ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள் நாட்டில் நடைபெற்ற இரு குறுகிய வடிவிலான தொடர்களை இந்திய அணி இழந்துள்ளது. முதலில் டி 20 தொடர், தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர். கடந்த 28 மாதங்களாக உள் நாட்டில் நடைபெற்ற தொடர்களில் கம்பீரமாக வலம் வந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு எச்சரிக்கை மணி அடித் துள்ளது ஆஸ்திரேலிய அணி.
உலகக் கோப்பை தொடர் தொடங்கு வதற்கு இன்னும் சுமார் 76 நாட்களே உள்ள நிலையில் வலுவில்லாத ஆஸ்திரேலிய அணிக்கு (ஸ்மித், வார்னர் இல்லாதது) எதிராக தொடரில் 2-0 என முன்னிலையில் இருந்த போதும் பரிசோதனை செய்கி றோம் என்ற பெயரில் தொடரை தாரைவார்த் துள்ளது இந்திய அணி. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்னர் ஏறக்குறைய உலகக் கோப்பை தொடரில் இடம் பெற உள்ள வீரர்களில் 12 முதல் 13 பேர் இறுதி செய்யப் பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
மீதமுள்ள 3 இடங்களை தேர்வு செய்வதற் கான களமாக ஆஸ்திரேலியத் தொடர் பார்க்கப்பட்டது. இதில் கே.எல்.ராகுல், விஜய் சங்கர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது திறன்கள் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியத் தொடரை இழந்த நிலையில் உலகக் கோப்பை அணிக்கான தேர்வு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
4-வது நிலையில் களமிறங்கக்கூடிய வீரர் யார்?, ஷிகர் தவண் நிலைத்தன்மையான பேட்டிங்கை வெளிப்படுத்தாவிட்டால், 3-வது தொடக்க வீரர் யார்?, 4-வது வேகப்பந்து வீச் சாளர் யார்?, 2-வது விக்கெட் கீப்பர் யார்?, சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஜடேஜா அணியின் தேவையை பூர்த்தி செய்தாரா?. இந்த 5 கேள்விகளுக்கும் ஆஸ்திரேலிய தொடரில் தெளிவான விடை கிடைக்க வில்லை. உலகக் கோப்பை தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட உள்ளது. இதன்படி இந்திய அணி 9 லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் குறைந்தது 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதியில் கால்பதிக்க முடியும். இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
வழக்கமாக உள்நாட்டு தொடராக இருந்தாலும், வெளிநாட்டு தொடராக இருந்தாலும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பெரிய அளவில் ரன்வேட்டை நிகழ்த்துவார்கள். ஆனால் இம்முறை விராட் கோலி இரு சதங்களுடன் 310 ரன்களும், ரோஹித் சர்மா இரு அரை சதங்களுடன் 202 ரன்களுமே சேர்த்தனர். பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையிலான பேட்டிங்கானது இவர்கள் இருவரிடமும் தொடர்ச்சியாக வெளிப்படவில்லை. அணியின் சரிவுக்கு இதுவே முதல் காரணம்.
அடுத்து ஷிகர் தவண், கேதார் ஜாதவ், விஜய் சங்கர் ஆகியோர் பகுதி அளவிலான பங்களிப்பை மட்டுமே வழங்கினர். ஷிகர் தவண் எப்போதுமே மோசமான பார்மில் இருக்கும் சமயங்களில் எல்லாம் திடீரென ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாடி அணியில் தனது இடத்தை வேரூன்றிக் கொள் வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். விஜய் சங்கர், ரிஷப் பந்த் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித் துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்வதில் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும். மொஹாலியில் விக்கெட் கீப்பிங்கின் போது ஒருசில ஸ்டெம்பிங் வாய்ப்புகளை ரிஷப் பந்த் தவறவிட்டார். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.
பேட்டிங்கிலும் ரிஷப் பந்த் பொறுமை யில்லாமல் அவசரகதியில் டி 20 போன்று விளையாடி விக்கெட்டை பறிகொடுக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் அவரின் செயல் பாடானது உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதில் பெரிய கேள்விக்குறியை எழுப்பியுள்ளது. இது ஒருபுறம் இருக்க போதிய வாய்ப்புகள் வழங்காமல் வெறும் 2 ஆட்டங்களை மட்டும் வைத்து அவரின் செயல்திறனை மதிப்பீடு செய்ய முடியுமா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
ஆல்ரவுண்டராக கருதப்படும் விஜய் சங்கர் ஓரளவுக்கு நன்றாக பேட் செய்தாலும் அவசரப்பட்டு அடிக்கும் ஷாட்களால் விக்கெட்டை பறிகொடுக்கிறார். மேலும் அவரது பந்து வீச்சு இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. நாக்பூர் ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கான பங்களிப்பை வழங்கிய விஜய் சங்கர், அதன் பின்னர் இரு ஆட்டங்களில் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. அதே வேளையில் கடைசி ஆட்டத்தில் அவருக்கு ஒரு ஓவர் கூட வழங்கப்படவில்லை.
