‘ஆஸி. அணியினர் என்னை ஸ்லெட்ஜிங் செய்ததில்லை, வேலைக்கு ஆகாது என்று அவர்களுக்குத் தெரியும்’

வி.வி.எஸ். லஷ்மணின் சிறந்த இன்னிங்ஸ்கள் சிறந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடப்பட்டது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை. ஆஸ்திரேலியாவுடன் ஆடும்போது அவர்கள் நம்மில் சிறந்தவற்றை வெளியே கொண்டு வருவார்கள் என்கிறார் வி.வி.எஸ். லஷ்மண்.

உலகின் ஸ்டைலிஷ் பேட்ஸ்மென் என்று ஆஸ்திரேலியர்களாலேயே புகழப்பட்ட லஷ்மணின் வாழ்க்கை வரலாற்று நூல்  “281 and Beyond” மும்பையில் வெளியிடப்பட்டது, இதில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் லஷ்மண் கூறும்போது, “ஆஸ்திரேலியர்கள் கிரிக்கெட்டை ஆடும் விதம் எதிரணியினிடமிருந்து கூட சிறந்தவற்றை வரவழைக்கக் கூடியது. அவர்களுடன் ஆடுவது சவாலானது, அவர்கள் ஆக்ரோஷமானவர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். அவர்கள் என்னிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொண்டு வந்துள்ளனர், நான் மட்டுமல்ல இந்திய அணியிடமிருந்தே சிறந்தவற்றை அவர்கள் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

2005-ல் இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளித்து வென்றனர், அவர்களுக்குப் பிறகு இந்திய அணிதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணிதான் சவாலாகத் திகழ்ந்தனர். ஏதோ காரணங்களினால் அவர்களுடன் ஆடும்போது நம் ஆட்டம் வேறொரு மட்டத்துக்கு உயர்ச்சி அடைகிறது.

ஆஸ்திரேலியர்கள் என்னை ஸ்லெட்ஜிங் (வசை, கிண்டல்) செய்ததில்லை, எனக்கு எதிராக அது வேலைக்கு உதவாது என்பதை அவர்கள் சாமர்த்தியமாக அறிந்திருந்தனர். அணியில் என்னுடைய நிலை குறித்து எனது வலி நிறைந்த காலங்களில் நான் என் இயல்பான ஆட்டத்தை ஆடினேன், அதில் என் சிறந்த இன்னிங்ஸ்கள் வந்தன” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE