அடிலெய்ட் டெஸ்ட் 2ம் நாள் ஆட்டத்தில் முதல் பந்திலேயே ஷமி அவுட் ஆக, இந்திய அணி 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, இதனைத் தொடர்ந்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 87 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.
தற்போது தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 117/4 என்று உள்ளது. ஹெட் 17 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கம்ப் 33 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
இன்று காலை ஸ்கோரை 270 வரை கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் பந்தை ஹேசில்வுட் லெக் ஸ்டம்புக்கு வெளியே ஒரு ஷாட் பிட்ச் பந்தை வீச அதனை சும்மா தொட்டிருந்தால் பவுண்டரிக்கு பறந்திருக்கும், ஆனால் ஷமி கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது, படுமட்டம். ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளுடன் முடிந்தார்.
இந்தியா 250 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. ஏரோன் பிஞ்ச் ரன் எடுக்காத நிலையில் இஷாந்த் சர்மா முன்னால் வந்து ட்ரைவ் ஆடுமாறு ஒரு பந்தை வீச பிஞ்ச் ஆட முயன்றார் ஆனால் பந்து இன்ஸ்விங் ஆகி மட்டையின் உள்விளிம்பில் லேசாகப்பட்டு ஸ்டம்பில் பட மிடில், ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.
இஷாந்த் சர்மா அதன் பிறகும் அற்புதமான லைன் மற்றும் லெந்தில் துல்லியமாக வீசி இதுவரை 10 ஒவர்கள் 5 மெய்டன் 14 ரன்கள் 1 விக்கெட் என்று உள்ளார். பும்ரா, மொகமது ஷமி துல்லியமாக வீசி கட்டுப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் புஜாரா சொன்னது போல் அஸ்வின் தான் இந்தப் போட்டியின் முக்கிய காரணி. மார்கஸ் ஹாரிஸ் நன்றாக ஆடினார். 57 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அஸ்வினையும் நன்றாகத்தான் கையாண்டார். ஆனால் அஸ்வினின் ஒரு ஆஃப் வாலி, ஓவர் பிட்ச் பந்தை சரியாக ஆடாமல் சிலிமிடாஃபில் விஜய் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஷான் மார்ஷ் 2 ரன்கள் எடுத்து அஸ்வின் வீசிய மிகவும் வெளியே சென்ற விரயப்பந்தை, நேர் நேர் தேமா பந்தை படுமட்டமாக டிரைவ் ஆடி பந்தை உள்ளே இழுத்து விட்டுக் கொண்டு பவுல்டு ஆனா.ர் இந்த 2 விக்கெட்டுகளிலும் அஸ்வின் பங்கு ஒன்றுமில்லை, பந்துகளும் அவருக்கு இதுவரை திரும்பவில்லை, ஆனால் அவர் தன் பிளைட், லெந்த், திசை, மேலேயிருந்து பந்தை இறக்கும் விதம், பந்தின் வேகம் என்று மாற்றங்களை நிகழ்த்தி ஜாலம் காட்டினார்.
ஆனால் உஸ்மான் கவாஜா 125 பந்துகளைச் சந்தித்து 28 ரன்களுடன் சிரமமின்றி ஆடிவந்தார், ஆனால் அஸ்வின் பந்து ஒன்று அழகாக இறங்கி திரும்பியது கவாஜா பந்து பிட்ச் ஆகும் பகுதிக்கு மட்டையைக் கொண்டு வராமல் ஸ்பின்னை தடுத்தாடப் பார்த்தார், பந்து வெளியே ஸ்பின் ஆகி கிளவ்வில் பட்டு பந்த்திடம் கேட்ச் ஆனது, நடுவர் நாட் அவுட் என்றார், கோலி மிக அருமையான ரிவியூ ஒன்றைச் செய்தார், அது அவுட். கோலி இன்று நன்றாக கேப்டன்சி செய்து வருகிறார், 4 பவுலர்களை அருமையாக ரொடேட் செய்து வருகிறார். களவியூகமும் துல்லியமாக உள்ளது. ஆஸ்திரேலியா இன்னும் 133 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4 விக்கெட்டுகளை இந்தியா கைப்பற்றியிருப்பது மிகப்பெரிய அனுகூலம் இதை நழுவ விடக்கூடாது.
அஸ்வின் 22 ஓவர்கள் 5 மெய்டன் 38 ரன்கள் 3 விக்கெட்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago