அறிமுக வ.தேச ஆஃப் ஸ்பின்னரின் உலக சாதனை;  ஒரே நாளில் 17 விக்கெட்டுகள்; ஹெட்மையரின் அனாயாச அதிரடி

By இரா.முத்துக்குமார்

வங்கதேசத்துக்கும் மே.இ.தீவுகளுக்கும் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் 17 விக்கெட்டுகள் மொத்தம் சரிந்தன. ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி தன் 2வது இன்னிங்சில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறி வருகிறது.

முன்னதாக வங்கதேசம் தன் முதல் இன்னிங்சில் 324 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் 246 ரன்களுக்குச் சுருண்டு 78 ரன்கள் பின் தங்கியது, தற்பொது வங்கதேசம் 5 விக்கெட்டுகள் கையிலிருக்க மொத்தம் 133 ரன்கள் முன்னிலை பெற்று தோல்வியைத் தடுக்க போராடி வருகிறது. ஆட்ட முடிவில் முஷ்பிகுர் ரஹிம் 11 ரன்களுடனும் மெஹதி ஹசன் மிராஸ் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

17 வயது இளம் நயீம் ஹசன் உலக சாதனை:

வங்கதேச இளம் அறிமுக ஆஃப் ஸ்பின்னர் நயீம் ஹசன் அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் சாதனை என்னவெனில் 17 வயது 355 நாட்களில் அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இளம் வயதில் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என்ற உலகச் சாதனைக்குச் சொந்தக் காரர் ஆனார்.

ஆனால் மே.இ.தீவுகளை 246 ரன்களுக்குச் சுருட்டிய அனுகூலங்களை வங்கதேசம் 55/5 என்று விக்கெட்டுகளை இழந்ததன் மூலம் கோட்டை விட்டுள்ளது. ஜோமெல் வாரிக்கன், ராஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச 2வது இன்னிங்ஸ் சரிவுக்குக் காரணமாயினர்.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய நயீம் ஹசன், ஆஸ்திரேலியாவின் பாட் கமின்ஸ் சாதனையை முறியடித்தார், பாட் கமின்ஸ் அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போது அவருக்கு 18 வயது.

ஷாகிப் அல் ஹசன் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இவர் ஷெய் ஹோப், கிரெய்க் பிராத்வெய்ட் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தி பிறகு கடைசியில் கேப்ரியல் விக்கெட்டைச் சாய்த்தார், தொடக்கத்தில் மே.இ.தீவுகள் 31/3 என்று தடுமாறியது. பிறகு ராஸ்டன் சேஸ் (31). சுனில் அம்ப்ரீஸ் (19) ஆகியோர் சிறு கூட்டணி அமைத்தனர். ஆனால் நயீம் ஹசன் இருவரையும் தன் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்த மே.இ.தீவுகள் 88/5 என்று ஆனது.

ஹெட்மையர் அனாயாச அதிரடி, டவ்ரிச்சுடன் அதிரடிக் கூட்டணி:

88/5 என்ற நிலையில் ஹெட்மையர், டவ்ரிச் கூட்டணி அமைத்தனர், இதில் ஹெட்மையர் கொலை வெறி மூடில் இருந்தார். 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்து அபாகர எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடினார். டவ்ரிச்சுடன் சேர்ந்து 92 ரன்கள் அதிரடி கூட்டணி அமைத்தார். இறங்கியவுடன் அறிமுக நயீம் ஹசனை மிட்விக்கெட்டில் அரக்கப் புல் ஷாட் பவுண்டரி விளாசினார். மீண்டும் நயிம் ஹசனை பின்னால் சென்று மிட் ஆனில் புல் செய்தார். தைஜுல் இஸ்லாம் வந்தவுடன் இறங்கி வந்து மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ், பிறகு ஸ்கொயர் லெக் மேல் மேலும் ஒரு சிக்ஸ். நயீம் ஹசனை மேலும் ஒரு பாயிண்டில் ஒரு அபார கட் பவுண்டரி அடுத்த பந்தே மேலேறி சற்றே ஒதுங்கி லாங் ஆஃப் மேல் சிக்ஸ், இதுதன ஷாட் ஆஃப் த டே அல்லது நாளின் சிறந்த ஷாட்.

ஷாகிப் அல் ஹசனை 2 ரன்களுக்குத் தட்டிவ் விட்டு 43 பந்துகளில் அரைசதம் கண்டார். பிறகு அதைக் கொண்டாட ஷாகிபை இறங்கி வந்து மிட் ஆஃப் மேல் பவுண்டரிக்குத் தூக்கி அடுத்த பந்தை உண்மையில் புல் ஷாட் போன்று ஆடினார், பந்து லாங் ஆனில் சிக்ஸ். 47 பந்துகளில் 63 எடுத்த நிலையில் மெஹதி ஹசன் மிராஸ் பந்து ஒன்றை தடுத்தாட முயன்றார், பந்துவெளியே திரும்பி எட்ஜ் ஆக முஷ்பிகுர் அருமையாக கேட்ச் எடுத்தார், ஹெட்மையர் அதிரடி முடிவுக்கு வந்தது.

இதன் பிறகு நயீம் ஹசன், பிஷு, ரோச், வாரிகன் விக்கெட்டுகளை வீழ்த்தி 5 விக்கெட்டுகளுடன் அறிமுக உலக சாதனையை நிகழ்த்தினார். டவ்ரிச் 101 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 63 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மே.இ.தீவுகள் ஒரு வழியாக 246 ரன்களை எட்டியது.

வங்கதேசம் தன் 2வது இன்னிங்சில் 55/5, மொத்தம் 133 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

மேலும்