பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தான் சிக்கியபோது தன்னால் வீட்டில் படுக்கையைவிட்டுக் கூட எழமுடியவில்லை, உண்மையில் பந்தை தான் சேதப்படுத்தவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மனம்திறந்து பேசினார்.
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஆஸ்திரலேலிய மக்களிடம் கண்ணீர் விட்டுமன்னிப்பு கேட்டபோது ஊடகங்களைச் சந்தித்த ஸ்மித், அதன்பின் தற்போதுதான் நீண்ட இடைவெளிக்குப்பின் சந்தித்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் கடந்த மார்ச் மாதம் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேரலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், தொடக்க ஆட்டக்காரர் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள்.
இதில் ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது. சர்வதேச போட்டிகள், பிக்பாஷ் கிரிக்கெட், செப்பீல்ட் சீல்ட் ஆகிய போட்டிகளில் விளையாடாமல், உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஸ்மித் விளையாடி வந்தார்,
இந்நிலையில், சிட்னியில் ஸ்டீவ் ஸ்மித் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியபோது வீட்டில் என்னால் படுக்கையை விட்டுக்கூட எழுந்திருக்க முடியாத அளவுக்கு என் மனது கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த கறுப்பு நாட்கள் என் வாழ்வின் கடினமான நாட்கள். என் மனது பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. அந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அந்த மனவேதனையில் இருந்து மீண்டுவர உதவினார்கள்.
உண்மையில் எனக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்பில்லை, நான் அந்தத் தவற்றை செய்யவில்லை. ஆனால், பந்தைச் சேதப்படுத்தும் திட்டம் தீட்டப்படுவதை நான் ஓய்வறையில் இருந்தபோது அணி வீரர்களுக்கு இடையே பேசப்படுவதே அறிந்தேன். ஆனால், அந்த விவரத்தை நான் காதில் வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் சென்றதுதான் என் தவறு. ஒரு கேப்டனாக நான் அப்போதே அதைத் தடுத்திருக்க வேண்டும். நான் தடுக்கவில்லை என்பது, என் தலைமையின் தோல்வி என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
என் தவற்றை நான் ஒப்புக்கொண்டதால்தான் நான் மேல்முறையிட்டுக்குச் செல்லவில்லை. செல்லவும் விரும்பவில்லை. அந்த தவறை கடந்து வரவே விரும்புகிறேன். அந்த தவறு நடக்காமல் தடுக்க எனக்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும்கூட நான் பந்தைசேதப்படுத்தும் சம்பவம் நடக்காமல் தடுக்க தவறவிட்டேன். அந்த தவறுக்கு நான் பொறுப்பேற்றேன் என்பதை அறிவீர்கள்.
(பந்தை யார் சேதப்படுத்தினார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கூறுகையில்)
யார் பந்தை சேதப்படுத்தினார்கள், யாரெல்லாம் திட்டம் தீட்டியது என்பது குறித்து அதன்பின் கேட்டுக் கொள்ள விரும்பவில்லை. என்னைப் பொருத்தவரை அந்த சம்பவம் என் தலைமையின் தோல்வி. அந்த தவறில் இருந்து வெளியே வர முயற்சிக்கிறேன், ஒரு நல்ல மனதராக மாறி வருகிறேன்.
பெர்த்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை நினைக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. டிம் பெய்ன் தலைமையில் பல தோல்விகளை அணி அடைந்தபோது வேதனை அடைந்தேன், அணிக்கு என்னால் உதவமுடியவில்லையே என வருந்தினேன். ஆனால், பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது நான் தீவிரமான பயிற்சியில் இருக்கிறேன், மீண்டும் என் தாய்நாட்டு அணிக்கு திரும்புவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். அது உலககக்கோப்பை அல்லது ஆஷஸ் போட்டியை நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago