பயிற்சி ஆட்டத்தில் இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் : கோலி கடும் ஏமாற்றம்

By இரா.முத்துக்குமார்

சிட்னியில் நடைபெறும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்று இந்திய பவுலர்கள் சொதப்பலாக வீசியதை அடுத்து கேப்டன் விராட் கோலி கடும் ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளார்.

ஏற்கெனவே பிரித்வி ஷா கேட்ச் பிடிக்கப் போய் இடது கணுக்கால் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமுடியாமல் போனதில் டென்ஷன் ஆன விராட் கோலி, இன்றைய இந்தியப் பந்து வீச்சு குறித்தும் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

ஆட்ட முடிவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது, இந்திய அணியின் 358 ரன்களை நாளைக் கடந்து முன்னிலை பெறவுள்ளது.

இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க முதல் தர போட்டிக்கான தரநிலை இந்தப் போட்டிக்கு வழங்கப்படவில்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் மொகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் லைன் மற்றும் லெந்த்தை தேடிக்கொண்டிருந்தனர். நட்சத்திர ஆஃப் ஸ்பின்னர் ரவி அஸ்வின் 24 ஓவர்கள் வீசி 63/1 என்று ஏமாற்றம் அளித்தார்.

இந்தியப் பந்து வீச்சு தரம் பற்றி அனைவரும் பெரிய அளவில் பேசி வரும் நிலையில் முதல் தர கிரிக்கெட்டே ஆடாத மாக்ஸ் பிரையண்ட், ஏரோன் ஹார்டி இருவரும் அரைசதம் கடந்தனர், டி ஆர்க்கி ஷார்ட், ஹேரி நீல்சன் அரைசதம் கடந்தனர். நீல்சன் 56 நாட் அவுட்,  கோலியை காட் அண்ட் பவுல்டு செய்த ஆல்ரவுண்டர் ஹார்டி 69 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார். அனுபவமற்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி 356/6 என்று வெற்றி நடைபோடுகிறது.

தொடக்க வீர்ர்களான டி ஆர்க்கி ஷார்ட் 91 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்களையும் பிரையண்ட் 65 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 62 ரன்களை அதிரடி முறையில் எடுக்க இருவரும் முதல் விக்கெட்டுக்காக 18.3 ஓவர்களில் 114 ரன்கள் என்று திணறிய இந்திய வேகப்பந்துக்கு எதிராக ஓவருக்கு 5 ரன்களுக்கும் மேல் வெளுத்துக் கட்டினர்.  கடைசியில் ஏரோன் ஹார்டி, நீல்சன் ஆகியோர் இணைந்து இன்னும் பிரிக்க முடியாத நிலையில் 122 ரன்கள் சேர்த்துள்ளனர்.

ஷமி, யாதவ் முதல் ஸ்பெல் மோசமாக அமைந்ததே தொடக்க வீரர்கள் அதிரடிக்குக் காரணம்.  விராட் கோலி இந்தத் தருணத்தில் மிகவும் ஏமாற்றத்துடனும் வெறுப்புடன் காணப்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் அஸ்வினின் பந்து வீச்சு அவரை உலகத் தரம் வாய்ந்த ஆஃப் ஸ்பின்னர் என்று கூற வைக்காது 54.71 என்ற சராசரியில் 21 விக்கெட்டுகள்தான் அஸ்வின் ஆஸி.யில் சாதித்தது. ஆனால் தொடக்க வீரர்களின் அதிரடியை அஸ்வின் தடுத்தார், பிரையண்ட் விக்கெட்டை வீழ்த்தினார்.

உணவு இடைவேளைக்குப் பின் மொகமது ஷமி நன்றாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 22 ஓவர்கள்ல் 81 ரன்கள் என்று சாத்து வாங்கி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இஷாந்த் சர்மா 16 ஓவர்கள் 57 ரன்கள் விக்கெட் இல்லை.  பவுலர்களின் போதாமையினால் விராட் கொலியே 2 ஓவர்களை வீசினார்.

நாளை அனுபவமற்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் இந்திய அணியைக் காட்டிலும் முன்னிலை பெறும். இது இந்திய அணிக்கு உளவியல் ரீதியான பின்னடைவை ஏற்படுத்தாமல் இருந்தால் சரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்