இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது பால்ய நண்பர் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து, மும்பை, புணேயில் சிறுவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி அகாடமியைத் தொடங்கி உள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு மக்கள் சேவையில் ஈடுபட்டார். இந்நிலையில், தன்னுடைய பால்ய நண்பர் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து சிறுவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி அகாடமியைத் தொடங்க உள்ளார்.
இதற்காக லண்டனில் உள்ள மிடில்செஸ் கவுண்டி அணியுடன் இணைந்து பயிற்சி அகாடமியை சச்சின் நடத்த உள்ளார். இதற்கு டெண்டுல்கர் மிடில் செக்ஸ் கிரிக்கெட் அகாடமி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் 4-ம்தேதி வரை டி.ஒய் பாட்டீல் அரங்கில் முதல்கட்டப் பயிற்சி நடக்கிறது. இரண்டாவதாக எம்ஐஜி கிளப்பில் நவம்பர் 6 முதல் 9-ம் தேதி வரையிலும் நடக்கிறது. 7 வயது முதல் 17 வயது, 13 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் பயிற்சிக்கு அழைக்கப்பட்டுத் தேர்வு செய்யப்படுகிறார்கள். புனே நகரில் உள்ள பிஷப் பள்ளிக்கூடத்தில் நவம்பர் 12 முதல் 15-ம் தேதி வரையிலும், 17 முதல் 20-ம் தேதி வரையிலும் பயிற்சி அகாடமி நடக்கிறது.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் 'தி இந்து'விடம்(ஆங்கிலம்) கூறுகையில், ''பள்ளியில் படிக்கும் போது நானும், வினோத் காம்ப்ளியும் இணைந்து கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். சமீபத்தில் இருவரும் சந்திக்க நேர்ந்தபோது, என்னுடைய பயிற்சித் திட்டம் குறித்து அவரிடம் விளக்கினேன். வினோத் உடனடியாகச் சம்மதித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகத் தெரிவித்தார்.
வினோத்துடன் இணைந்து நான் கிரிக்கெட் விளையாடிய அனுபவங்கள் என்னால் மறக்க இயலாது, இப்போது மீண்டும் நாங்கள் இணைகிறோம். உண்மையில் சிறப்பான நினைவுகளை மீண்டும் கொண்டுவரும்'' என்று தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 mins ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago