மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்ந்து விட்ட அணிதான், ஆனால் ஒரு காலத்தில் இங்கிலாந்தை சொல்லி சொல்லி உதைத்த அணி மே.இ.தீவுகள். வீழ்ச்சியடைந்தோரை கேலி, கிண்டல் செய்யும் அநாகரிகமான ஒரு மேட்டுக்குடிப் போக்கு இங்கிலாந்து கலாச்சாரத்திலேயே உள்ள ஒன்று. இதைத்தான் காலனிய, நிற மேட்டிமை, வெள்ளை மனோபாவம் என்று நாம் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
பழைய இந்திய அணியையெல்லாம் கடுமையாகக் கேலி செய்துள்ளனர், அவர்கள் 250க்கு ஆல் அவுட் ஆகியிருப்பார்கள், ஆனால் இந்திய அணி 51 ரன்கள் நோ-லாஸ் என்று இருக்கும்போது வர்ணனையில் இந்தியா பாலோ ஆனைத் தவிர்த்தது என்று கேலிசெய்வார்கள், கடைசியில் கவாஸ்கரை அவர்களால் வீழ்த்த முடியாமல் திணறியதைத்தான் நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்,, இத்தகைய கேலி மனோபாவப்பின்னணியில்தான் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றியதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்நிலைய்ல் 2014-ல் ஹோல்டரிடம் கேப்டன்சியை கொடுத்த போது அவருக்கு வயது 23, அனைவரும் இவரை விமர்சித்தனர். மைக்கேல் ஹோல்டிங் உட்பட கேலி செய்தனர். பாய்காட், இங்கிலாந்தின் கொழுப்பெடுத்த பத்திரிகைகள், வரணனையாளர்கள், முன்னாள் வீரர்கள் என்று கேலி மேல் கேலி செய்து வந்தனர்.
இத்தனைக்கும் இங்கிலாந்து ஒருமுறை 438 ரன்களை இலக்காக நிர்ணயித்த போது 350/7 என்று மே.இ.தீவுகள் ட்ரா செய்தது, அப்போது தன் சதத்தின் மூலம் ஹோல்டர் இங்கிலாந்து வெற்றிக்கனவை முறியடித்ததும் நினைவு கூரத்தக்கது. இங்கிலாந்து சென்று ஷேய் ஹோப், பிராத்வெய்ட் அபார சதத்தின் மூலம் டெஸ்ட் வெற்றியை ஈட்டியது. ஆனால் இங்கிலாந்தின் வாய்க்கொழுப்பு அடங்காது, இங்குதான் ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் உள்ள வித்தியாசம், வீழ்ந்தோரை ஆஸ்திரேலியா ஊக்களமிக்கும் கேலி செய்யாது, ஆனால் இங்கிலாந்து வீழ்ந்தோரை மேலும் நசுக்கும், கேலி செய்யும் இழிவுபடுத்தும் படுமோசமான எண்ணப்போக்கு கொண்டது.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பாக கொலின் கிரேவ்ஸ், இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சேர்மன், வெஸ்ட் இண்டீஸ் அணியை தன் பதவியின் மரியாதையை மதிக்காமலும் கூட ‘மிகச் சாமானியமான அணி, சாதாரணமான அணி’ என்று வர்ணித்தார். இந்த கருத்து ஓய்வறையிலும் தொங்க விடப்பட்டது. இன்னொரு அணியை அவமானப்படுத்துவது அவர்கள் அணிக்கு உத்வேகமூட்டும் செயலாகப் பார்க்கப்பட்டது. ஆனால் மே.இ.தீவுகள் பார்படாஸ் டெஸ்ட்டை அப்போது வென்று தொடரைச் சமன் செய்தது, பீட்டர் மூர்ஸ் தன் பயிற்சியாளர் பதவியை இழந்தார்.
ஜெஃப் பாய்காட், அதிகம் இல்லை ஜெண்டில்மேன், கடந்த செவ்வாயன்றுதான் இந்த மே.இ.தீவுகளை தி டெலிகிராப் பத்திரிகையில், “மிகச் சாதாரணமான, சராசரி கிரிக்கெட் வீரர்கள், கடந்த அணிகலின் நிழல், இங்கிலாந்திலிருந்து வெஸ்ட் இண்டீஸ் செல்லும் கிரிக்கெட் ரசிகர்கள் அருமையான கடற்கரைகள், இசைக்குழுக்கள், மதுபானங்கள், என்று விடுமுறையில் என்ன கிடைக்குமோ அதெல்லாம் கிடைக்கும், ஆனால் கிரிக்கெட் கிடைக்காது” என்று கிண்டலடித்திருந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பாக எட்ஜ்பாஸ்டனில் ஹோல்டர் தலைமை வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து ஊதியது, உடனே பாய்காட் மிக மோசமான அணி என்று வசைபாடினார். ஆனால் அடுத்த ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்று முகத்தில் கரி பூசியது.
இந்நிலையில்தான் பார்பேடோஸ் டெஸ்ட் போட்டியில் இப்போது இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 77 ரன்களுக்குச் சுருட்டியதில் இங்கிலாந்தின் நம்பக வீரரும் கேப்டனுமான ஜோ ரூட்டை எல்.பி.யில் வீழ்த்திய ஹோல்டர், பிறகு 2வது இன்னிங்சில் 120/6 என்ற நிலையிலிருந்து 415/6 டிக்ளேர் என்று கொண்டு சென்றார், தன் சொந்தக் கணக்கில் ஒரு இரட்டைச் சதத்தை விளாசினார் ஹோல்டர், ஷேன் டவ்ரிச் சதம் எடுக்க இருவரும் சாதனைக் கூட்டணி அமைத்தனர் இப்போது இங்கிலாந்து தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.
இந்தப் பின்னணியில்தான் இங்கிலாந்தின் மேட்டுக்குடித் தனமான வெள்ளை நிற/இன மேட்டிமை புருவந்தூக்கி கருத்துகளையும் கேலிப்பார்வைகளையும் இழிவுபடுத்தல்களையும் ஹோல்டரின் இரட்டைச் சதம் உடைத்தெறிந்துள்ளது
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago