மெல்போர்னில் நடந்துவரும் 3-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்தத் தொடரில் முதல்முறையாக வாய்ப்புப் பெற்ற யஜுவேந்திர சாஹல் பந்துவீச்சில் பட்டையைக் களப்பினார். சாஹலின் லெக்ஸ்பின்னை சமாளிக்க முடியாமல் சின்னாபின்னமான ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.
மாயஜாலப் பந்துவீச்சு மூலம் அசத்திய சாஹல் 10 ஓவர்கள் வீசிய 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது சாஹலின் மிகச்சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.
கடந்த 2004-ம் ஆண்டு முத்தரப்பு தொடரில் மெல்போர்னில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் அகர்கர் 42 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தி இருந்தார், அதேபோன்று இப்போது சாஹல் வீழ்த்தியுள்ளார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சாஹல் வீழ்த்தி இருந்தார், அதைக்காட்டிலும் இது சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது.
.ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பெஹரன்டார்ப், நாதன் லயனுக்கு பதிலாக, ஆடம் ஸம்பா, பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணி 3 மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. அம்பதி ராயுடுவுக்கு பதிலாக கேதார் ஜாதவ், குல்தீப் யாதவுக்கு பதிலாக யஜுவேந்திர சாஹல், மற்றும் முகமது சிராஜுக்கு பதிலாக விஜய் சங்கரும் சேர்க்கப்பட்டார்.
தமிழக வீரரும், ஆல்ரவுண்டருமான விஜய் சங்கர் இதற்கு முன் இந்திய டி20 அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒரு நாள் போட்டிக்கான அணியில் இடம் பெறுவது இதுதான் முதல் முறையாகும். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை ஹேண்ஸ்ட்கம்ப் 58 ரன்கள் சேர்த்தது மட்டுமே ஓரளவுக்குக் கவுரவமான ஸ்கோராகும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்தியாவுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை கையாளப் போகிறேன் என்று நேற்று ஜம்பம் பேசிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சாஹல் வீசிய 24 ஓவரில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் பந்தில் ஷான் மார்ஷ் 39 ரன்னில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். 5-வது பந்தில் கவாஜா 34 ரன்களில் சாஹலிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.161 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது. ஆனால், அதன்பின் ஓரளவுக்குச் சமாளித்து ஆஸி. வீரர்கள் விளையாடினார்கள்.
புவனேஷ் குமார் வீசிய 2-வது ஓவரில் காரே(5) ஸ்லிப்பில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து ஆரோன் பிஞ்ச்(14) ரன்னில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் வெளியேறினார். இந்த தொடரில் 3-வது முறையாக புவனேஷ் வேகத்தில் பிஞ்ச் ஆட்டமிழந்தார்.
ஆரோன்பிஞ்ச் ஆட்டமிழந்த பந்துக்கு முதல் பந்தில் நடுவருக்குப் பின்பகுதியில் வந்து புவனேஷ்குமார் பந்துவீசியதால் அது டெட்பால் என்று நடுவர் அறிவித்தார். ஆனால் அடுத்துபந்தில் பிஞ்ச் ஆட்டமிழந்தார்.
முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளுக்கு 30 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. 24-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை எட்டியது. சாஹல் பந்துவீசிய முதல் ஓவரிலையே கவாஜா, மார்ஷ் இரு விக்கெட்டுகளைவீழத்தினார். இதனால், 101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை ஆஸி. இழந்து தடுமாறியது.
சாஹல் வீசிய 30-வது ஓவரில் ஸ்டோனிஸ் 10 ரன்கள் சேர்த்திருந்தபோது ரோஹித் சர்மா அருமையாக டைவ் செய்து கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.
அதிரடியாக பேட் செய்த மேக்ஸ்வெல் 5 பவுண்டரிகள் அடித்து 26 ரன்களில் ஷமி வேகத்தில் புவனேஷ்குமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புவனேஷ் குமார் பிடித்த இந்த கேட்சும் ஃபைன் லெக் திசையில் அருமையான டைவ்வாகும்.
ஆஸ்திரேலிய அணி கடைசி 13 ஓவர்களில் 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. சாஹல் 6 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார், ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் சேர்த்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
53 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago