இந்திய அணியில் ‘ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ அதனால்தான் கூறுகிறேன்...: மீண்டும் இயன் சாப்பல்

By பிடிஐ

இந்திய அணியினரே ஜாக்கிரதை... ஆஸி. பவுலர்கள் உங்கள் தொண்டைக்குழியைக் குறிவைப்பார்கள் என்று சமீபத்தில் பிரபல கிரிக்கெட் இணையதள பத்தியில் எச்சரித்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல், மீண்டும் இந்திய அணியில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங், அதனால் ஆஸ்திரேலியாவைத்தான் என்னால் வெற்றி வாய்ப்பு உள்ள அணியாகக் கூற முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

சவுரவ் கங்குலி 2001 தொடரில் 17 டெஸ்ட்களில் தொடர்ச்சியாக வென்ற ஸ்டீவ் தலைமை ஆஸி. அணியின் வெற்றியை இடையூறு செய்து தொடரை 2-1 என்று கைப்பற்றியது முதல்.. பிறகு 2004 தொடரில் அங்கு சென்று 1-1 என்று சமன் செய்ததோடு ஆஸி. க்கு சொந்த மண்ணில் தோல்விபயத்தைக் காட்டியதையடுத்தே இந்திய, ஆஸ்திரேலிய தொடர் என்றாலே ஒரு சுவாரசியமான பகைமை உருவானது. இந்தத் தொடரில் இது டிசம்பர் 6ம் தேதி அடிலெய்ட் டெஸ்ட் முதல் புதுப்பிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயன் சாப்பல் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதள விவாதம் ஒன்றில் கூறியதாவது:

நான் ஆஸ்திரேலியா அணியைத்தான் வெற்றி வாய்ப்பு உள்ள அணியாகக் கருதுகிறேன், ஆனால் என்னிடம் ஏன் என்று கேட்காதீர்கள், இப்படிக் கூறுவதற்கு அறிவுபூர்வமான காரணம் என்னவெனில் இங்கிலாந்தில் இந்திய அணி தோல்வியடைந்தது எனக்கு ஏமாற்றம் அளித்தது. அந்தத் தொடரை இந்தியா வென்றிருக்க வேண்டும்.

திறமை மட்டத்தில் நிச்சயமாக இந்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தத்தான் வேண்டும், ஆனால் ஏதோ ஒன்று இந்திய அணியில் மிஸ்ஸிங். இன்னொரு விஷயம் ஆஸ்திரேலியாவின் வலுவான பந்து வீச்சு.

ஆஸி. பந்து வீச்சு பிரமாதமாக உள்ளது, ஆஸ்திரேலியாவில் அது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தியப் பந்து வீச்சு இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.

எனக்கு இந்தத் தொடரில் விராட் கோலியின் பேட்டிங்தான் சுவாரசியமாக எதிர்நோக்க வைக்கிறது. ஆஸ்திரேலிய பவுலர்கள், விராட் கோலி பேட்டிங் இந்தப் போட்டியை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். கடந்த முரை கோலி இங்கு அருமையாக ஆடினார்.

இன்னொரு விஷயம் இந்திய அணிக்குச் சாதகம் இந்த முறை பந்து வீச்சு வலுவாக உள்ளது. அவர்கள் பந்துகளை ஸ்விங் செய்பவர்கள். இங்கு இங்கிலாந்து போல் அவர்களுக்கு உதவியிருக்குமா என்பது சந்தேகமே, ஆகவே அவர்கள் இங்கு எப்படி வீசுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.  ஆகவே விராட் கோலி பேட்டிங், இந்தியப் பந்து வீச்சு இந்தத் தொடரில் மிகப்பெரிய கதையை எழுதவுள்ளது.

ரவிசாஸ்திரி கூறுவது போல் இந்தியாவிலிருந்து வந்த அணிகளில் இது கொஞ்சம் பெட்டர் அணிதான். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த சூழல் உதவும், இந்தியாவிலிருந்து இதுவரை வந்த வேகப்பந்து கூட்டணியை விட இப்போது வலுவாக உள்ளது.

ஆனால் பேப்பரில் இந்தியாவுக்குச் சாதகமாக பல அம்சங்கள் இருந்தாலும் அதனை களத்தில் எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதே முக்கியம்.

ஆஸ்திரேலிய அணி இந்த டெஸ்ட் தொடரில் 350-400 ரன்களை ஒரு இன்னிங்சில் எடுப்பார்கள் என்பதை ஒரு மிகப்பெரிய நம்பிக்கைவாதிதான் சொல்ல முடியும். அவர்கள் எப்போதாவஹ்டு 350 ரன்கள் எடுத்தால் அதற்கெ பலரும் ஆச்சரியப்படுவார்கள், நானும் அதில் ஒருவன்.

ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு ஒரு சமநிலையை வழங்கினர். ஆஸ்திரேலியாவில் 3வது வேகப்பந்து வீச்சாளராக அவர் இருக்கும் போது அடிலெய்ட், சிட்னியில் 2 ஸ்பின்னர்களை இந்திய அணி விளையாடச் செய்ய முடியும்.  இந்த மைதானங்களில் 5 பவுலர்கள் எப்போதும் உதவிகரமாகவே இருக்கும்.

இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE