வரலாறு படைத்தது இந்திய அணி: 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது கோலி படை

By க.போத்திராஜ்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி  பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.

கடந்த 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது இந்திய அணி.

சிட்னியில் நடந்து வந்த 4-வது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது கோலி தலைமையிலான படை.

கடநத 1947-ம் ஆண்டு முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த இந்திய அணி இதுவரை அங்கு ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இப்போது ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்திய ஆசியாவின் முதல் அணி எனும் பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

இதுவரை ஆசிய அணிகள் ஆஸ்திரேலிய மண்ணில் 98 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளன. அதில் 66 போட்டிகளில் தோல்வியும், 11 வெற்றிகளும் பெற்றுள்ள போதிலும் யாரும் தொடரை வென்றது இல்லை.

31 முறை ஆசிய அணிகள் ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தபோதிலும் தொடரை வெல்ல முடியாமல் தலை கவிழ்ந்து திரும்பின. ஆசிய அணிகளின் சார்பில் 29 கேப்டன்கள் தங்கள் அணிகளை வழிநடத்திச் சென்று எந்த அணியும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியால் தவித்த நிலையில், விராட் கோலி வரலாறு படைத்துவிட்டார்.

72 ஆண்டுகளுக்குப்பின் விராட் கோலி தலைமையிலான படை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

ஆஸ்திரேலிய அணி 104.5 ஓவர்களில் முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியைக் காட்டிலும் 322 ரன்கள் பின்தங்கி இருந்ததைத் தொடர்ந்து பாலோ-ஆன் வழங்கியது இந்திய அணி.4-ம் நாளான நேற்று மழை காரணமாக சிறிது நேரமே ஆட்டம் நடந்தது.

கடந்த 1988-ம் ஆண்டுக்குப்பின் உள்நாட்டில் நடந்த எந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெறாமல் ஆடி வந்தது. அதாவது 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாலோ-ஆன் பெற்று ஆடி தோல்வி அடைந்தது. அதன்பின் 30 ஆண்டுகளாக உள்நாட்டில் டெஸ்ட் போட்டியில் கம்பீரமாக ஆடி வந்தநிலையில், இந்தியாவிடம் அதன் கர்வம் உடைந்துள்ளது.

30 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்று ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது. மேலும், 2005-ம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அணியிடமும் பாலோ-ஆன் பெறாமல் ஆஸ்திரேலியா இருந்துவந்த நிலையில், இந்தியாவிடம் பாலோ-ஆன் பெற்றது.

உஸ்மான் கவாஜா 4 ரன்னிலும், ஹாரிஸ் 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர். ஆனால், கடைசி நாளான இன்றும் தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்ததால், ஆட்டம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆடுகளத்தை இருமுறை நடுவர்கள் ஆய்வு செய்தும் ஆட்டம் நடத்த ஏதுவான சூழல் இல்லை. இதையடுத்து, போட்டி டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்களிலும், மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியாவை வென்று இருந்தது. பெர்த் டெஸ்டில் மட்டும் ஆஸி. வென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

இந்த டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் அடித்து மிகச்சிறப்பாக ஆடிய சட்டேஸ்வர் புஜாரா தொடர் நாயகனாகவும், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் 521 ரன்கள் சேர்த்தார் புஜாரா.

மேலும், 4-வது டெஸ்ட் போட்டியி்ல ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் வீழ்த்தியபோது, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் 64 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் சினாமென் பந்துவீச்சாளர் ஒருவர் 5 விக்கெட்டுகள் பெறுவது இதுமுதல்முறை என்ற பெருமையையும் பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்