சோம்தேவ் முடிவுக்கு ஏஐடிஏ ஆதரவு

ஆசிய விளையாட்டுப் போட்டியி லிருந்து விலகியுள்ள இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான (ஒற்றையர் பிரிவு) சோம்தேவுக்கு அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஏஐடிஏவின் தலைவர் அனில் கண்ணா கூறுகையில், “சர்வதேச தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் சோம்தேவ் வருவது மிக மிக்கியமானது என்பதை டென்னிஸ் சங்கம் புரிந்துகொண்டுள்ளது.

அவர் மீண்டும் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்கு வந்தால் அதுவும் நாட்டுக்காக செய்யும் சேவைதான். அணியின் “நான் பிளேயிங் கேப்டன்” ஆனந்த் அமிர்தராஜ் சோம்தேவின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சோம்தேவ் நாட்டுக்காகவே டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாடுகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு பதக்கங்களை வென்றவரான சோம்

தேவ், தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வரும்போது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார். அதுவும் நாட்டுக்காக செய்யும் சேவைதான்.

டாப்-100-ல் இருக்கும் வீரர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். நமது வீரர்களும் சம்பாதிப்பது அவசியம்” என்றார்.

ஏடிபி போட்டிகளில் கவனம் செலுத் தும் வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து சோம்தேவ் விலகியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE