ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் பங்கேற்றுள்ள 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி வண்ணமிகு வாணவேடிக்கை, கண்கவர் நடனங்களுடன் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நேற்று தொடங்கியது.
பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற தொடக்க விழாவில் தென் கொரிய பாப் பாடகர் பி.எஸ்.ஒய்.யின் “கங்னம் ஸ்டைல்” நடனம் பார்வையாளர்களை பரவசத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. ஒளி வெள்ளத்தில் நடைபெற்ற பல்வேறு நடன நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள், கொரியாவின் பாரம்பரியமிக்க டிரம்ஸ் இசை, குழந்தைகளின் நடனங்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
தென் கொரிய அதிபர் பார்க் ஜியூன்-ஹியே போட்டி தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பிறகு போட்டியில் பங்கேற்றுள்ள 45 நாடுகளைச் சேர்ந்த அணிகளும் தேசியக் கொடியை ஏந்தியபடி அணிவகுத்தன. ஹாக்கி கேப்டன் சர்தார் சிங் தலைமையில் இந்திய வீரர்கள் அணிவகுத்தனர். இந்திய வீரர்கள் கறுப்பு நிற “பிளேசரும்”, வீராங்கனைகள் ஊதா நிற சேலையும் அணிந்திருந்தனர்.
போட்டியின் ஜோதியை கொரிய நடிகர் லீ யாங்-யெ ஏற்றி வைத்தார். இந்தப் போட்டியில் மொத்தம் 13 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 36 வகையான விளையாட்டுகளில் 439 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
18 பதக்க போட்டிகள்
நீச்சல் (ஒருங்கிணைந்த நீச்சல், வாட்டர் போலோ), பாட்மிண்டன், கூடைப்பந்து, கிரிக்கெட், சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, கால்பந்து, ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, ரோவிங், செபக்தாக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், வாலிபால், பளுதூக்குதல், ஊஷூ ஆகிய போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
இதில் ஜூடோ, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றில் 4 பதக்க போட்டிகள், சைக்கிளிங், வாள்வீச்சு, பளுதூக்குதல், ஊஷூ ஆகியவற்றில் தலா 2 பதக்க போட்டிகள், ஒருங்கிணைந்த நீச்சல், குதிரையேற்றம் ஆகியவற்றில் தலா ஒரு பதக்க போட்டி என மொத்தம் 18 பதக்க போட்டிகள் நடைபெறுகின்றன.
பிரதமர் மோடி வாழ்த்து
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங் கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர் பாக டுவிட்டர் மூலம் அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்
பாட்மிண்டன்
மகளிர் அணி பிரிவு
காலிறுதிக்கு முந்தைய சுற்று
இந்தியா-மக்காவ்
ஆடவர் அணி பிரிவு
காலிறுதிக்கு முந்தைய சுற்று
இந்தியா-தென் கொரியா
குதிரையேற்றம்
டிரெஸ்ஸேஜ் அணி பிரிவு
(ராஜேந்திர சுபஸ்ரீ, நடியா ஹரிதாஸ், வனிதா மல்ஹோத்ரா, ஸ்ருதி வோரா).
ஜூடோ
ஆடவர் 60 கிலோ முதல் சுற்று
நவ்ஜோத் சானா (இந்தியா) - அப்தலா (குவைத்)
மகளிர் 48 கிலோ காலிறுதிக்கு முந்தைய சுற்று: சுஷீலா தேவி (இந்தியா) - குபீவா (உஸ்பெகிஸ்தான்)
மகளிர் 52 கிலோ காலிறுதிக்கு முந்தைய சுற்று: கல்பனா தேவி (இந்தியா) - தேவிகா (நேபாளம்)
ரோவிங்
லைட்வெயிட் ஆடவர் ஒற்றையர்
ஸ்கல்ஸ் தகுதிச்சுற்று: துஷியந்த் துஷ்யந்த்
துப்பாக்கி சுடுதல்
மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் தகுதிச்சுற்று: ஸ்வேதா சவுத்ரி, ஹீனா சித்து, மலாய்க்கா கோயல்.
மகளிர் 10 மீ. ஏர் பிஸ்டல் அணி பிரிவு இறுதிப் போட்டி: ஸ்வேதா சவுத்ரி, ஹீனா சித்து, மலாய்க்கா கோயல்.
ஆடவர் டிராப் தகுதிச்சுற்று: மான்ஷெர் சிங், கினான் செனாய், மானவ்ஜித் சிங்.
ஆடவர் 50 மீ. பிஸ்டல் தகுதிச்சுற்று ஓம் பிரகாஷ், ஜிது ராய், ஓம்கார் சிங்.
50 மீ. பிஸ்டல் அணி பிரிவு இறுதிப் போட்டி: ஓம் பிரகாஷ், ஜிது ராய், ஓம்கார் சிங்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago