சொந்த மண்ணில் ஜடேஜா முதல் சதம்; 3வது ஆண்டாக தொடர்ச்சியாக 1000 ரன்கள் எடுத்தார் கோலி: இந்தியா 649 ரன்கள்

By இரா.முத்துக்குமார்

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் கோலியைத் தொடர்ந்து சதமெடுத்த ஜடேஜா டெஸ்ட் வாழ்வில் தன் முதல் சதத்தை எடுத்தார். 132 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் அவர் 100 ரன்களை எடுத்தார். இந்திய அணி 649/9 என்று டிக்ளேர் செய்தது.

மே.இ.தீவுகள் அணி தன் முதல் இன்னிங்ஸை மோசமாகத் தொடங்கியது, பிராத்வெய்ட், போவெல் இருவரும் மொகமது ஷமியிடம் ஆட்டமிழக்க அந்த அணி 12/2 என்று திணறி வருகிறது.

உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பந்தை ஆஃப் ட்ரைவ் பவுண்டரிக்கு அடித்து தன் 8வது ஃபோரை அடித்த கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 3வது ஆண்டாக 1000 ரன்களைக் கடந்தார். ஒரு ரிடர்ன் கேட்ச் லைஃபை தவிர இன்னிங்ஸ் அப்பழுக்கற்றது, 139 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி மிட் ஆனில் கேட்ச் கொடுத்து லூயிஸிடம் வெளியேறினார். கோலியுடன் ஜடேஜா சேர்ந்து இருவரும் 64 ரன்களைச் சேர்த்த கூட்டணியில் ஜடேஜா பிறகு அதிரடி ஆட்டம் ஆடினார்.

கோலிக்குப் பிறகு அஸ்வின் பிஷூவின் திரும்பிய பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். குல்தீப் யாதவ் 12 ரன்களில் பிஷூவிடம் எல்.பி.ஆனார். பிஷூவின் கடின உழைப்புக்கு அவருக்கு 4 விக்கெட்டுகள் கிடைத்தது, ஆனால் 217 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரன்கள் அதிகம் கொடுத்த வகையில் இரண்டாவது இடத்தில் பிஷூ உள்ளார்.

550 ரன்களில் டிக்ளேர் செய்யாமல் வாடிப்போன வெஸ்ட் இண்டீஸை மேலும் கொடுமைப்படுத்தும் விதமாக ஜடேஜா சதம் வரை இழுத்தடித்தது அட்டூழியமே. 8 விக்கெட்டுகள் விழுந்து விட்டன. ஆனால் ஜடேஜா அவசரமாகவே ஆடினார், அரைசதத்துக்குப் பிறகு சிக்ஸ் விளாசினார். இந்த முதல் சிக்ஸருக்குப் பிறகு 4 சிக்சர்கள் விளாசி சதத்துக்கு அடுத்த 34 பந்துகளில் விரைந்தார். மே.இ.தீவுகள் கேப்டன்சியில் எந்த ஒரு தடுப்பும் இல்லை, தாக்குதலும் இல்லை, ஜடேஜாவை சதமெடுக்க விட்டனர் என்றே கூற வேண்டும். ஒரு நெருக்கடியையும் மே.இ.தீவுகள் ஒருவருக்கும் கொடுக்கவில்லை. ஏதோ ஜடேஜாவுக்கு அவர் சொந்த மண்ணில் முதல் சதம் எடுக்கும் வாய்ப்பை கோலி அருளினார்.

கடைசியில் உமேஷ் யாதவ் 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்தார். எப்போதடா டிக்ளேர் செய்வார்கள் என்று களைப்படைந்திருந்த மே.இ.தீவுகள் அணிக்கு நிம்மதியளிக்குமாறு கோலி 649/9 என்று டிக்ளேர் செய்தார்.

மே.இ.தீவுகள் 2 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக ஆடிவருகின்றனர், ஷேய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மையர் களத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்