டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை 3ம் இடத்துக்கு அனுப்பி இந்த ஆஸி. அணியும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்கலாம்.. எப்படி?

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் கேப்டன் கிங் கோலியின் இந்திய அணி நம்பர் 1 இடத்தில் அசைக்க முடியாமல் உள்ளது, இப்போதைக்கு இங்கிலாந்து அணிதான் இந்திய அணியை இந்த நிலையில் அச்சுறுத்த முடியும். ஆஸ்திரேலிய அணி 5ம் இடத்தில் உள்ளது, ஆனாலும் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 3ம் இடத்துக்குத் தள்ளி முதலிடம் முன்னேற முடியும்.

இது எப்படியென்றால்.. வரவிருக்கும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியை ஆஸ்திரேலியா 4-0 என்று கிளீன் ஸ்வீப் செய்ய வேண்டும். இந்த மிகமிகக் கடினமான சாதனையை இந்த ஆஸ்திரேலிய அணியும் செய்ய முடிந்தால் இந்திய அணி 3-ம் இடத்துக்குச் செல்ல ஆஸ்திரேலிய அணி முதலிடம் வகிக்கும்.

இங்கிலாந்து தற்போது 108 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.  ஆஸ்திரேலியா 102 புள்ளிகளுடன் 5ம் இடத்தை நியூசிலாந்துடன் பகிர்ந்து கொள்கிறது.  இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தற்போது பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கிடையே 3ம் டெஸ்ட் நடைபெற்று வருகிறது, இந்த டெஸ்ட் போட்டி ட்ரா அல்லது பாக். வெற்றியாக முடிந்தால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தரவரிசையில் 4ம் இடத்துக்கு முன்னேறும்.

2016ம் ஆண்டு அக்டோபர் முதல் இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் இடத்தைத் தக்கவைத்து வருகிறது.  25 மாதங்கள் முதலிடம், முதலிடத்தில் இந்தியா நீண்ட காலம் இருப்பது இதுவே முதல் முறை.

மாறாக டெஸ்ட் தொடர் ட்ரா ஆகிறது என்றால் இந்திய அணி 2 புள்ளிகள் இழந்து 114 புள்ளிகளைப் பெற்றிருக்கும்.  ஆஸ்திரேலியாவை இந்தியா 4-0 என்று வீழ்த்தினால் இந்திய அணியின் தரவரிசைப் புள்ளிகள் யாரும் அவ்வளவு சுலபத்தில் எட்ட முடியாத 120 புள்ளிகள் என்ற உச்சத்துக்குச் செல்லும். இப்படியாக இந்தியா கிளீன் ஸ்வீப் செய்தால் ஆஸ்திரேலியா 6ம் இடத்துக்குச் சரிவடையும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE