இந்திய பந்துவீச்சை நொறுக்கிய நியூசிலாந்து: 213 ரன்கள் இலக்கு

By க.போத்திராஜ்

பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான ஆடுகளத்தில் இந்தியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய நியூசிலாந்து அணி 213 ரன்களை வெற்றி இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயித்தது.

இந்த டி20 தொடரில் 2-வது முறையாக 200 ரன்களை அடித்துள்ளது நியூசிலாந்து அணி.

நியூசி அணி வீரர் கோலின் முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து ரன் குவிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். மேலும், ஷீபர்ட் (43), கிராண்ட்ஹோம் (30) ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கும் வலு சேர்த்தது.

இந்திய அணியின் பந்துவீச்சை தொடக்கத்தில் இருந்தே துவம்சம் செய்துவிட்டனர் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள். இந்தியப் பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் (2/26) தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ஒருவரும் ரன்னைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்து வீசவில்லை.

குர்னால் பாண்டியா பந்துவீச்சை அடித்து, நொறுக்கிய நிலையில் பந்துவீச்சை மாற்றி, விஜய் சங்கருக்குக் கொடுத்திருக்கலாம். அணியில் ஆல்ரவுண்டர் என்ற பெயரில் விஜய் சங்கரை வைத்துக்கொண்டு அவருக்குப் பந்துவீச வாய்ப்பளிக்காமல் இருப்பது எந்தவிதத்தில் நியாயம்?

ஹர்திக் பாண்டியா 44 ரன்களும், குர்னல் பாண்டியா 54 ரன்களும் இந்தப் போட்டியில் விட்டுக்கொடுத்தனர். ஒட்டுமொத்தமாக 3 டி20 போட்டிகளில் குர்னல் பாண்டியா 119 ரன்களும், ஹர்திக் 131 ரன்களும் வாரி வழங்கியுள்ளார்கள்.

3-வது மற்றும் கடைசிப் போட்டி இன்று ஹேமில்டனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. யஜுவேந்திர சாஹலுக்குப் பதிலாக, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வகையில் மாற்றம் ஏதும் இல்லை. நியூசிலாந்து அணியில் பெர்குஷனுக்குப் பதிலாக பிளேர் டிக்னர் அறிமுகமானார்.

டிம் ஷீபெர்ட், கோலின் முன்ரோ இருவரும் முதல் விக்கெட்டுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இந்தியப் பந்துவீச்சை தொடக்கத்தில் இருவரும் வெளுத்துக்கட்டினார்கள். கலீல் அகமது, புவனேஷ் குமார் ஓவர்களில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தன.

ஷீபெர்ட் 11 ரன்கள் சேர்த்திருந்தபோது ஒரு கேட்ச் வாய்ப்பை விஜய் சங்கர் தவறவிட்டார். அது மிகவும் கடினமானது என்றாலும் பிடித்திருந்தால், ஆட்டம் மாறியிருக்கும். இருவரின் அதிரடியால் 5.2 ஓவர்களில் நியூசிலாந்து 50 ரன்களை எட்டியது. முதல் 7 ஓவர்களில் 79 ரன்கள் சேர்த்தது.

ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த குல்தீப் யாதவ் வரவழைக்கப்பட்டார். அவரின் வருகைக்கு பலன் கிடைத்தது. 43 ரன்களில் ஷீபெர்ட் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். இதில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து கேப்டன் வில்லியம்ஸன் களமிறங்கி முன்ரோவுடன் சேர்ந்தார். வில்லியம்ஸன் நிதானம் காட்ட முன்ரோ காட்டடியில் இறங்கினார். 28 பந்துகளில் அரை சதத்தை முன்ரோ எட்டினார். 11-வது ஓவரில் நியூசிலாந்து அணி 100 ரன்களை எட்டியது.

முன்ரோ 72 (40 பந்துகள்) ரன்கள் சேர்த்திருந்த போது, குல்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும். கிராண்ட்ஹோம் களமிறங்கினார்.

அடுத்த சிறிதுநேரத்தில் வில்லியம்ஸன் 27 ரன்கள் சேர்த்த நிலையில் கலீல் அகமது பந்துவீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கிராண்ட் ஹோம், மிட்ஷெல் களத்தில் இருந்தனர். அதிரடியாக ஆடிய கிராண்ட் ஹோம், பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விரட்டினார். நீண்டநேரம் நிலைக்காத கிராண்ட்ஹோம் 30 ரன்கள்(16 பந்துகள்) சேர்த்து வெளியேறினார்.

மிட்ஷெல் 19 ரன்களிலும், ராஸ் டெய்லர் 14 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது.

இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ், கலீல் அகமது தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்