ஐடிஎப் டென்னிஸ்: பிரார்த்தனா சாம்பியன்

By செய்திப்பிரிவு

சென்னையில் நடைபெற்ற கே.எஸ்.நாராயணன் நினைவு மகளிர் ஐடிஎப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரார்த்தனா தோம்பரே சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரார்த்தனா தோம்பரே 4-6, 6-3, 7-6 (5) என்ற செட் கணக்கில் சகநாட்டவரான எட்டீ மஹேத்தாவைத் தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் பிரார்த்தனாவின் முதல் சர்வீஸை முறியடித்து 2-0 என முன்னிலை பெற்ற மஹேத்தா, அடுத்த 3 கேம்களை பிரார்த்தனாவிடம் இழந்தார். இதனால் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் பிரார்த்தனா. ஆனால் விடாப்பிடியாக போராடிய மஹேத்தா அடுத்த 5 கேம்களில் இரு முறை பிரார்த்தனாவின் சர்வீஸை முறியடித்து முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

முதல் செட்டைப் போலவே 2-வது செட்டின் ஆரம்பத்திலேயே 2-0 என முன்னிலை பெற்றார் மஹேத்தா. அதைத்தொடர்ந்து காயத்துக்கு 3 நிமிடங்கள் சிகிச்சை பெற்ற பிரார்த்தனா, அடுத்த 6 கேம்களில் 5-ஐ தன்வசமாக்கி 2-வது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் மஹேத்தா 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு அபாரமாக ஆடிய பிரார்த்தனா சரிவிலிருந்து மீண்டு 4-4 என்ற கணக்கில் சமன் செய்தார். இதன்பிறகு இந்த செட் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் முடியவே, ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது. அதை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய பிரார்த்தனா சாம்பியன் ஆனார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்