சிட்னியில் நடந்து வரும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் புஜாராவின் சதம், அகர்வாலின் அரை சதத்தால் இந்திய அணி 200 ரன்களைக் கடந்து வலுவான நிலையை எட்டியுள்ளது.
சிறப்பாக பேட் செய்த புஜாரா இந்த டெஸ்ட் தொடரில் தனது 3-வது சதத்தை எட்டினார். ஒட்டுமொத்தமாகத் தனது 18-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார்.கடந்த மெல்போர்ன் டெஸ்ட்டில் முதல் நாளில் 215 ரன்கள் மட்டுமே இந்திய அணி சேர்த்திருந்தது. ஆனால், இந்த டெஸ்ட்டில் முதல் நாளிலேயே இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கி 200 ரன்களை விரைவாகக் கடந்துள்ளனர்.
75 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 102 ரன்களுடனும், விஹரி 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அரை சதம் அடித்தார். கேப்டன் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இந்திய அணி இருக்கிறது. 4-வது போட்டி சிட்னியில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கே.எல்.ராகுலும், இசாந்த் சர்மாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இரு வேகப்பந்துவீச்சாளர்களான பும்ரா, ஷமி ஆகியோரோடு, ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவை இந்திய அணி தேர்வு செய்தது.
அதேபோல, ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்சுக்கு பதிலாக மாரஷ், ஹேண்ட்ஸ்கம்ப்புக்கு பதிலாக லாபுசாங்கே தேர்வு செய்யப்பட்டனர்.
ராகுல் வேஸ்ட்
இந்திய அணிக்கு ராகுல், மயங்க் அகர்வால் தொடக்கம் அளித்தனர். கே.எல்.ராகுலை ஏன் எடுத்தார்கள் என்று கேள்வி கேட்கும் அளவுக்கும் அவரின் பேட்டிங் இன்றைய போட்டியிலும் மோசமாக இருந்தது. ஆப்-சைட் விலகிச் செல்லும் பந்தில் எதை அடிக்கலாம், அடிக்கக் கூடாது என்பது கூடத் தெரியாமல் அதைத் தொட்டு எட்ஜ் எடுத்து கேட்ச் ஆனது. ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் தொடரில் ராகுல் 100 ரன்களைக் கூட கடக்கவில்லை.
ஹேசன்வுட் வீசிய 2வது ஓவரில் கே.எல்.ராகுல் 9 ரன்களில் வெளியேறினார். 10 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது இந்திய அணி. அடுத்து வந்த புஜாரா, அகர்வாலுடன் சேர்ந்தார்.
அகர்வால் அரை சதம்
இருவரும் நிதானமானவும், ஆமை வேகத்திலும் ரன்களைச் சேர்த்தனர். இதனால் உணவு இடைவேளையின்போது 69 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அதன்பின் ரன் சேர்ப்பில் வேகம் காட்டியது.
சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 96 பந்துகளில் தனது 2-வது அரை சதத்தை எட்டினார். அதன்பின் இருவரும் ரன் சேர்ப்பில் வேகம் காட்டி ஓவருக்கு ஒரு பவுண்டரி அடிக்கத் தொடங்கியதால் ஸ்கோர் வேகமெடுத்தது.
நாதன் லயன் வீசிய 32 மற்றும் 34-வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசி அகர்வால் அசத்தினார். 34-வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அகர்வால் 77 ரன்களில் வெளியேறினார். இவரின் கணக்கில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 116 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
கோலி ஏமாற்றம்
அடுத்து கோலி களமிறங்கி, புஜாராவுடன் சேர்ந்தார். இருவரும் கட்டுக்கோப்பாக பேட் செய்து வேகமாகச் ரன்களைச் சேர்த்தனர். 51-வது ஓவரை லாபுசாங்கே வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசிய புஜாரா தனது அரை சதத்தை 134 பந்துகளில் நிறைவு செய்தார். அவ்வப்போது கோலியும் சில பவுண்டரிகளை விளாசி ரன் வேகத்தை அதிகப்படுத்தினார்.
ஹேசல்வுட் வீசிய 53-வது ஓவரில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து கோலி 23 ரன்களில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 54 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து ரஹானே களமிறங்கி, புஜாராவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். 63-வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.
ஸ்டார்க் வீசிய 71-வது ஓவரில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்களில் ரஹானே வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 48 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த விஹாரி, புஜாராவுடன் சேர்ந்தார்.
சதத்தை நோக்கி முன்னேறிய புஜாரா, இந்த டெஸ்ட் தொடரில் தனது 3-வது சதத்தை 199 பந்துகளில் நிறைவு செய்தார். அரை சதம் அடிக்க 134 பந்துகள் எடுத்துக்கொண்ட புஜாரா அடுத்த 50 ரன்களை விரைவாக 66 பந்துகளில் சேர்த்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago