2009-ம் ஆண்டு வரலாறு மீண்டும் திரும்புமா?- நியூசிலாந்தில் இந்தியா ஒரு பார்வை

By க.போத்திராஜ்

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி நியூசிலாந்திலும் தனது முத்திரையைப் பதிக்குமா, 2009-ம் ஆண்டு வரலாற்று வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் முதல் முறையாகக் கடந்த 70 ஆண்டுகளில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது இந்திய அணி.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்துக்குச் சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

ஒருநாள் தொடர் வரும் 23-ம் தேதி தேப்பியிரிலும், டி20 தொடர் பிப்ரவரி 6-ம் தேதி வெலிங்டனிலும் தொடங்குகிறது. வலிமையான இந்திய அணி என்று உலக அளவில் புகழப்படும் அதேவேளையில், இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளிக்கும் வகையில்தான் நியூசிலாந்து அணியும் இருக்கிறது.

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இலங்கையை உருட்டி எடுத்தது. நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இருப்பதால், இந்தியப் பந்துவீச்சாளர்களின் பலம், பலவீனம் நன்கறிவார்கள். ஆதலால், குறைத்து மதிப்பிடாமல், இந்திய அணி அங்கு விளையாடுவது சிறப்பாகும்.

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு 2009-ம் ஆண்டு மட்டுமே மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில்தான் ஒருநாள் தொடரை வென்றது. அதன்பின் பல தொடர்களில் தோல்வியுடனும், தொடரைச் சமன் செய்தும் திரும்பியுள்ளது.

நியூசிலாந்தில் இதுவரை 7 ஒருநாள் தொடர்களில் பங்கேற்றுள்ள இந்திய அணி 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 9 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது, 18 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி சமனிலும், 2 போட்டிகள் முடிவு இல்லாமலும் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் அங்கு சென்று இந்திய அணி விளையாடவில்லை.

இந்த 30 போட்டிகளை 7 தொடர்களாகப் பிரித்து இந்திய அணி விளையாடியுள்ளது. இதில் 4 தொடர்களை இந்திய அணி இழந்துள்ளது. ஒரு தொடரில் வெற்றியும், 2 தொடர்கள் சமனிலும் முடிந்துள்ளன.

1976- முதல் தொடர்

VENGSARKARjpgதிலிப் வெங்சர்க்கர்100 

கடந்த 1976-ம் ஆண்டு முதல் முறையாக நியூசிலாந்துக்கு இந்திய அணி பயணித்தது. 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட அந்தத் தொடரை 2-0 என்று இந்திய அணி இழந்தது. முதல் போட்டியில் 9 விக்கெட்டிலும், 2-வது ஆட்டத்தில் 80 ரன்களிலும் தோல்வி அடைந்தது. திலிப் வெங்சர்கார், சயத் கிர்மானி, பகவத் சந்திரசேகர் ஆகியோர் இந்தத் தொடரில்தான் அறிமுகமானார்கள்.

1981- 2-வது தொடர்

கடந்த 1981-ம் ஆண்டு 2-வது முறையாகப் பயணித்த இந்திய அணி அப்போதும் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. முதல் ஆட்டத்தில் 78 ரன்களிலும், 2-வது ஆட்டத்தில் 57 ரன்களிலும் தோல்வி அடைந்தது.

1994- 3-வது தொடர்

13 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி பயணிக்காமல் 1994-ம் ஆண்டு சென்றது. வலிமையான அணியாகச் சென்று 2-2 என்று தொடரைச் சமன் செய்து திரும்பியது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 28 ரன்களில் வென்றது. ஆக்லாந்தில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 49 பந்துகளில் 82 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருது வென்றார். மிகமோசமான, கடினமாக இருக்கும் ஈடன் பார்க் ஆடுகளத்தில் சச்சின் டெண்டுல்கர் நியூசிலாந்தைப் பொளந்து கட்டினார். நியூசிலாந்து 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜவகல் ஸ்ரீநாத், சலில் அங்கோலா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ராஜேஷ் சவுகான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

வெலிங்டனில் நடந்த 3-வது போட்டியில் இந்திய அணி வென்றது. இந்திய அணி 5 விக்கெட்டுகளுக்கு 255 ரன்கள் சேர்க்க, அனில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, நியூசிலாந்தை 243 ரன்களில் சுருட்டி வென்றது. 4-வது போட்டியில் கிறிஸ்ட் சர்ச்சில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

1999-4-வது தொடர்

rahul-dravdijpgராகுல் திராவிட்100 

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரும் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 3-வது போட்டியில் முடிவு ஏதும் கிடைக்கவில்லை. இந்தத் தொடரில் ராகுல் திராவிட் 309 ரன்கள் குவித்து தொடர் நாயகனாக ஜொலித்தார். ஸ்ரீநாத் அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2002- 5-வது தொடர்

7 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி படுமோசமாக தோல்வி அடைந்தது. 5-2 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் தொடரை இழந்தது. பெரும்பாலான போட்டிகளில் 108, 108, 122, 122 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தத் தொடரில் பர்தீப் படேல் அறிமுகமானார்.

இந்தத் தொடரில் விளாசிய வீரேந்திர சேவாக் 7 போட்டிகளில் 299 ரன்கள் குவித்தார். ஸ்ரீநாத் 7 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2009-6-வது தொடர்

sewagjpgசேவாக்100 

2009-ம் ஆண்டு தொடர் இந்திய அணிக்கு மறக்க முடியாததாக அமைந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று முதல் முறையாக தொடரைக் கைப்பற்றியது.

முதல் போட்டியில் இந்திய அணி 53 ரன்களில் டக்வொர்த் விதிப்படி வென்றது. 3-வது போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்திலும், 4-வது போட்டியில் 84 ரன்களில் டக்வொர்த் விதிப்படியும் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது. கடைசிப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.

இந்தத் தொடரிலும் தனது அதிரடியாக சேவாக் ஜொலித்தார். சேவாக் 299 ரன்களும், சச்சின் 244 ரன்களும் சேர்த்தனர். ஹர்பஜன் சிங் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங், பிரவின் குமார், ஜாகீர் கான் தலா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

2014- 7-வது தொடர்

jadegajpgஜடேஜா100 

2014-ம் ஆண்டில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தத் தொடரில் ஸ்டூவர்ட் பின்னி அறிமுகமானார். இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணி முதல் இரு போட்டிகளிலும், கடைசி இரு போட்டிகளிலும் வென்றது. 3-வது போட்டி டையில் முடிந்தது.

டையில் முடிந்த 3-வது போட்டியில் ரவிந்திர ஜடேஜா 45 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கோரி ஆன்டர்சன் பந்துவீச்சில் ஜடேஜா 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் டையில் முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்