டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆனால் 1 ரன் கூட எடுக்காமல் 0-வில் ஆட்டமிழந்த சில வீரர்கள் இருக்கிறார்கள்.
டெஸ்ட் போட்டியில் அத்தகைய விசித்திர சாதனைகள் செய்த வீரர்கள்:
1 ரன் கூட எடுக்காமல் அதிக பந்துகளை விளையாடி கடைசியில் டக் அவுட் ஆனவர்களில் முதலிடத்தில் இருப்பவர். நியூசி. வீரர் ஜெஃப் ஆலட். இவர் 1999ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 77 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபமாக இலங்கைக்கு எதிராக 2014ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 55 பந்துகள் விளையாடி டக் அவுட் ஆனார்.
அட! இந்தியாவுக்கு எதிராகவும் ஒரு வீரர் 52 பந்துகள் விளையாடி ரன் எடுக்காமல் அவுட் ஆகியிருக்கிறார்! 1984ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ரிச்சர்ட் எல்லிசன் என்ற ஆல்ரவுண்டரே அவர்.
நியூசி. அணியின் பீட்டர் சச்: 51 பந்துகள்.. ரன் இல்லை. அவுட். -இங்கிலாந்துக்கு எதிராக.
ஆஸ்திரேலிய வீரர் மைக் விட்னி: 1981ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 42 பந்துகளில் ரன் எடுக்காமல் அவுட் ஆனார்.
ஷோயப் அக்தர்: 2000ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 42 பந்துகளைச் சந்தித்து 1 ரன் எடுக்க முடியாமல் ஏமாற்றம் அளித்தார்.
வ.தேச வீரர் மஞ்சுரல் இஸ்லாம்: இலங்கைக்கு எதிராக 2002-ல், 41 பந்துகள் ஆடி பயனில்லை.
மேற்கிந்திய வீரர் கீத் ஆர்தர்டன்: இங்கிலாந்துக்கு எதிராக 1995ஆம் ஆண்டு 40 பந்துகளைச் சந்தித்து 0-வில் அவுட் ஆகி வெளியேறினார்.
நியூசி. வீரர் டேரின் முர்ரே: 1995ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 39 பந்துகள் ஆடி ரன் எடுக்க முடியவில்லை. ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ராகுல் திராவிட் . 2007-08 டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்னில் முதல் ரன்னை 41 பந்துகளில் எடுத்தார். அப்போது, ஆஸ்திரேலிய ரசிகர்களின் கேலிக்கூச்சல் மைதானத்தைக் கலக்கியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago