பில்பாவ் பைனல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தனது 2-வது சுற்றில் வெற்றி கண்டுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்துள்ள அவர் 6 புள்ளிகளுடன் தொடர்ந்து தனி முன்னிலையில் உள்ளார்.
ஸ்பெயினின் பில்பாவ் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆனந்த் தனது 2-வது சுற்றில் ஸ்பெயினின் வெலஜோ பொன்ஸை தோற்கடித்தார். ஆனந்த் தனது 3-வது சுற்றில் ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியனை சந்திக்கிறார்.
ஆரோனியன் தனது 2-வது சுற்றில் உக்ரைனின் ருஸ்லான் போனோமரியோவை தோற்கடித்தார். 4 பேர் பங்கேற்றுள்ள இரு ரவுண்டு ராபின் சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இன்னும் 4 சுற்று ஆட்டங்கள் மீதமுள்ளன. தற்போதைய நிலையில் ஆனந்துக்கு அடுத்தபடியாக ஆரோனியன் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெலஜோ பொன்ஸ் ஒரு புள்ளியுடன் 3-வது இடத்திலும், ருஸ்லான் புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திலும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
56 mins ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago