பெர்த் பிட்ச், அதுவும் கிரீன் டாப் விக்கெட், ஆனால் முதல் 2 மணி நேரத்தில் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளையின் போது விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது.
புவனேஷ்வர்குமாரை மிகவும் குறைவாக எடைபோடும் ரவிசாஸ்திரி, விராட் கோலி அவரை எதற்காக அழைத்துச் செல்ல வேண்டும்? தென் ஆப்பிரிக்காவில் உமேஷ் யாதவ்வை உட்கார வைத்தார், இங்கு புவனேஷ்வர் குமாரை உட்கார வைக்கிறார். அணித்தேர்வில் நிறைய தவறிழைக்கிறார் கோலி.
ஏரோன் பிஞ்ச் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களையும், மார்கஸ் ஹாரிஸ் அற்புதமான 6 பவுண்டரிகளுடன் 36 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.
விராட் கோலியின் கேப்டன்சி மிகச்சாதாரணமாக இருந்தது, இஷாந்த் சர்மா பந்து வீச்சு 7-4-16-0 என்று பார்த்து விட்டு ஏமாற வேண்டாம், சரியாகவே வீசவில்லை, நோ-பால் அச்சத்தில் அவர் லைன் படுமோசமாக அமைந்தது. லெந்த் சரியில்லை, இந்தப் பிட்சில் கூடுதல் வேகம் இருந்தால் நல்லது, ஆனால் அவர் 128-130 கிமீ வேகத்தில் வீசினார். நல்ல வேளையாக டேவிட் வார்னரெல்லாம் இல்லை, இருந்திருந்தால் இந்த இந்தியப் பந்து வீச்சுக்கு சாத்துமுறையே நடந்திருக்கும், இனியும் நடக்கும்.
மொகமது ஷமி மட்டுமே சிறப்பாக வீசினார். முதல் ஒரு மணி நேர ஆட்டத்தில் இஷாந்த் சர்மாவின் மோசமான பந்து வீச்சினால் 13 ஓவர்களில் ஆஸ்திரேலியா 47 ரன்களை எடுத்தனர், ஆனால் அதன் பிறகு கோலி பார்த்தார் ஒரு ஸ்லிப்பை எடுத்து விட்டு இயன் சாப்பல் விமர்சித்தது போல் பீல்டர்களைத்தள்ளித் தள்ளி நிறுத்தி அடுத்த ஒரு மணி நேரத்தில் 13 ஒவர்களில் 19 ரன்களையே ஆஸ்திரேலியாவினால் எடுக்க முடிந்தது. உமேஷ் யாதவ் பந்து வீச்சில் விக்கெட் வீழ்த்தும் முயற்சி இல்லை. நேர் நேராக ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசி இலகுவாக்கினார்.
பும்ராவின் முதல் பந்து எகிறியது, அதன் பிறகு கட்டினபசுவாய் வீசினார். ஆக்ரோஷம் இல்லை, கேப்டனிடமிருந்து களவியூக வாயிலாக எந்த ஒரு உத்வேகமும் பவுலர்களுக்குக் கிடைக்கவில்லை, கேப்டன் என்பவர் ஏதாவது நடக்குமாறு, வாய்ப்புகளை உருவாக்குபவராக இருக்க வேண்டும், ஆனால் விராட் கோலி ‘எல்லாம் தானாக நடக்கும்’ ரக கேப்டனாக அயல் நாட்டில் திகழ்கிறார். குழிபிட்சில் இருக்கும் ஆக்ரோஷம் நல்ல பிட்சில் அவரிடத்தில் இல்லை.
மார்கஸ் ஹாரிஸ் மிக அருமையாக 3 நேர் ட்ரைவ், ஒரு கவர் ட்ரைவ் மற்றும் ஒரு அபார கட் ஷாட்டை ஆடி பவுண்டரி விளாசினார். ஏரோன் பிஞ்ச் கொஞ்சம் தயக்கத்துடன் ஆடினாலும் நிற்கிறார். போகப்போக அடிக்கத் தொடங்கலாம்.
முதல் 2 மணி நேர ஆட்டத்தில் 2 இன்ஸ்விங்கரில் ஷமி, பிஞ்ச் பேடைத்தாக்கினார், ஒன்றைத் தவறாக ரிவியூ செய்து விரயம் செய்தார் விராட் கோலி, 2வது எல்பி. ஸ்டம்பை அடிப்பதாகத்தான் ரீப்ளே காட்டியது ஆனால் அதுவும் அம்பயர்ஸ் கால் என்பதாக இருக்கலாம்.
விராட் கோலி ஒரு த்ரோவை நேரடியாக ஸ்டம்பில் அடித்திருந்தால் பிஞ்ச் ரன் அவுட் ஆகியிருப்பார். ஆனால் நேர் த்ரோ சிக்கவில்லை, பிஞ்ச் நூலிழையில் தப்பினார்.
இந்த 3 வாய்ப்புகள் தவிர அடிலெய்டில் பீட் செய்தது போல் கூட இந்தியப் பந்து வீச்சு பீட் செய்யவில்லை. பெர்த் பிட்சில் உணவு இடைவேளைக்கு முன்பு புதிய பந்தில் விக்கெட் எடுக்க முடியவில்லை எனில் ஸ்பின்னர் இல்லாத பவுலிங் வரிசை நிச்சயம் நாள் முழுதும் திணறவே வாய்ப்பு.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago