ஆஸி.யின் 326-க்கு சவால்: ‘கிங்’ கோலியின் உறுதியான ஆக்ரோஷ ஆட்டம்; உறுதுணையாக ரஹானே

By க.போத்திராஜ்

பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான  326- ரன்களுக்கு சவால் விடுக்கும் வகையில் கேப்டன் விராட் கோலி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவருக்குத் துணையாக துணைக் கேப்டன் ரஹானேவும் சிறப்பாகஆடி வருகின்றனர்.

மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் பந்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. அதன்பின் களம் புகுந்த கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து அணியை மீட்டெடுத்து ஆடி வருகிறார்.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் விராட் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்திருந்தது. பெய்ன் 16 ரன்களிலும், கம்மின்ஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

விக்கெட் சரிவு

ஆப்டஸ் மைதானம் இன்றும் வேகப்பந்துவீச்சுக்கு மைதானம் நன்கு ஒத்துழைத்தது. இந்திய பந்துவீச்சை நிதானமாகவே இன்று கம்பின்ஸும், பெய்னும் கையாண்டனர். 104 ஓவர்கள் வரை எந்தவிதமான திருப்பமும் ஏற்படவில்லை. ஆனால், அதன்பின் தலைகீழாக மாறியது.

உமேஷ் யாதவ் வீசிய 104-வது ஓவரில், கம்மின்ஸ் 19 ரன்கள் சேர்த்த நிலையில், கிளீன் போல்டாகி வெளியேறினார். பும்ராவின் அடுத்த ஓவரில் எல்பிடபிள்யு முறையில் பெய்ன் 38 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இசாந்த் சர்மா வீசிய 109-வது ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 108.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியத் தரப்பில் இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும், பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

முரளி, ராகுல் 'வீண்'

இதையடுத்து, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை முரளி விஜய், கே.எல்.ராகுல் தொடங்கினார்கள். ஆனால் ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் ஸ்டெம்ப் தெறிக்க டக்அவுட்டில் முரளி விஜய் வெளியேற, 6-வது ஓவரில் ராகுலை 2 ரன்னில் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் ஹேசில்வுட்.

தொடக்க கூட்டணி இருவரும் 5 ஓவர்களில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து, நடுவரிசையில் களமிறங்கும் வீரர்களுக்குச் சுமையை ஏற்றினார்.

இந்திய அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தலைவலி என்பது இன்னும் தீராததாக இருந்து வருகிறது. கே.எல். ராகுலுக்கும், முரளி விஜய்க்கும் இங்கிலாந்து தொடரில் இருந்து தொடர்ந்து வாய்ப்பு அளித்தும் இருவரும் தக்கவைக்க தவறி விடுகின்றனர்.

இங்கிலாந்தில் செய்த தவறுகளுக்காக முரளி விஜய், மேற்கிந்தியத்தீவுகள் தொடருக்கு நீக்கப்பட்டு பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். அவ்வாறும் செய்தும் இன்னும் பேட்டிங்கில் தேரவில்லை. கே.எல். ராகுலும், முரளி விஜயையும் காலை நகர்த்தி ஆடுவதில் காட்டும் சோம்பேறித்தனத்தால்தான் விரைவாக விக்கெட்டுகளை இழந்து விடுகின்றனர்.

புஜாரா ஏமாற்றம்

3-வது விக்கெட்டு புஜாரா, கோலி களமிறங்கினார்கள். இருவரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை அனாசயமாக கையாண்டனர். அதிலும் கோலி முதல் டெஸ்டில் செய்த தவறுகளை செய்துவிடக்கூடாது என்ற தீர்மானத்தோடு விளையாடினார்.

களமிறங்கிய சிறிது நேரத்திலே சில அருமையான ஸ்டிரைட் டிரைவ்களை ஆடி ரன்களைச் சேர்த்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை குழப்பிவிட்டார். அதிலும் ஹேசல்வுட் வீசிய 10-வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து ஆஸி வீரர்களுக்குத் தனது ஆக்ரோஷத்தை காட்டினார்.

அதன்பின் ஹேசல்வுட், லயன், கம்மின்ஸ் மூவரும் மாறி, மாறி பந்துவீசியும் கோலியை ஒன்றும் செய்யமுடியவில்லை. பந்துகளைத் தேர்வு செய்து ஆடி, முதிர்ச்சியான டெஸ்ட் வீரர் என்பதை நிரூபித்தார். அவ்வப்போது நேர்த்தியான சிலஷாட்களை ஆடி 'சில்லரை' ரன்களைசேர்க்கவும் கோலி தவறவில்லை.

இவருக்கு உறுதுணையாக ஆடிய புஜாரா ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தாலும் நிதானமாக ஆடினாலும், இந்த முறை ஏமாற்றினார். ஸ்டார்க் வீசிய 38-வது ஓவரில் பெயினிடம் கேட்ச் கொடுத்து புஜாரா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர்.

அதிரடி ரஹானே

4-வது விக்கெட்டுக்கு ரஹானே களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். ரஹானே களமிறங்கியதில் இருந்து அவரின் பேட்டிங்கில் அனல் பறந்தது. கம்மின்ஸ் ஓவரில் ஒரு பவுண்டரியும், ஸ்டார்க் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்து ஆஸி வீரர்களின் மனவலிமையை உடைத்தார்.

மிகவும் பொறுப்பான ஆட்டத்தைக் கையாண்ட விராட் கோலி 110 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இருவரின் நேர்த்தியான பேட்டிங்கையும், மோசமான பந்துகளை தேர்வு செய்து அடித்த ஷாட்களாலும் ஆஸ்திரேலிய வீரர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ய பந்துவீச்சை மாற்றிப் பார்த்தும் கடைசிவரை பலனில்லை. ஹேசல்வுட் வீசிய 65-வது ஓவரில் ரஹானே ஸ்டிரைட் டிரைவில் ஒருபவுண்டரியும், ஸ்குயர் லெக் திசையில் ஒருபவுண்டரியும் அடித்து 92 பந்துகளில் அரைசதம் நிறைவு செய்தார்.

விராட் கோலியின் ஸ்திரமான பேட்டிங், சுவர் போன்று நிற்கும் ரஹானேயின் பேட்டிங், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 69 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் விராட் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த கூட்டணியை உடைத்தால்தான் ஆஸி. அணி ஏதாவது இந்த டெஸ்ட்டில் செய்ய முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்