ஐபிஎல் 2019: கலக்க வர்றாரு கப்பார்: பாண்டிங், கங்குலி ஆலோசனையில் மிரட்டும் டெல்லி கேபிடல்ஸ்: ஒரு பார்வை

By க.போத்திராஜ்

புதுப்பெயர், புதிய முகங்கள், புதிய ஆலோசகர், புதிய உடை என டெல்லி கேபிடல்ஸ் அணி 2019-ம் ஆண்டு 12-வது ஐபிஎல் போட்டியை எதிர்கொள்கிறது.

இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி என்று அழைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல் டெல்லி கேபிடல்ஸ் என்ற பெயரில் புதிய சீருடையில் விளையாட வருகிறது.

67 வெற்றிகள்

இதுவரை கடந்த 11 ஐபிஎல் தொடர்களில் முதல் இரு தொடர்களில் மட்டுமே அரையிறுதி வரை டெல்லி கேபிடல்ஸ் அணி முன்னேறியது. அதன்பின் டெல்லி கேபிடல்ஸ் அணியின் நிலை பரிதாபம். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 162 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 67 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக கவுதம் கம்பீர் 4,217 ரன்களும், அதிகபட்ச விக்கெட்டுகளாக அமித் மிஸ்ரா 146 விக்கெட்டுகளையும் வீழத்தியுள்ளார்.

சேவாக் முக்கியக் காரணம்

முதல் இரு சீசன்களில் அரையிறுதிவரை செல்வதற்கு முக்கியக் காரணம் அந்த இரு சீசன்களிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி, வீரேந்திர சேவாக் தலைமையில் விளையாடியது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். சேவாக்கின் அதிரடி, கம்பீரின் காட்டடி ஆகியவற்றுக்காக ரசிகர்கள் திரண்டனர்.

ஆனால், அடுத்து நடந்த 9 சீஸனிலும் கடைசி இடம் அல்லது அதற்கு முந்தைய இடத்தில்தான் டெல்லி அணி நிற்கும். ஆனாலும், டெல்லி ரசிகர்கள் மத்தியில் இந்த அணிக்கு ஈர்ப்பு குறையவில்லை. டெல்லி அணி விளையாடும் போட்டி என்றால், டிக்கெட் கிடைப்பது கடினமாக இருக்கும். இதுவரை 11 சீசன்களில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி ஒருமுறைகூட அரையிறுதியைத் தாண்டியது இல்லை.

புதிய குழுமம்

ஆனால், இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி  நிர்வாகம் ஜிஎம்ஆர் குழுமத்திடம் சென்றதால், 2019 ஐபிஎல் ஏலத்தில் ஏராளமான வீரர்களை விடுவித்து ஆல்ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களை விலைக்கு வாங்கியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களைப் பார்க்கும் போது மற்ற அணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில்தான் இருக்கிறார்கள்.

 

பேட்ஸ்மேன்விக்கெட் கீப்பர்ஆல்-ரவுண்டர்பந்துவீச்சாளர்கள்ஸ்ரேயாஸ் அய்யர்(கேப்டன்)ரிஷப் பந்த்அக்ஸர் படேல்காகிசோ ரபாடா(வே)ஷிகர் தவண்அங்குஷ் பெயின்ஸ்ஜலாஜ் சக்சேனாடிரன்ட் போல்ட்(வே)மன்ஜோத் கல்ரா கிறிஸ் மோரிஸ்இசாந்த் சர்மா(வே)ஹனுமா விஹாரி ஜெயந்த் யாதவ்ராகுல் திவேஷியாபிரித்வி ஷா கீமோ பால்சந்தீப் லாமிசானேகோலின் முன்ரோ ரூதர்போர்ட்ஆவேஷ் கான்(வே)கோலின் இன்கிராம்  

ஹர்ஷல் படேல்(வே)

பண்டாரு அய்யப்பா(வே)

அமித் மிஸ்ரா

நத்து சிங்(வே)

 

ஒன்றுக்கு மூன்று

இதில் குறிப்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் தங்களிடம் இருந்த விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷாபாஸ் நதீம் ஆகியோரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தி கப்பார்' என வர்ணிக்கப்படும் ஷிகர் தவணை வாங்கியுள்ளது.

இதேபோல கோலின் இங்ராம்(தெ.ஆப்ரிக்கா), அக்ஸர் படேல், ஹனுமா விஹாரி, ரூதர்போர்ட், இசாந்த் சர்மா, கீமோ பால், ஜலாஜ் சக்சேனா, அங்குஷ் பெய்ன்ஸ், நது சிங், பண்டாரு அய்யப்பா ஆகியோர் புதிதாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

தக்கவைப்பு

அதேசமயம், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், ஹர்ஸல் படேல், ராகுல் திவேஷியா, ஜெயந்த் யாதவ், மன்ஜோத் கல்ரா, கோலின் முன்ரோ, டிரன்ட் போல்ட், கிறிஸ் மோரிஸ், ரபாடா, சந்தீப் லாமிசானே ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர்.

மிரட்டல் கூட்டணி

சிறந்த தொடக்க ஆட்டக்காரர், அதிரடி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் ஷிகர் தவண் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக் கிடைத்துள்ளது அசுர பலமாகும். சர்வேதசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஷிகர் தவணின் அணிக்கு உதவும்.

ஷிகர் தவணுடன் ஆட்டத்தைத் தொடங்க இளம் வீரர் பிரித்வி ஷா தயார்படுத்தப்பட்டுள்ளார். ஆதலால், இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்கக் கூட்டணி பட்டையைக் கிளப்ப காத்திருக்கிறது. எதிரணியினர் சற்று உஷாராக பந்து வீசுவது அவசியம். இவர்கள் இருவரையும் தவிர்த்து தொடக்கக் கூட்டணிக்கு கோலின் முன்ரோ, அங்குஸ் பெயின்ஸ் கூட்டணி பேக்அப்பாக இருக்கிறார்கள்.

வலுவான நடுவரிசை

நடுவரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், கோலின் இங்ராம், ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி, மன்ஜோத் கல்ரா ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள். இதில் ஹனுமா விஹாரி, கல்ராவையும் மாற்று வீரர்களாகக் களமிறக்கினால்கூட வலுவான நடுவரிசையைப் பெற முடியும்.

ஆல் ரவுண்டர்கள் அதிகம்

ஆல்ரவுண்டர்களைப் பொறுத்தவரை, பேட்டிங் ஆல்ரவுண்டர்களில் மே.இ.தீவுகள் வீரர் ரூதர்போர்ட், பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களில் அக்ஸர் படேல், கிறிஸ் மோரிஸ் ஆகிய 3 பேரில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இவர்கள் தவிர்த்து கீமோ பால், ஜெயந்த் யாதவ், ஜலாஜ் சக்சேனாவும் இருக்கின்றனர்.

ஆனால், முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, மேக்ஸ்வெல் ஆகியோரை ஏலத்தில் ஏன் டெல்லி கேபிடல்ஸ் அணி விலக்கியது எனத் தெரியவில்லை. ஆனால், புது ரத்தம் பாய்ச்சியதைப் போல் இளம் வீரர்களை அதிகம் கொண்டதாக இருக்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.

'தாதா' வருகை

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கடந்த 2012ம் ஆண்டு முதல் பயிற்சியாளராக ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் செயல்படுகிறார். ஆனால், லீக் சுற்றை அணி தாண்டமுடியவில்லை. ஆனால், இந்த முறை 'வங்கப்புலி, தாதா' சவுரவ் கங்குலி அணிக்கு ஆலோசகராகச் சென்றுள்ளது அந்த அணிக்கு மேலும் வலு சேர்க்கும். அணியின் செயல்பாட்டில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.

ஸ்ரேயாஸ் தலைமை

rishabjpg100 

கடந்த சீசனில் கம்பீர் தலைமையில் அணி சிறப்பாகச் செயல்படாதைத் தொடர்ந்து, கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்று அணியைச் சிறப்பாக வழிநடத்தினார். ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் சிஎஸ்கே அணியை கடைசி லீக்கில் வென்று அதிர்ச்சி அளித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமைப் பொறுப்பும் ஏற்று, அதிக ரன்களையும் குவித்தார். ஆதலால், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்த முறையும் டெல்லி அணி சிறப்பாகச் செயல்படும் என நம்பலாம்.

நியூஸிலாந்து வீரர் காலின் முன்ரோ அருமையான ஃபார்மில் இருக்கிறார், இந்த சீசனில் நிச்சயம் ஆரஞ்சு தொப்பியை வெல்வார் என்று எதிர்பார்க்கலாம்.

வேகப்பந்துவீச்சு பலம்

ishanthJPGஇசாந்த்ச ர்மா: படம் உதவி ட்விட்டர்50 

பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க பவுன்ஸர் மன்னன் காகிசோ ரபாடா, இசாந்த் சர்மா, நியூஸி. வீரர் டிரன்ட் போல்ட், ஆவேஷ் கான், மே.இ.தீவுகள் வீரர் ஷெர்பானே ரூதர்போர்ட், கீமோ பால், பண்டாரப்பா, ஹர்சல் படேல் என வேகப்பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பட்டாளமே இருக்கிறது. ஆதலால் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இந்தமுறை சிறந்த, துல்லியமான,நெருக்கடி அளிக்கும் வேகப்பந்துவீச்சை எதிரணியினர் எதிர்நோக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

அதோபோல சுழற்பந்துவீச்சில் அக்சர் படேல், சந்தீப் லாமிசானே, அமித் மிஸ்ரா, ராகுல் திவேஷியா ஆகியோர் இருப்பதும் பலமாகும்.

கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை டெல்லி அணியில் அதிக ரன் அடித்த, விக்கெட் எடுத்த வீரர்கள் குறித்த விவரம் வருமாறு:

 

ஆண்டுகேப்டன்பேட்ஸ்மேன்பந்துவீச்சாளர்வெற்றி சதவீதம்2008சேவாக்கம்பீர்(534ரன்)யோ மகேஷ்(16விக்)502009கம்பீர்டிவில்லியர்ஸ்(465)ஏ.நெஹ்ரா(19)712010தினேஷ் கார்த்திக்சேவாக்(356)ஏ.மிஸ்ரா(17)502011ஜேம்ஸ் ஹோப்ஸ்சேவாக்(424)மோர்கல்(13)282012ஜெயவர்தனாசேவாக்(495)எம்.மோர்கல்(25)682013ராஸ் டெய்லர்வார்னர்(410)உமேஷ்(16)182014டேவிட் வார்னர்டுமினி(410)இம்ரான் தாஹிர்(9)142015கெவின் பீட்டர்ஸன்டுமினி(414)தாஹிர்(15)352016டுமினிடீ காக்(454)மோரிஸ்(13)502017ஜாகீர்கான்சஞ்சு சாம்ஸன்(386)கம்மின்ஸ்(15)422018ஸ்ரேயாஸ் அய்யர்ரிஷப்பந்த்(684)டி.போல்ட்(18)35

 

ஒட்டுமொத்தத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் திறமையான வீரர்கள் இந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக் கிடைத்துள்ளனர். இவர்களோடு ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி, கங்குலி அனுபவ ஆலோசனைகள் நிச்சயம் ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும்.

வரும் 24-ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. 26-ம் தேதி டெல்லியில் நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்