விராட் கோலியிடம் மோதல் போக்கு வேண்டாம்; ‘மவுன சிகிச்சை’ போதும்: ஆஸி. க்கு டுபிளெசிஸ் அறிவுரை

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பரபரப்பாக பேசப்பட்டு வரும் பெரிய தொடர் தொடங்கவிருப்பதை அடுத்து  இந்திய கேப்டன் விராட் கோலியுடன் மோதல் போக்கு வேண்டாம் என்றும் ‘மவுன சிகிச்சை’ அளியுங்கள் என்றும் ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

“சர்வதேச கிரிக்கெட்டில் சிலர் இருக்கின்றனர், இவர்கள், விராட் கோலியைப் போன்றவர்கள் மோதல் போக்கை விரும்புபவர்கள், விராட் கோலி போன்றவர்களுடன் விளையாடும்போது நாங்கள் இதை உணர்ந்திருக்கிறோம். அவர் சண்டைக்கோழி, தயாராகவே இருப்பார்.

ஒவ்வொரு அணியிலும் ஓரிரு வீரர்கள் இப்படியிருப்பார்கள், நாங்கள் அவர்களைப் பற்றி அணிக்கூட்டத்தில் விவாதிப்போம். அதாவது இப்படிப்பட்ட வீரர்களுடன் மோதல் போக்கு வேண்டாம், ஏனெனில் அது அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதில்தான் போய் முடியும்.

தென் ஆப்பிரிக்காவில் விராட் கோலிக்கு ‘மவுன சிகிச்சை’ அளித்தோம், ஆனாலும் அவர் ரன்கள் அடித்தார், காரணம் அவர் அப்படிப்பட்ட  வீரர், பெரிய அளவில் அல்ல,  ஒரு சதம் அடித்தார், செஞ்சூரியன் பிட்ச் மந்தமாக இருந்த போது அவர் சதம் அடித்தார் அவ்வளவே.

எனவே ஒவ்வொரு அணியும் இம்மாதிரி வீரர்களுக்கு எதிராக சிலபல உத்திகளை வகுப்பார்கள், எங்களைப் பொறுத்தவரை விராட் கோலிக்கு ‘மவுன சிகிச்சை’ சிறந்தது” இவ்வாறு பேசியுள்ளார் டுபிளெசிஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE