எல்லோரையும் போல்தான் தோனியும்.. அணியில் நீடிக்க வேண்டுமெனில் ஸ்கோர் செய்தாக வேண்டும்: சவுரவ் கங்குலி

தோனியால் இன்னும் கூட பந்துகளை தூக்கி வெளியே அடிக்க முடியும், அவர் பிரமாதமான கிரிக்கெட் வீரர், ஆனாலும் மற்றவர்களுக்கு உள்ளது போல்தான் அவருக்கும் ஸ்கோர்கள் அடித்தால்தான் அணியில் இருக்க முடியும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

கொல்கத்தா டாலிகஞ்ச் கிரிக்கெட் கிளப்புக்கு வந்த கங்குலி அங்கு கேள்விகளுக்குப் பதில் அளித்த போது தோனி பற்றிய கேள்விக்கு பதில் கூறினார்:

தோனி இன்னொரு சாம்பியன்.  உலக டி20 சாம்பியன் பட்டத்துக்குப் பிறகே 12-13 ஆண்டுகள் பிரமாதமான ஒரு கிரிக்கெட் வாழ்க்கை.  ஆனால் அனைவரையும் போல்தான் அவரும், அணியில் நீடிக்க வேண்டுமெனில் ரன்கள் எடுத்தாக வேண்டும். வாழ்க்கையில் இது மிகவும் அவசியமான ஒன்று.

நாம் என்ன வேலை செய்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் உங்களுக்கு என்ன வயதானாலும் சரி, என்ன அனுபவசாலியாக இருந்தாலும் சரி, டாப் லெவலில் நீங்கள் உங்களை தொடர்ந்து நிரூபித்தாக வேண்டும். இல்லையெனில் உங்கள் இடத்தை வேறொருவர் எடுத்துக் கொள்வார் என்பதே எதார்த்தம்.

தோனிக்கு என்னுடைய வாழ்த்துக்கள், சாம்பியன்கள் உச்சத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.  அவரால் இன்னும் பந்துகளை தூக்கி வெளியே அடிக்க முடியும் என்றே நான் நம்புகிறேன்.  ஏனெனில் அவர் ஒரு அபூர்வ கிரிக்கெட் வீரர்.

இவ்வாறு கூறினார் கங்குலி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE