவம் துபே, குர்கீரத் சிங், ஸ்டோனிஸ், மொயின் அலி, கிராண்ட் ஹோம்ஆகியோர் உள்ளார்கள்.
இதுதவிர ஆல்ரவுண்டர்கள் வரிசையில், வாஷிங்டன் சுந்தர், பவன்நெகி, மிலிந்த் குமார், பிரயாஸ் பர்மான், ஸ்டோனிஸ், மொயின் அலி, கிராண்ட் ஹோம் ஆகியோர் இருக்கின்றனர். விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பெற முடியும் என்பதால், பந்துவீச்சு, பேட்டிங்கில் எத்தனை பேர் இடம் பெறுவார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், நடுவரிசைக்கு வலுசேர்க்க ஆல்ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பது பெங்களூரு அணிக்கு பலமான அம்சாகும்.
பந்துவீச்சு பலம் சேர்க்குமா?
சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை யஜூவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், மொயின் அலி, பவன் நெகி ஆகியோர் இருக்கிறார்ள். இதில் மொயின் அலி, யஜூவேந்திர சாஹலுக்கு சர்வதேச அனுபவம் அதிகமாகும்.
வேகப்பந்துவீச்சில் உமேஷ் யாதவ், டிம் சவுதி, முகமது சிராஜ், நாதன் கோல்டர் நீல், குல்வந்த் கேஜ்ரோலியா, நவ்தீப் சைனி ஆகியோர் உள்ளனர். இதில் உமேஷ் யாதவின் பந்துவீச்சு எதிரணியை மிரட்டும் அளவுக்கு வலுவாக இருப்பது சந்தேகம்.
ஆனால், கடந்த சீசனில் அதிகமான விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். 14 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழத்தி முதல் 5 இடங்களில் உமேஷ் இடம் பெற்றிருந்தார். இந்த முறையும் அதே பந்துவீச்சு எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், சவுதி, கோல்டர் நீல் ஆகியோரின் பந்துவீச்சு நிச்சயம் எதிரணியை அச்சுறுத்தும். வேகப்பந்துவீச்சைப் பொருத்தவரை பெங்களூரு அணி சற்று பலவீனமாகவே அமைந்திருக்கிறது. ஆனால், பேட்டிங்கிலும், சுழற்பந்துவீச்சிலும் கடும் சவால் அளிக்கும்.
பலம்:
ஆர்சிபி அணியின் பலம் என எடுத்துக்கொண்டால் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ஹெட்மயர் பேட்டிங் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களின் பேட்டிங் எதிரணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வகையில் நடுவரிசையில் வீரர்கள் இருந்தபோதிலும் கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இந்த அணியின் முக்கிய வீரர் கெயிலை கழற்றிவிட்ட பின் ஆர்சிபி அணி சற்று பலம் இழந்ததுதான் காணப்படுகிறது.
பலவீனம்:
அணியில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் தவிர்த்து கடந்த சீசனில் மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பங்களிப்பு செய்யாதது மிகப்பெரிய பலவீனமாகும். வெற்றிகரமான பேட்ஸ்மேனாக இருக்கும் விராட் கோலி, வெற்றியான கேப்டனாக இந்த அணியில் வலம் வர முடியவில்லை. அதற்கு தகுந்த வீரர்களை அணியில் தேர்வு செய்யாமல் இருப்பதும், வீரர்கள் சரியாக விளையாடததும் காரணமாக கூறப்பட்டது. ஆனால், இந்த முறை பலபுதிய வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள் அவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்சம்
ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கடந்த 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும். மிகக்குறைவாக கடந்த 2017-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களில் சுருண்டது. இதுவரை 15 முறை 200 ரன்களுக்கு மேல் ஆர்சிபி அணி குவித்துள்ளது.
ஜொலிக்கும் கோலி
விராட் கோலி இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரத்து 948 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் இருந்து வருகிறார். அதிகபட்சமாக 2017-ம் ஆண்டில் 973 ரன்கள் குவித்தார். கடந்த சீசனில் 14 ஆட்டங்களில் 430 ரன்களை விராட் கோலி சேர்த்தார்.
மறக்கமுடியாத கெயில்
ஆர்சிபி அணி என்றாலே கெயில் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். நீண்டகாலமாக அணியில் இருந்து பல்வேறு குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர். கெயில் ஐபிஎல் போட்டியில் 292 சிக்ஸர்கள் இதுவரை அடித்துள்ள நிலையில், அதில் 239 சிக்ஸர்கள் ஆர்சிபி அணிக்காக மட்டுமே அடித்துள்ளார்.
கடந்த 2013-ம்ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக கெயில் அதிகபட்சமாக 175 ரன்கள் சேர்த்துள்ளார். அதிவேகமாக 30 பந்துகளில் சதம் அடித்த கெயில், இதில் 17 சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார்.
கெயில்(708)
வினய்குமார்(23)
வரும் 23-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னையில் நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி. இது கடும் சவாலா இருக்கும். அடுத்ததாக 28-ம் தேதி பெங்களூரில் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது பெங்களூரு அணி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago