30 ஆண்டுகளுக்குப்பின் உள்நாட்டில் பாலோஆன் பெற்றது ஆஸி. 300 ரன்களில் ஆல்அவுட்: குல்தீப் அபாரம்

By க.போத்திராஜ்

சிட்னியில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, இந்திய அணி பாலோ-ஆன் வழங்கியது.

ஆஸ்திரேலிய அணி 104.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியைக் காட்டிலும் 322 ரன்கள் பின்தங்கி இருந்ததைத் தொடர்ந்து பாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி.

கடந்த 1988-ம் ஆண்டுக்குப்பின் உள்நாட்டில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெறாமல் ஆடி வந்தது. அதாவது 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெற்று ஆடி தோல்வி அடைந்தது. அதன்பின் 30 ஆண்டுகளாக உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் கம்பீரமாக ஆடி வந்தநிலையில், இந்தியாவிடம் அதன் கர்வம் உடைந்துள்ளது.

, 30 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்று ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. உண்மையில் இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

சிட்னியில் இந்தியா ஆஸ்திரேலய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 83.3ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் இன்னும் 386 ரன்கள் பின்தங்கி உள்ளது.

3-ம் நாளான நேற்று மாலை திடீரென மேகம்கூடி வெளிச்சக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஆட்டம் 15 ஓவர்கள் குறைவாக வீசப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. மேலும், மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஒருவேளை இன்று மழை பெய்யாமல் இருந்தால், ஆட்டத்தை இன்று அரைமணிநேரம் முன்கூட்டியே தொடங்க நடுவர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால், சிட்னியில் காலையில் இருந்து பலமான தூறலும், மேகமூட்டமாக இருந்தது. இதனால், விளையாடுவதற்குச் சாதகமான சூழல் இல்லாமல் இருந்தது. இருமுறை நடுவர்கள் சென்று மைதானத்தை ஆய்வு செய்து காலை ஷெசனையும், உணவு இடைவேளைவரையிலும் ரத்து செய்தனர்.

அதன்பின் உணவு இடைவேளைக்குப்பின் மழை குறைந்து ஓரளவுக்கு வெளிச்சம் நிலவியது. இதையடுத்து, ஆட்டத்தை தொடர நடுவர்கள் முடிவு செய்து புதிய பந்தை எடுத்தனர்.

கம்மின்ஸ் 25 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கம்ப் 28 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 3-ம் நாளான நேற்று ஜடேஜா வீசிய ஓவரில் 3 பந்துகள் மீதம் இருந்தநிலையில் அதை வீசினார்.

அதன்பின் முகமது ஷமி பந்துவீச அழைக்கப்பட்டார். கம்மின்ஸ் ஓவரை எதிர்கொண்டார். 3-வது பந்தில் கம்மின்ஸ் க்ளீன் போல்டாகி 25 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து மிட்ஷெல் ஸ்டார்க் களமிறங்கி, ஹேண்டஸ்கம்ப்புடன் இணைந்தார். புதிய பந்து என்பதால், பும்ரா பந்துவீச அழைக்கப்பட்டார். பும்ரா வீசிய முதல் ஓவரில் ஸ்டார்க் திணறி, தத்துபித்து என்று சமாளித்தார்.

பும்ரா வீசிய 95 ஓவரில் விக்கெட் விழுந்தது. 4-வது பந்தில் ஹேண்ட்ஸ்கம்ப் ஸ்டெம்ப் தெறிக்க போல்டாகி, 37 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த லயன், ஸ்டார்க்குடன் இணைந்தார். வந்தவேகத்தில் குல்தீப் யாதவ் சுழலில் எல்பிடபிள்யு முறையில் டக் அவுட்டில் லயன் வெளியேறினார். அடுத்து வந்த ஹேசல்வுட், ஸ்டார்க்குடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர்.

குல்தீப் வீசிய 93-வது ஓவரில் அருமையான ஹேசல்வுட் அமைந்த கேட்சை விஹாரி தவறவிட்டார்.

குல்தீப் வீசிய 105 ஓவரின் கடைசிப் பந்தில் ஹேசல்வுட் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து 21 ரன்களில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 104.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்