ரோஹித் சதமடித்து சாதனை ; 13 மாதங்களுக்குப்பின் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார் தோனி

By க.போத்திராஜ்

சிட்னியில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 13 மாதங்களுக்குப் பின் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டெடுத்த ரோஹித் சர்மா, அபாரமாக பேட் செய்து சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது 22-வது சதத்தை 110 பந்துகளில் நிறைவு செய்தார்.  இதில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவில் 5 சதங்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ரோஹித்  சர்மா என்ற பெருமையையும் பெற்றார். மேலும், தொடர்ந்து 4 முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ரன்களுக்கு மேல் ரோஹித் சர்மா சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியின் வழக்கமான ஆட்டத்தைப் பார்க்க மாட்டோமோ என்று ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பின் விருந்தாக அமைந்தது.

தோனி 96 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். மிகவும் மந்தமாக பேட்டிங்கை தொடங்கிய தோனி ரன் சேர்க்க மிகவும் சிரமப்பட்டார். பெஹரன்டார்ப், ரிச்சர்ட்ஸன் ஓவர்களில் பந்துகளைக் கணித்து ஆடுவதிலும் தோனியின் வழக்கமான பேட்டிங் மிஸ் ஆனது. நீண்ட நாட்களுக்குப் பின் தோனி, நீண்ட நேரம் களத்தில் நின்றிருந்ததை ரசிகர்கள் பார்த்தபோதிலும், வழக்கமான அவரின் ஆக்ரோஷமான ஷாட்கள், ஹெலிகாப்டர் ஷாட்கள், ஸ்டிரைட் டிரைவ் போன்றவற்றைக் காணமுடியவில்லை.

289 ரன்களைத் துரத்திய இந்திய அணிக்கு தொடக்கத்தில் இருந்தே அதிர்ச்சி காத்திருந்தது. தவண், கோலி, ராயுடு என வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், ரோஹித் சர்மா, தோனி அணியை காக்க வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பல்வேறு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பி வந்த தோனி இந்த போட்டியிலும் காலைவாரிவிடுவாரா என்று ரசிகர்கள் ஒருபுறம் புலம்பினாலும், மற்றொருபக்கம் அவர் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் கைவிடவில்லை. அணியின் சூழலை உணர்ந்த தோனி மெதுவாகவே தனது பேட்டிங்கை கையாண்டார்.

தனது முதல் ரன்னை எடுத்தபோதே அது சாதனையாக அமைந்தது. சர்வதேச ஒருநாள் அரங்கில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 5-வது இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். உலக அளவில் 13-வது பேட்ஸ்மேன் என்ற முத்திரையையும் பெற்றார். களத்தில் நின்று, நிலைபெற்று தனது முதல் பவுண்டரியை 17 ஓவர்களுக்குப் பின் தோனி அடித்தார்.

4-வது ஓவரிலேயே களத்தில் இறங்கிய தோனி, தனது முதல் பவுண்டரியை 21-வது ஓவரில் அடித்தார். அதுமட்டுமல்லாமல் கடந்த 2001-ம் ஆண்டுக்குப் பின் இந்திய அணி 20 ஓவர்கள் வரை ஒரு பவுண்டரிகூட எடுக்காமல் இருப்பது இதுதான் முதல் முறையாகும். 18 ஆண்டுகளுக்குப்பின் இந்த மோசமான நிலையை இந்திய அணி சந்தித்துள்ளது.

4-வது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா, தோனி கூட்டணி, 137 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. பெஹரன்டார்ப் பந்துவீச்சில் தொடக்கத்தில் இருந்தே திணறிய தோனி, எல்பிடபிள்பு முறையில் ஆட்டமிழந்தார்.

தோனி, கடைசியாக டிசம்பர் 10, 2017-ல் தரம்சலாவில், இலங்கைக்கு எதிராக அரைசதம் அடித்து 65 ரன்கள் சேர்த்தார். அதன்பின் 23 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் இப்போதுதான் அரைசதம் அடித்துள்ளார். இந்த 23 போட்டிகளில் 8 போட்டிகளில் தோனி களமிறங்கவில்லை.

கடைசியாகச் சதம் கண்டது 2017-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் நடந்த போட்டியாகும். இந்த போட்டிக்குப் பின் இதுவரை தோனி ஒருநாள் போட்டியில் சதம் அடிக்கவில்லை. ஏறக்குறைய தோனி சதம் அடித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியிலி் தோனி 134 ரன்கள், யுவராஜ் சிங்கும் (150) இவரும் வெளுத்துக் கட்டிய போட்டியில் இந்திய 381 ரன்கள் எடுத்து 15 ரன்களில் வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்