டாக்கா: ஜிம்பாப்வே, வங்கதேச அணிகள் நாளை மிர்பூரில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சந்திக்கும் நேரத்தில் வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா அலட்சியம் காட்ட வேண்டாம் என்று தன் அணியினரை எச்சரித்துள்ளார்.
இரு அணிகளும் 69 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இதுவரை மோதியுள்ளன, இதில் வங்கதேசம் தன் நாட்டில் 27 போட்டிகளிலும் வெளியெ 13 போட்டிகளிலும் ஜிம்பாப்வேயை வென்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் வங்கதேசத்துக்க்கு எதிராக அதிக ரன்கள் எடுத்தவர் பிரெண்டன் டெய்லர் இவர் 46 இன்னிங்ஸ்களில் 1222 ரன்கள் எடுத்துள்ளார். மசகாட்சா, சிகும்பரா ஆகியோரும் வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்துள்ளனர்.
வங்கதேச அணியில் 3 வீரர்கள் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 1000 ரன்களை எடுத்துள்ளனர், ஆனால் அதில் முஷ்பிகுர் ரஹிம் மட்டுமே தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் காயம் காரணமாக ஆடாததால் வங்கதேச அணியைத் தோல்வி பயம் பிடித்து ஆட்டுகிறது, பெருங்குரல் எடுத்து ஆதரவு தரும் வங்கதேச ரசிகர்கள் முன்னிலையில் ஜிம்பாப்வேயிடம் தோற்றால் மைதானத்தில் களேபரம்தான், அதனால்தான் கேப்டன் மஷ்ரபே மோர்டசா, “
நாம் வெற்றி பெற்றால் அனைவரும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று கூறுவார்கள், ஆனால் தோற்று விட்டோம் என்றால் கேட்கவே வேண்டாம், அது வேறு ஒரு மாதிரியான சூழலை ஏற்படுத்தும்
அது நம் மனத்தில் ஒரு நீங்கா அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். நாம் ஜிம்பாப்வேயிடம் தோற்றதே இல்லையா என்பது போல் அல்ல இது, எனவே நாம் கவனமாக ஆட வேண்டும்.
ஜிம்பாப்வே அணியில் அவர்களது மூத்த வீரர்கள் அனைவரும் அணிக்குத் திரும்பியுள்ளனார். ஜிம்பாப்வேவுக்கு வெளியே வங்கதேசத்தில் அவர்கள் சிறப்பாக ஆடி சாதித்துள்ளனர் என்பதை நினைவில் கொண்டு ஆட வேண்டும்” என்று மஷ்ரபே உதறலுடன் பேசியுள்ளார்
வங்கதேச வாரிய அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் ஜிம்பாப்வே தோற்றது. ஆனால் ஜிம்பாப்வே கேப்டன் ஹாமில்டன் மசகாட்சா நம்பிக்கை தெரிவிக்கும்போது, “தென் ஆப்பிரிக்காவிலும் நேற்று இங்கும் சரியாக ஆடவில்லை. ஆனால் நம் கவனம் நாளைய போட்டியில்தான் உள்ளது. இங்கு சாதிக்க வந்துள்ளோம்.
இந்தத் தொடருக்காக நாங்கள் ஆர்வமுடன் காத்திருந்தோம், வீரர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர்” என்றார்.
நாளை இந்திய நேரம் 2 மணிக்கு இந்த முதல் போட்டி தொடங்குகிறது. இது பகலிரவு ஆட்டமாகும்.
வங்கதேச அணி: லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன், இம்ருல் கயேஸ், முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன், மஹ்முதுல்லா, ஃபசல் மஹ்மூத், மெஹதி ஹசன் மிராஸ், மோர்டசா, ரூபல் ஹுசைன், முஸ்தபிசுர் ரஹ்மான்.
ஜிம்பாப்வே அணி: ஹாமில்டன் மசகாட்ஸா (கேப்டன்), சாலமன் மைர், கிரெய்க் எர்வின், ப்ரெண்டன் டெய்லர், சான் வில்லியம்ஸ், சிகந்தர் ரஸா, எல்டன் சிகும்பரா, வெலிங்டன் மசகாட்ஸா, பிராண்டன் மவுத்தா, கைல் ஜார்விஸ், சதாரா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago