பார்பேடோஸில் இங்கிலாந்து, மே.இ.தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் 18 விக்கெட்டுகள் சரிந்தன. வெஸ்ட் இண்டீஸ் அணி மீதமுள்ள தன் 2 விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 289 ரன்களை எடுக்க, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து கிமார் ரோச், ஜேசன் ஹோல்டர், ஜோஸப் வேகத்துக்கு 30 ஓவர்களில் 77 ரன்களுக்குச் சுருண்டது. 212 ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 127/6 என்று மொத்தமாக 339 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது.
2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் கீப்பர் டவ்ரிச் 27 ரன்களுடனும் ஜேசன் ஹோல்டர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஹெட்மையர் முதல் நாள் இருந்த 56 ரன்களில் இருந்து நேற்று தொடங்கிய போது வெஸ்ட் இண்டீஸ் 264/8 என்று இருந்ததிலிருந்து மேலும் மேலும் 25 ரன்களைச் சேர்த்தனர் இந்த 25 ரன்களையும் ஹெட்மையரே அடித்தார், அவர் 109 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 81 ரன்கள் விளாசி கடைசி விக்கெட்டாக ஸ்டோக்ஸிடம் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியை கிமார் ரோச் உண்மையில் தன் வேகப்பந்து வீச்சின் மூலம் சிதைத்தார் என்றால் மிகையாகாது. 27 பந்துகளில் 5 விக்கெட்டுகளை வெறும் 4 ரன்களுக்குக் கைப்பற்ற இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 48 ரன்களுக்கு 6 விக்கெட் என்று அசிங்கமான ஆல் அவுட் நிலையில் இருந்தது. அல்ஜாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த லீக் அணி போல் 77 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து.
முதல் விக்கெட்டாக இங்கிலாந்தின் கீட்டன் ஜெனிங்ஸ் ட்ரைவ் ஆடி நேராக கல்லியில் கேட்ச் ஆகி வெளியேறினார், உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 30/1 என்று இருந்தது. லஞ்ச் சாப்பிடும்போது அதன் பிறகு இப்படி நடக்கும் என்று ஒருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு கிமார் ரோச்சின் அதிர்ச்சி மருத்துவம் தொடங்கியது.
முதலில் ரோரி பர்ன்ஸ் வேகப்பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். ஜானி பேர்ஸ்டோ (12), அடுத்ததாக கிமார் ரோச் ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் செய்து எழுப்ப பேர்ஸ்டோவின் முழங்கையில் பட்டு ஸ்டம்பில் போய் தெறிக்க பவுல்டு ஆனார். ஜோ ரூட் 4 ரன்களில் ஹோல்டரால் செட்- அப் செய்யப்பட்டார், பிட்ச் செய்து வெளியே எடுத்துக் கொண்டிருந்த ஹோல்டர் ஒரு பந்தை உள்ளே கொண்டு வர நேராக எல்.பி.ஆனார். இந்திய கேப்டன் விராட் கோலியை பிலாண்டர் இதே போன்று செட்-அப் செய்து தென் ஆப்பிரிக்க தொடரில் எப்படி மலிவாக வீழ்த்தினாரோ அப்படி.
மறு முனையில் ரோச்சின் ஆக்ரோஷம் சற்றும் குறையவில்லை, ஒரு பந்தை அதிவேகமாக ஸ்டம்பில் வீச பென் ஸ்டோக்ஸ் பின்காலில் வாங்கி எல்.பி.ஆனார். அடுத்த பந்தே மொயின் அலிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது வேகத்துடன் கூடிய எழும்பிய ஷார்ட் பிட்ச் பந்தை மொயின் அலி எதிர்பார்க்கவில்லை, அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதோ ஆட டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. மீண்டும் ஷார்ட் பிட்ச் துல்லியப் பந்தில் பட்லரையும் விக்கெட் கீப்பர் கேட்சுகு கிமார் ரோச் வெளியேற்ற இங்கிலாந்து 7/49 என்று ஆனது. விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 2 ரன்களில் ஜோசப்பிடம் வெளியேறினார் 61/8 . 7 விக்கெட்டுகளை இங்கிலாந்து 26 ரன்களுக்கு 13 ஒவர்களில் இழந்தது .
சாம் கரன் (14) அடில் ரஷீத் (12) சிறிது மே.இ.தீவுகளை நிறுத்தினர். ஆனால் நீடிக்க முடியவில்லை, சாம் கரன், ஷனன் கேப்ரியல் பவுன்சரை கல்லியில் கேட்ச் கொடுத்தார். அடில் ரஷீத், ஜோசப் பந்தை ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். கெனிங்ஸ்டன் ஓவலில் இங்கிலாந்தின் ஆகக்குறைந்த ஸ்கோரான 77-ல் சுருண்டது.
கிமார் ரோச், 11 ஓவர்கள் 7 மெய்டன்களுடன் 17 ரன்களுக்க்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
சற்றும் எதிர்பாரா அதிர்ச்சி 77 ஆல் அவுட்டுக்குப் பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று மொயின் அலியிடம் 3 விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்தது, முன்னதாக பிராத்வெய்ட் (24), கேம்பல் (33) ஆகியோர் 52 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். அதன் பிறகுதான் மொயின் அலி புகுந்தார் பெரிய பவுலிங்கெல்லாம் இல்லை, அனாவசியமாக அவுட் ஆகினர், குறிப்பாக டேரன் பிராவோவை அணியிலிருந்து நீக்க வேண்டும், வேண்டா வெறுப்பாக ஆடும் இவர் இந்த புதிய மே.இ.தீவுகளுக்கு தோதுபட மாட்டார். 52/0 என்பதிலிருந்து 61/5 என்று ஆனது மே.இ.தீவுகள்.
அதன் பிறகு மீண்டும் ஹெட்மையர் இறங்கி லாங் ஆஃபில் மொயின் அலியை ஒரு சிக்சர் அடித்தார், பிறகு ஒதுங்கிக் கொண்டு ஸ்டோக்ஸை தூக்கி அடித்து 2 பவுண்டரிகளை விளாரி ஆக்ரோஷம் காட்டினார், டவ்ரிச்சும் தன் பங்குக்கு ஒரு சிக்சரை விளாசினார், இருவரும் சேர்ந்து 59 ரன்களைச் சேர்த்தனர், அப்போது 31 ரன்களில் இருந்த ஹெட்மையர், கரன் பந்தில் ஆட்டமிழந்தார். ஆட்ட முடிவில் டவ்ரிச் 27 ரன்களுடனும், ஜேசன் ஹோல்டர் 7 ரன்களுடனும் உள்ளனர், வெஸ்ட் இண்டீஸ் 127/6 என்று மொத்தமாக 339 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து தோல்வியின் பிடியில் உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago