மெல்போர்னில் நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 399 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
வெற்றி பெறுவதற்கு சாத்தியம் அதிகம் இல்லாத இமாலய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.
இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 292 ரன்கள் முன்னிலையோடு சேர்த்து 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இன்னும் ஐந்தரை செஷன்கள் களத்தில் நின்று பொறுமையாக பேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணியினர் உள்ளனர். அடித்து ஆட முற்பட்டால் விக்கெட்டை இழக்க நேரிடும் என்பதால், மிக, மிகக் கவனத்தோடு ஆட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதேசமயம், ஆடுகளம் மோசமான கட்டத்தை எட்டி இருப்பதால், இன்று மாலை வரை ஆஸ்திரேலிய அணியினர் தாங்குவது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்று கணிக்கப்பட்டாலும், அதைத் தடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணி போராடி வருகிறது. இன்னும் வெற்றிக்கு 335 ரன்கள் தேவைப்படும் நிலையில், கைவசம் 7 விக்கெட்டுகளும், ஒருநாள் முழுமையான ஆட்டமும் உள்ளன.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய இந்திய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்திருந்தது. மயங்க் அகர்வால்28 ரன்களிலும், ரிஷப் பந்த் 6 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.
இன்றைய 4-ம் ஆட்டத்தை அகர்வாலும், ரிஷப் பந்தும் தொடர்ந்தனர். 55 நிமிடங்கள் மட்டுமே விளையாடிய இந்திய மேலும் 3 விக்கெட்டுகளை இழந்தது. மயங்க் அகர்வால் 42 ரன்களிலும், ரவிந்திர ஜடேஜா 5 ரன்களிலும் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ரிஷப்பந்த் 33 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
38 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக இந்திய அணி கேப்டன் கோலி அறிவித்தார். இதைத்தொடர்ந்து 399 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியத் தரப்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
வெற்றி கொள்ள முடியாத கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஹாரிஸ், பிஞ்ச் களமிறங்கினார்கள். தொடக்கமே ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது
பும்ரா வீசிய 2-வது ஓவரில், ஆரோன் பிஞ்ச் 3 ரன்கள் சேர்த்த நிலையில், 2-வது ஸ்லிப்பில் இருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த கவாஜா, ஹாரிஸுடன் இணைந்து பவுண்டரிகளை விளாசத் தொடங்கினார். பந்துவீச்சில் மாற்றம் கொண்டுவந்து, ஜடேஜா அழைக்கப்பட்டார்.
ஜடேஜா வீசிய 10-வது ஓவரில் ஷார்ட் லெக் திசையில் நின்றிருந்த அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து, ஹாரிஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த மார்ஷ், கவாஜுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர். ஆனால், கவாஜாவின் ஆட்டத்தில் ஓரளவுக்கு ஆவேசம் காணப்பட்டது. அவ்வப்போது பவுண்டரிகள் விளாசினார்.
21-ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தில் எல்பிடபிள்யு முறையில் கவாஜா 33 ரன்களில் வெளியேறினார்.மார்ஷ் 44 ரன்களிலும், ஹெட் 17 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 32 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்துள்ளது ஆஸி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago