சிஎஸ்கேயிடம் தோற்றதை மறக்க விரும்புகிறோம்: தோற்றாலும் மீசையில் மண் ஒட்டாமல் பேசிய கோலி

By க.போத்திராஜ்

12-வது ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காண வந்திருந்த ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது.

ஐபிஎல் தொடரில் இரு வல்லமை கொண்ட அணிகளான சிஎஸ்கே, ஆர்சிபி மோதும் போட்டி ரசிகர்களை இருக்கையின் நுனிவரைக்கும் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 70 ரன்களுக்கும் அதை சேஸிங் செய்ய புறப்பட்ட சிஎஸ்கே அணி தடுமாறி, திணறி 17 ஓவர்கள் வரை எடுத்துக்கொண்டதும் ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்குத் தள்ளியது.

ஆயிரக்கணக்கில் செலவு செய்து டிக்கெட் வாங்கி, ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து , ஆர்ப்பரிக்க வேண்டும் என்ற நினைப்பில் ரசிகர்கள் வந்தார்கள். அவர்களை திருப்திப்படுத்த கிரிக்கெட் போட்டி உச்சபட்சம் தரமுள்ளதாக இருத்தல் அவசியம். ஆனால், இரு அணிகளும் சேர்ந்து 150 ரன்கள் கூட எடுக்காமல் ஆட்டத்தை முடிப்பது ரசிகர்களை ஏமாற்றுவதற்குச் சமம்.

இதுபோல் செய்தமைக்கு இரு அணி வீரர்களையும் குறைகூற முடியாது. ஆடுகளத்தை வடிவமைத்தவர்கள்தான் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் பலரும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருபவர்கள் . அவர்கள் விரைவாக ஆட்டமிழந்து தனது அணியை தோல்விக்கு இட்டுச் செல்லவேண்டும் என நினைக்கப் போவதில்லை.

ஆனால், ரசிகர்களுக்கு விருந்தாக ஐபிஎல் போட்டி இருக்க வேண்டும் என்று நினைத்து நிர்வாகத்தினர் ஆடுகளத்தைத் தரமாக அமைத்திருக்கலாம். ஐபிஎல் போட்டி என்பதே பேட்ஸ்மேன்கள் ராஜ்ஜியம் நிறைந்ததாகவும், அவர்களுடன் போராடி பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், இதுபோன்று ஒருதரப்பாக இருப்பதை எந்த ஒருரசிகரும் விரும்பமாட்டார்கள்.

ஆடுகளம் தரமாக இருக்க வேண்டும் எனும் கருத்தைத்தான் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி அடைந்த தோல்வி வெட்கப்பட வேண்டியது. உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் கோலி என்பதால், அவரின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் வந்தபோது, களத்தில் சில ஓவர்கள்கூட நிற்காமல் ஆட்டமிழந்து செல்வது என்ன மனநிலையில் அவர் பேட் செய்யவந்தார் என்பதில் சந்தேகத்தை எழுப்புகிறது.

கோலி மட்டும் விரைவாக ஆட்டமிழந்தது மட்டுமல்லாமல், அணியில் உள்ள 10  பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ரசிகர்களைக் கோபப்படுத்தினார்கள். சேப்பாக்கத்தில் கூடிய ரசிகர்களில் தோனிக்கு இருக்கும் ரசிகர்களைப் போல், கோலிக்கும் இருந்தார்கள். அவர்களின் அங்கலாய்ப்பும், கோபமும் நேற்று மைதானத்தில் எதிரொலித்தவாறு இருந்தது.

ஆனால், இந்தத் தோல்வி குறித்து ரசிகர்களிடம் எந்தவிதமான வருத்தமும், வேதனையும் தெரிவிக்காமல், தோல்வியைச் சாதகமாக எடுத்துக் கொள்கிறோம். மறக்க விரும்புகிறோம் என்று கோலி கூறியிருப்பது மீசையில் மண் ஒட்டாமல் பேசுவது போன்று இருக்கிறது.

சர்வதேசப் போட்டிகளிலும்சரி, இதுபோன்ற உள்நாட்டு லீக் போட்டிகளிலும் சரி கோலி நிதர்சனத்தைப் பற்றி பேச வேண்டும். அதாவது, பேட்டிங் சரியில்லை, பந்துவீச்சு சரியில்லை, டாஸ் வெல்லாதது பிரச்சினை என்று நிதிர்சனமானம் களத்தில் அடைந்த தோல்விக்கான காரணங்களைக் கூற வேண்டும். அதைவிடுத்து தோல்வியைச் சாதகமாக எடுத்துக் கொள்கிறோம், மறக்க விரும்புகிறோம் எனக் கூறுவது நாடகத்தனமாக இருக்கிறது.

சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது எனத் தெரிந்துதான் சிஎஸ்கே கேப்டன் தோனி, 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினார். அப்படியிருக்கும் கோலி வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேரை களமிறங்கியது ஏன் எனத் தெரியவில்லை. அந்த முடிவும் சரியானதுதான் என்று கோலி கூறுவது ஏற்கும்வகையில் இல்லை.

தோல்வி குறித்து கோலி கூறுகையில், "சிஎஸ்கே அணியிடம் அடைந்த தோல்வியை நாங்கள் மறக்க விரும்புகிறோம். சாதமாக எடுத்துக்கொள்ள விரும்புகிறோம். தொடக்கத்திலேயே இதுபோன்ற மோசமான தோல்வியை அடைந்தது நல்லதுதான். இதன் மூலம் நாங்கள் விழித்துக்கொள்வோம். நாங்கள் பேட்டிங் மோசமாக செய்தாலும், இந்தப் போட்டியை நாங்கள் எங்களால் முடிந்தவரை கடினமாக 18-வது ஓவர்வரை  கொண்டு சென்றுதான் தோல்வி அடைந்தோம்.

இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய முடியாமல் சிரமப்பட்டோம், பேட்டிங்கும் செய்வதும் எளிதானது அல்ல. இன்னும் ஆடுகளம் சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கலாம். நாங்கள் 150 ரன்கள்வரை எடுப்போம் என்று நினைத்தோம் ஆனால் முடியவில்லை. ஒருவேளை 120 ரன்கள் சேர்த்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இன்று அணியில் இருந்தும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். குறிப்பாக நவ்தீப் சைனி நன்றாகப் பந்துவீசினார்'' எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்