சபை நாகரிகம் இல்லாத ரவி சாஸ்திரியின் ஆபாச வார்த்தை: வாய்விட்டு சிரித்த ஜஸ்டின் லாங்கர், சமூக வலைத்தளவாசிகள் பாய்ச்சல்

By இரா.முத்துக்குமார்

ஒரு நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றும் பாராமல் இந்திய வெற்றி, ஆஸி. அணியின் அச்சுறுத்திய கடைசி விக்கெட் கூட்டணி, பின் வரிசை பேட்டிங் இந்திய அணியையும் ரசிகர்களையும் மிரட்டிய விதம் ஆகியவை பற்றி தொலைக்காட்சியில் இந்தியப் பயிற்சியாளரிடம் கேட்ட போது சபை நாகரிகமற்ற ஆபாச வார்த்தையைப் பிரயோகித்தார்.

 

தொலைக்காட்சி வர்ணனையாளர்களான சுனில் கவாஸ்கர், மார்க் புட்சர், மைக்கேல் கிளார்க் ஆகியோர் ரவிசாஸ்திரியிடம் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அந்த கடைசி பதற்றமான தருணங்கள் எப்படி இருந்தது என்று கேட்க ரவிசாஸ்திரி மிகுந்த பதற்றத்துடன் இருந்ததை வெளிப்படையாக ஒரு ஆபாச வார்த்தைப் பிரயோகத்துடன் இந்தி மொழியில் விவரித்தார்.  அவர் கூறியது என்னவெனில், “நாங்கள் அவர்களை சும்மா விட மாட்டோம், சிறிது நேரத்துக்கு எங்கள்...” என்று ஆபாச வார்த்தையைப் பயன்படுத்தினார்.

 

சுனில் கவாஸ்கர் சாஸ்திரி கூறியதை மொழி பெயர்க்க மறுத்து விட்டார்.

 

இதனையடுத்து ரவிசாஸ்திரி மீது சமூக வலைத்தளவாசிகள் பாய்ந்துள்ளனர், சிலர் ரவிசாஸ்திரியின் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டியுள்ளனர், மேலும் சிலர் அவரைக் கடுமையாகக் கேலி செய்துள்ளனர். அதில் ஒரு கேலி ரவிசாஸ்திரி கூறிய அந்த வார்த்தையின் அர்த்தத்தைத் தொனிக்குமாறு, ‘ரவிசாஸ்திரியின் முகம் ஏன் இப்படி வீங்கியிருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது’ என்று கடும் கேலி செய்துள்ளது.  வேறு ஒரு ட்விட்டர்வாசி, ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இந்தியர்களுக்கு என்ன நடந்தது என்பதைத்தான் ரவிசாஸ்திரி இப்படிக் கூறினாரோ’ என்று கேலி செய்துள்ளார்.

 

இந்துஸ்தான் டைம்ஸ், ரவிசாஸ்திரியின் ஆபாச வார்த்தையை மீண்டும் கூற முடியாமல்,   ‘அவர் வாயில் இருந்ததாகக் கூறியது நிச்சயம் இருதயம் அல்ல’ என்று கேலி செய்துள்ளது.

 

இந்நிலையில் சாஸ்திரி கருத்தைப் பற்றி ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் கேட்ட போது அவர் வாய்விட்டுச் சிரித்து விட்டார் என்று ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

மேலும்