6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இன்று (செப்டம்பர் 13) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் செப்டம்பர் 16-ம் தேதி வரை தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறு கின்றன. முதன்மை சுற்று செப்டம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. பெங்களூர், ஹைதராபாத், சண்டீகர், ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற வுள்ளன.
முதன்மை சுற்றில் 10 அணிகள் விளையாடுகின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இந்திய அணிகளில் ஐபிஎல் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2-வது இடம் பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், 3-வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் நேரடியாக முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 4-வது இடம் பிடித்த மும்பை இண்டியன்ஸ் தகுதிச் சுற்றில் விளையாடுகிறது. இதில் தகுதி பெற்றால் மட்டுமே முதன்மை சுற்றுக்கு முன்னேற முடியும். மும்பை இண்டியன்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் என்பது நினைவுகூரத்தக்கது.
தகுதிச் சுற்றில் 4 அணிகள் விளையாடுகின்றன. இதில் முதல் இரு இடங்கள் பிடிக்கும் அணிகள் முதன்மை சுற்றுக்கு முன்னேறும். முதன்மை சுற்றில் உள்ள 10 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு இடையே போட்டி நடைபெறும். இரு பிரிவுகளிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதி ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும்.
ராய்ப்பூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணியும் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியும் மோதுகின்றன. இதே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணி, பாகிஸ்தானை சேர்ந்த லாகூர் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மும்பை இண்டியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா காயம் காரணமாக வெளியேறிவிட்டதால், கிரண் போல்லார்ட் அணிக்கு தலைமை வகிக்கிறார். லாகூர் லயன்ஸ் அணிக்கு முகமது ஹபீஸ் கேப்டனாக இருக்கிறார். லாகூர் லயன்ஸ் அணி பாகிஸ்தானின் முதன்மையான 20 ஓவர் கிரிக்கெட் அணியாகும். இதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அனைவருமே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்தான். இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டி குறித்து எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவு எதிர்பார்ப்பு இப்போட்டி குறித்து தீவிர கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மும்பை இண்டியன்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்கள் இருந்தாலும் அது இந்திய அணியாகவே கருதப்படுகிறது.
லாகூர் லயன்ஸ் அணியில் உள்ள முகமது ஹபீஸ், அகமது ஷெசாத், வஹாப் ரியாஸ், உமர் குல், நசீர் சம்ஷெத் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள். எனவே இந்த ஆட்டம் மும்பை அணிக்கு சவால்மிக்கதாகவே இருக்கும்.
மும்பை அணியில் போல்லார்ட், மைக் ஹசி, கோரே ஆண்டர்சன், அம்பட்டி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் மலிங்கா, ஹர்பஜன் சிங், பிரவீண் குமார் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.
பங்கேற்கும் அணிகள்
ஏ பிரிவு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா)
டால்பின்ஸ் (தென்னாப்பிரிக்கா)
பெர்த் ஸ்கார்சர்ஸ் (ஆஸ்திரேலியா)
சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா)
தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணி
பி பிரிவு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இந்தியா)
பார்படாஸ் ட்ரிடென்ட் (மேற்கிந்தியத்தீவுகள்)
ஹோபர்ட் ஹரிகேன்ஸ் (ஆஸ்திரேலியா)
கேப் கோப்ராஸ் (தென்னாப்பிரிக்கா)
தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணி
தகுதிச் சுற்று அணிகள்
லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்)
மும்பை இண்டியன்ஸ் (இந்தியா)
நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் (நியூஸிலாந்து)
சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை)
இன்றைய ஆட்டங்கள்
நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் - சதர்ன் எக்ஸ்பிரஸ்
மாலை 4 மணி
மும்பை இண்டியன்ஸ் - லாகூர் லயன்ஸ்
இரவு 8 மணி
நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
6 days ago