4-வது இடத்தில் களமிறங்கும் வீரர் யார்? என்பதற்கு இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் அம்பதி ராயுடு சிறப்பாக விளையாடியதால் 4-வது இடத்துக்கான பிரச்சினையை தீர்க்கும் வீரராக இருப்பார் என கருதப் பட்டது. ஆனால் 33 வயதான அவர், தற் போதைய தொடரில் 3 ஆட்டங்களில் வெறும் 33 ரன்களே சேர்த்து அணியில் தனக் கான இடத்தை கேள்விக்குறியாக்கி உள்ளார். எனினும் 55 ஆட்டங்களில் 47.05 சராசரி வைத்துள்ள அம்பதி ராயுடு தனது இடத்தை எளிதில் இழந்துவிட வாய்ப்பில்லை.
கே.எல்.ராகுல் டி 20 தொடரின் வாயிலாக அணிக்குள் மீண்டும் வந்து தொடக்க வீரராக இரு ஆட்டங்களில் முறையே 50, 47 ரன்கள் சேர்த்து கவனத்தை ஈர்த்தார். ஆனால் ஒருநாள் போட்டித் தொடரில் அவருக்கு ஒரு ஆட்டத்தில் மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் விராட் கோலி தனது இடத்தை விட்டுக்கொடுத்த நிலையில் 3-வது வீரராக கே.எல்.ராகுல் களமிறங்கி 26 ரன்களே சேர்த்தார். இதனால் கே.எல்.ராகுல் தொடக்க பேட்டிங்குக்கு மட்டுமே சரிவரக்கூடும் என்ற நிலைமை உருவாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹலின் இடமும் கேள்விக்குறியாகும் நிலை உருவாகி உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடர்களை வென்றதில் சாஹல் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் தற்போதைய உள் நாட்டு தொடரில் அவரது பந்து வீச்சில் அதிக ரன்கள் விளாசப்பட்டது. டி 20 ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசிய அவர் 47 ரன்களை வழங்கினார். அதேவேளையில் மொஹாலி ஆட்டத்தில் 10 ஓவர்களை வீசி 80 ரன்களை தாரைவார்த்தார்.
மற்றொரு மணிக்கட்டு சுழற்பந்து வீச் சாளரான குல்தீப் யாதவ் ரன்களை விட்டுக் கொடுப்பதும் பலவீனமாக மாறி உள்ளது. எனினும் அவர், இக்கட்டான தருணங்களில் விக்கெட் வீழ்த்துகிறார். மேலும் விரல் ஸ்பின் னரான ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பை கட்டுப் படுத்துபவராகவும், பீல்டிங்கில் சிறந்த பங்களிப்பு செய்பவராகவும் உள்ளார். இத னால் அவர், சாஹலின் இடத்தை தட்டிப் பறிக்கக்கூடிய நிலை உள்ளது. இதுஒருபுறம் இருக்க ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும் பும் பட்சத்தில் ஜடேஜா, விஜய் சங்கர், கேதார் ஜாதவ் ஆகிய 3 பேரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. மேலும் மோசமான பேட்டிங்கால் ஆல் ரவுண்டர் தேவையை ஜடேஜா பூர்த்தி செய்ய தவறி உள்ளார். இதனால் எந்த நம்பிக்கை யில் உலகக் கோப்பைக்கான அணிக்கு அவரை தேர்வு செய்யப் போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, பிரதான வேகப் பந்துவீச்சாளர்களாக உள் ளனர். இவர்களுக்கு அடுத்து 4-வது வேகப் பந்து வீச்சாளர் என யாரையும் அடையாளம் காணவில்லை. இதுபோன்று பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது. எனினும் இவற்றுக்கெல்லாம் வரும் ஏப்ரல் மாதம் 20-ம் தேதி ஒரு தெளிவு கிடைக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இறுதி செய்வதற்கு அன்றுதான் கடைசி நாள்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago