மவுண்ட் மாங்கவ்னியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான முறையில் வீழ்த்திய நியூசிலாந்து ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இன்னும் ஒரு போட்டி உள்ளது.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட் செய்து கொலின் மன்ரோ (87), ராஸ் டெய்லர் (90), நீஷம் (64) ஆகியோரது அரைசதங்களினால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 112/2 என்ற வலுவான நிலையிலிருந்து 27வது ஒவரில் 128/7 என்று சரிந்தது, ஆனால் திசர பெரேரா தன் வாழ்நாளின் ருத்ரதாண்டவ ஒருநாள் இன்னிங்ஸை ஆடினார். இதில் அவர் 57 பந்துகளில் சதம் எடுத்து பிறகு 74 பந்துகளில் 8 பவுண்டரிகள் 13 சிக்சர்களுடன் 140 ரன்களை வெளுத்துக் கட்டி கடைசிவ் இக்கெட்டாக ஹென்றி பந்து வீச்சில் போல்ட்டின் அதியற்புத கேட்சுக்கு வெளியேற இலங்கை அணி 46.2 ஓவர்களில் 298 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தொடரை இழந்தது.
நியூஸிலாந்துக்கு எதிராக அதிவேக 57 பந்து சதம் எடுத்து சாதனை புரிந்த திசர பெரேரா, 13 சிக்சர்களை அடித்து ஜெயசூரியாவின் 11 சிக்சர்கள் சாதனையை முறியடித்து புதிய இலங்கை ஒருநாள் சாதனை படைத்தார். முதல் இன்னிங்ஸில் அன்று 5 சிக்சர்களை ஒரே ஓவரில் விளாசிய ஜெம்ஸ் நீஷம் இன்றும் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 64 விளாச, பிற்பாதியில் திசர பெரேராவின் திகைக்கவைக்கும் அதிரடி கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது. சிக்சர்கள் மழை மவுண்ட் மாங்குனியை நனைத்தன.
நியூஸிலாந்து அணியின் பீல்டிங் படுமோசமாக அமைந்தது 5 கேட்ச்கள் தரையில் நழுவ விடப்பட்டன. திசர பெரேராவுக்குக் கேன் வில்லியம்சன் எளிதான கேட்சை விட்டார்.
மிடில் ஓவரில் இலங்கை அணி 16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. மெண்டிஸ், குனதிலக, சந்திமால், குணரத்னே, பிரசன்னா ஆகியோர் சோதி, ஹென்றி ஆகியோரிடம் வெளியேற இலங்கை அணி 112/2 என்ற நிலையிலிருந்து 128/7 என்று ஆனது. முதலில் குசல் மெண்டிஸ் 30 பந்தில் 20 ரன் எடுத்து சோதியை ஸ்வீப் செய்யும் முயற்சியில் விக்கெட் கீப்பரின் அதீத முயற்சி கேட்சுக்கு வெளியேறினார். அடுத்த ஓவரில் ஜேம்ஸ் நீஷம், குணதிலகவை வெளியேற்றினார். சந்திமால் கூக்ளியில் சோதியிடம் ஆட்டமிழந்தார். அசேலா குணரத்னே ரன் அவுட் ஆனார். செகூகே பிரசன்னாவும் சோதியின் கூக்ளிக்கு இரையானார்.
திசர பெரேரா பேட்டிங்கில் பலத்த முன்னேற்றம் காணப்பட்டது, சிலபல பவுண்டரிகளுக்குப் பிறகு டிம் சவுதியை லெக் திசையில் ஒரு சிக்ஸ் அடித்தார், இது முதல் சிக்ஸ். சோதியையும் விட்டு வைக்காமல் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி விளாசினார். லஷித் மலிங்கா 17 ரன்களில் அவுட் ஆனார், இவருக்கும் 2 கேட்ச்களை நியூஸிலாந்து விட்டது. ஆனால் மலிங்கா, பெரேரா கூட்டணி 50 பந்துகளில் 75 ரன்களையும் பிறகு சண்டகனுடன் இணைந்து 51 ரன்கள் சேர்த்தார் பெரேரா, இதில் சண்டகன் பங்களிப்பு 6 ரன்களே.
தன் பந்து வீச்சில் முதல் ஒருநாள் போட்டியில் நீஷம் 5 சிக்சர்களை ஒரே ஒவரில் அடித்ததையும், இன்றும் நீஷம் தன்னை வெளுத்ததையும் மனதில் கொண்ட பெரேரா, நீஷமை இரண்டு பெரிய சிக்சர்களுக்குத் தூக்கினார். வெற்றிக்கான ரன் விகிதம் 5 ஓவர்களில் 50 ஆக இருந்தது, அப்போது டிம் சவுதியை 4 அரக்க சிக்சர்கள் அடித்தார் பெரேரா இது இலங்கையை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தது, 57 பந்துகளில் சதம் கண்ட பெரேரா முழுதும் நியூஸி. பவுலிங்கை காய்ச்சி எடுக்கத் தொடங்கினார்.
57 பந்துகளில் சதம் கண்ட அவர் அடுத்த 17 பந்துகளில் சிக்சர்கள் மழையில் 40 ரன்கள் எடுத்தார். ஆனால் ஹென்றி பந்து ஒன்று அடிக்க வேண்டிய லெந்தில் விழுந்தாலும் பெரேரா லாங் ஆனில் ட்ரெண்ட் போல்ட்டின் அதியற்புத கேட்சுக்கு அவுட் ஆக நியூஸிலாந்து அணி ஒரு அரிய மகா விரட்டல் வெற்றியை இழந்தது.
இன்னும் 3.4 ஒவர்கள் இருந்தும் வெற்றிக்குத் தேவை 21 ரன்கள் என்ற நிலையில் கைக்கு வந்த கரும்பு நியூஸிலாந்தினால் தட்டிப் பறிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் சோதி 3 விக்கெட்டுகளை வீழ்த்த நீஷம், ஹென்றி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முன்னதாக நியூஸிலாந்து அணி மார்டின் கப்திலை 13 ரன்களிலும் வில்லியம்சனை 1 ரன்னிலும் முறையே மலிங்கா, நுவான் பிரதீப்பிடம் இழந்தது. ராஸ் டெய்லர் (90), மன்ரோ (87) இணைந்து ஸ்கோரை 151 ரன்களுக்குக் கொண்டு சென்றனர் அப்போது 26வது ஓவரில் மன்ரோ 87 ரன்களில் ரன் அவுட் ஆனார். மார்க் நிகோல்ஸ் (32), டெய்லர் ஸ்கோரை 208க்கு கொண்டு சென்றனர். நிகோல்ஸ் மலிங்காவிடம் வீழ்ந்தார். டெய்லர் ஆட்டமிழக்கும் போது 45வது ஓவரில் ஸ்கோர் 262/5 என்று இருந்தது, அதன் பிறகு ஜேம்ஸ் நீஷம் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 64 விளாச விக்கெட் கீப்பர் செய்ஃபர்ட் 17 பந்துகளில் 22 ரன்கள் எடுக்க ஸ்கோர் 319/7 என்ற நிலையை எட்டியது. நியூசிலாந்தில் மொத்தம் 4 பேர் ரன் அவுட். மலிங்கா 2 விக்கெட், பிரதீப் 1 விக்கெட். தொடரை இழந்த இலங்கை அணிக்கு ஒரே ஆறுதல் திசர பெரேராவின் அபாரமான அதிரடிக்கு அவருக்கு கிடைத்த ஆட்ட நாயகன் விருதே ஆறுதல்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago