பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெறும் முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்ட போது 16.1 ஓவர்களில் 153/3 என்று வலுவான நிலையில் உள்ளது.
ஸ்டாய்னிஸ் 18 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 31 ரன்களுடனும் கிளென் மேக்ஸ்வெல் 4 மிகப்பெரிய சிக்சர்களுடன் 23 பந்துகளில் 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்காக இதுவரை 6 ஓவர்களில் ஓவருக்கு 13 ரன்கள் வீதத்தில் 78 ரன்களைக் குவித்து ஆடிவருகின்றனர். மழையால் ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழைக்கு சற்று முன்னர் பும்ரா வீச, அது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான ஷார்ட் பிட்ச் பந்தாகும். அதனை ஸ்டாய்னிஸ் தூக்கி அடித்தார். தேர்ட்மேனில் நின்று கொண்டிருந்த கலீல் அகமடுக்கு பந்து நேராகச் சென்றது. அவர் நகரவேண்டிய தேவையில்லாமல் நேராக வந்த கேட்ச் அது, ஆனால் கேட்சை கோட்டை விட்டார் கலீல். பும்ரா கடும் கோபத்தில் ஒரு கத்து கத்தினார், அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காரணம் 75/3 என்ற நிலையிலிருந்து ஆட்டம் 6 ஓவர்களில் மாற்றம் கண்டது, குருணால் பாண்டியா 4 ஓவர்களில் 55 ரன்கள் விளாசப்பட்டார். மேலும் கலீல் அகமெடின் ஒரே ஓவரில் முன்னதாக அதிரடி வீரர் கிறிஸ் லின் 3 சிக்சர்களுடன் 21 ரன்களை விளாச கலீல் அகமெடின் அனாலைசிஸ் காலியானது.
பந்து வீச்சை ஆஸியினர் புரட்டி எடுக்கும் வேளையில் கலீல் அகமெட் முக்கியக் கட்டத்தில் ஸ்டாய்னிஸுக்கு கேட்சை விட்டது இந்திய அணிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பும்ரா, மேக்ஸ்வெலை 5 முறை இதுவரை வீழ்த்தியுள்ளார், அவரை சரியாகவும் மேக்ஸ்வெல் ஆடியதில்லை, இந்நிலையில் பும்ராவை விராட் கோலி மேக்ஸ்வெல் ஆடும்போது பயன்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. குல்தீப் யாதவ் மிக அருமையாக வீசி 4 ஓவர்கள் 24 ரன்கல் 2 விக்கெட் என்று அசத்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago