பால்ஆன் டி’ ஆர் விருதை குரோ ஷியா அணியின் நட்சத்திர கால் பந்து வீரர் மோட்ரிச் வென்றார்.
பிரான்சில் இருந்து வெளிவரும் பிரான்ஸ் கால்பந்து இதழ் சார்பில் ஆண்டுதோறும் பால்ஆன் டி’ஆர் விருது வழங்கப்பட்டு வரு கிறது. உலகம் முழுவதும் உள்ள 180 பத்திரிகையாளர்கள் வாக் களித்து இந்த விருதுக்கான வீரரை தேர்வு செய்வார்கள். இந்த ஆண்டு விருதுக்கான தேர்வு பட்டியலில் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டி னாவின்லயோனல் மெஸ்ஸி, குரோஷியாவின் லூக்கா மோட்ரிச், பிரான்சின் கிளி யான் பாப்பே உள்ளிட்ட 30 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று அதி காலை விருது வழங்கும் விழா பாரிஸ் நகரில் நடைபெற்றது. இதில் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷிய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற அந்த அணியின் நடுகள வீரரான லூக்கா மோட்ரிச், விருதை தட்டிச் சென்றார். தொழில்முறை கால் பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியிலும் மோட்ரிச் முக்கியமான வீரராக திகழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
33 வயதான லூக்கா மோட்ரிச், பால்ஆன் டி’ஆர் விருதை வென்ற தன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருதை மாறி மாறி சொந் தம் கொண்டாடி வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி ஆகியோரின் ஆதிக்கத் துக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது. விருதுக்கான தேர்வு பட்டியலில் ரொனால்டோ 2-வது இடமும், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களான கிரீஸ்மான் 3-வது இடமும், கிளியான் பாப்பே 4-வது இடமும் பிடித் தனர். இந்த பட்டியலில் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறை யாக லயோனல் மெஸ்ஸி முதல் 3 இடங்களுக்குள் இல்லா மல் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். எகிப்து அணியின் நட்சத்திர வீரரான முகமது சாலா பட்டியலில் 6-வது இடத்தில் இருந்தார்.
21-வது வயதுக்குட்பட்டோருக் கான கோபா டிராபி கிளியான் பாப்பேவுக்கு வழங்கப்பட் டது. முதன்முறையாக பெண்கள் பிரிவில் இம்முறை பால்ஆன் டி’ ஆர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை நார்வே வீராங்கனை அடா ஹெகர் பெர்க் பெற்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago