சேப்பாக்கத்தில் இன்று 3-வது டி 20 ஆட்டம்:  ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி

By பெ.மாரிமுத்து

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என தன்வசமாக்கியது. இந்நிலையில் கடைசி டி 20 ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

முன்னணி பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்தி ரேலிய சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை தேர்வுக்குழு எடுத்துள்ளது. அதே வேளையில் வேகப்பந்து வீச்சு துறையை சமநிலைப்படுத்தும் வித மாக சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர் வாகம், கடந்த இரு ஆட்டங்களி லும் வாய்ப்பு கிடைக்காத வீரர் களின் திறமையை சோதித்து பார்க்கக்கூடும் என கருதப்படுகிறது.

இந்த வகையில் ஸ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஷ் நதீம் ஆகியோருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கக்கூடும். குல்தீப் யாதவ் இல்லாததால் யுவேந்திர சாஹல் மீண்டும் திரும்பக்கூடும். லக்னோ ஆட்டத்தில் 61 பந்துகளில் 111 ரன்கள் விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா, மீண்டும் ஒரு மிரட்டலான இன்னிங்ஸை வெளிப் படுத்த ஆயத்தமாக உள்ளார். அதே வேளையில் ஆஸ்திரேலிய தொட ருக்கு முன்னதாக ஷிகர் தவண், கே.எல்.ராகுல். ரிஷப் பந்த் ஆகி யோரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

நிடாஷ் டிராபி இறுதிப் போட்டி யில் அசத்திய தினேஷ் கார்த்திக் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்த முயற்சிக்கக்கூடும். கொல் கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட் டத்தில் குறைந்த இலக்கை துரத்திய போதிலும் தினேஷ் கார்த்திக் 31 ரன்கள் சேர்த்து சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் பும்ரா இல்லாத நிலையில் புவனேஷ்வர் குமாருடன் இணைந்து கலீல் அகமது நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் வழக்கமான தொடக்க வீரர்களான கிறிஸ் கெயில், எவின் லீவிஸ் இல்லாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மையர் ஜோடி டாப் ஆர்டர் பேட்டிங்கில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது பலவீனமாக உள்ளது. அனுபவ வீரர்களான கெய்ரன் பொலார்டு, தினேஷ் ரம்தின் மற்றும் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நட்சத்திர நாயகனாக ஜொலித்த கேப்டன் கார்லோஸ் பிராத் வெயிட் ஆகியோரும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. இது அணியின் செயல் திறனை ஒட்டுமொத்தமாக பாதித் துள்ளது.

பந்து வீச்சில் ஒஷேன் தாமஸ் மட்டுமே பலம் சேர்க்கிறார். ஆனால் அவருக்கு உறுதுணையாக மற்ற பந்து வீச்சாளர்களிடம் ,இருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப் படாமல் உள்ளது. தொடரை ஆறு தல் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டுமானால் மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து துறைகளி லும் ஒட்டுமொத்தமாக எழுச்சி கண்டால் மட்டுமே சாத்தியமாகும். சேப்பாக்கம் ஆடுகளம் சமீபகால போட்டிகளில் மந்தமாகவே செயல் பட்டு வந்துள்ளது. எனினும் இன் றைய போட்டிக்கான ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதக மாகவே இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப் டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், கிருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், புவனேஷ் வர் குமார், கலீல் அகமது, ஷாபாஸ் நதீம், சித்தார்த் கவுல்.

மேற்கிந்தியத் தீவுகள்: கார் லோஸ் பிராத்வெயிட் (கேப்டன்), டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட் மையர், ஷாய் ஹோப், ஒபெட் மெக்காய், கீமோ பால், ஹரி பியர், கெய்ரன் பொலார்டு, நிக்கோலஸ் பூரன், ரோவ்மான் பொவல், தினேஷ் ரம்தின், ஷேர்பேன் ரூதர்போர்டு, ஒஷேன் தாமஸ்.

தோனி இல்லாத சேப்பாக்கம்

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் மூலம் சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிய தோனி இல்லாமல் இந்திய அணி இன்றைய டி 20 ஆட்டத்தை சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இதற்கு முன்னர் ஒரே ஒரு சர்வதேச டி 20 ஆட்டம் மட்டுமே நடைபெற்றுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ரோஹித் சர்மா, தோனி களத்தில் நின்ற போதிலும் வெற்றி கைகூடாமல் போனது.

நேரம்: இரவு 7 மணி

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

25 mins ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்