ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி: ஆஸி. முதல் இன்னிங்ஸில் 326-க்கு ‘ஆல்-அவுட்’

By க.போத்திராஜ்

பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், இசாந்த் சர்மாவின் வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல்நாள் ஆட்டத்தில் 277 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தநிலையில், இன்று ஆட்டம் தொடங்கி 18 ஓவர்களில் 49 ரன்களுக்கு மீதமுள்ள 4 விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-வது ஓவரிலேயே முரளி விஜய் விக்கெட்டை இழந்தது. மிட்ஷெல் ஸ்டார்க் வேகத்தில் ‘ஸ்டெம்ப் தெறிக்க’ போல்டாகி வெளியேறினார் முரளி விஜய்.

இங்கிலாந்து தொடரில் இருந்து முரளிவிஜயன் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அதனால்தான் மேற்கிந்திய்தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அவரை நீக்கினார்கள், பின்னர் இங்கிலாந்து கவுண்டியில் சதம் அடித்ததால், மீண்டும் ஆஸ்திரேலியத் தொடருக்கு தேர்வு செய்தனர். ஆனால், முதல் டெஸ்ட் போட்டியிலும் பெரிதாக எந்த விதமான ரன்களும் முரளி விஜய் அடிக்கவில்லை, 2-வது டெஸ்டிலும் டக்அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இனிமேலும் அடுத்த டெஸ்டுக்கு முரளி விஜய் விளையாட வேண்டுமா என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும்.

 

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், பெர்த்தில் ஆப்டஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்திருந்தது. பெய்ன் 16ரன்களிலும், கம்மின்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆப்டஸ் மைதானம் நேற்று நண்பகலுக்குப்பின் வெயில் சுளீர் என அடித்தவுடன் காயத் தொடங்கி, வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது. இதனால்தான், முதல் செஷனில் இந்திய பந்துவீச்சாளர்களால் விக்கெட் எடுக்கமுடியவில்லை, ஆனால், 2-வது செஷனில் 6 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்நிலையில், இன்றும் வேகப்பந்துவீச்சுக்கு மைதானம் நன்கு ஒத்துழைத்தது. இந்திய பந்துவீச்சை நிதானமாக கம்பின்ஸும், பெய்னும் ஆடினார்கள். 104 ஓவர்கள் வரை எந்தவிதமான திருப்பமும் ஏற்படவில்லை. ஆனால், அதன்பின் அனைத்தும் தலைகீழாக மாறியது.

உமேஷ் யாதவ் வீசிய 104-வது ஓவரில், கம்மின்ஸ் 19 ரன்கள் சேர்த்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்த ஓவரை பும்ரா வீசினார். 2-வது பந்தில், எல்பிடபிள்யு முறையில் பெய்ன் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து ஸ்டார்க், லயன் இருவரும் களத்தில் இரு ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தனர். இசாந்த் சர்மா வீசிய 109-வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 2-வது பந்தில் ஸ்டார்க் 6 ரன்னில் ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தபந்தில் ஹேசல்வுட் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

108.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியத் தரப்பில் இசாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்