பும்ரா பிரமாதம்; புவனேஷ்வர் குமாருக்கு சாத்துமுறை: ஹோப், நர்ஸ் அபாரம்; மே.இ.தீவுகள் 283 ரன்கள் குவிப்பு

By இரா.முத்துக்குமார்

புனேயில் நடைபெற்று வரும் இந்திய-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் கோலியால் முதலில் பேட் செய்ய அனுப்பப்பட்ட மேற்கிந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது.

24வது ஓவரில் ரோவன் போவெல் விக்கெட்டை இழந்து 121/5 என்று தடுமாறிய நிலையில் ஹோல்டர் (32), ஹோப் (95) கூட்டணி 76 ரன்களைச் சேர்த்தனர். பிறகு 9வது விக்கெட்டுக்காக கிமார் ரோச் (15) ஆஷ்லி நர்ஸ் (40) இணைந்து வெளுத்துக் கட்ட கடைசி 8.3 ஓவர்களில் 66 ரன்களை மே.இ.தீவுகள் குவித்தது இதனையடுத்து 283 ரன்கள் வந்தது.

புவனேஷ்வர் குமார் கடைசியில் ஒரே ஓவரில் ஆஷ்லி நர்ஸிடம் சாத்துமுறை வாங்கி 21 ரன்களை வழங்க அவர் 10 ஒவர்களில் 70 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தார், 27 டாட்பால்கள் போட்டும், 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களை அவர் விட்டுக் கொடுத்தது சற்று அதிகம்தான். பும்ரா 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் மீண்டும் வெளுத்துவ் வாங்கிய ஹெட்மையர் விக்கெட்டுடன் 52 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சாஹல் 56 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கலீல் அகமட் சாத்துமுறையில் 65 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தொடக்கத்தில் ஹேம்ராஜ் 15 ரன்களுக்கு நன்றாக ஆடினார், அச்சுறுத்தலாக இருந்த போது பும்ராவின் 3வது ஷார்ட் பிட்ச் பந்து தொண்டைக்குழிக்கு வர ஹூக் ஷாட் டாப் எட்ஜ் எடுக்க தோனி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓடிச்சென்று டைவ் அடித்து அற்புதக் கேட்சை எடுத்தார். கெய்ரன் போவெல் 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்திருந்த போது பும்ராவின் மணிக்கு 145 கிமீ வேக அற்புத ஸ்விங் வேகப்பந்தில் எட்ஜ் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரோஹித் சர்மாவிடம் ஸ்லிப்பில் வெளியேறினார். மர்லன் சாமுவேல்ஸ் 9 ரன்களில் இடது கை வேக கலீல் அகமெடின் ஒரு வேகம் கூட்டிய சற்றே எகிறிய பந்தில் தோனியிடன் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

டாப் ஆர்டர் வேகத்தில் வெளியேற, ஹெட்மையர் வெளுத்துக் கட்டினார், மீண்டும் அனாயாச 3 சிக்சர்களுடன், (சாஹலை 2, குல்தீப்பை ஒன்று) 2 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த நிலையில் கொஞ்சம் அதீத ஆக்ரோஷமாக குல்தீப் பந்தை கொஞ்சம் மேலேறி வந்து சுற்றினார் பந்து சிக்கவில்லை இவரது பின் காலும் கிரீஸ் மேல் சரியாக இருந்தது, தோனி ஸ்டம்ப்டு செய்தார். 114வது ஸ்டம்பிங் இது. ரோவன் போவெலும் தேவையில்லாமல் ஒரு லெக் திசை பெரிய ஷாட்டுக்காக மட்டையைச் சுழற்ற பந்து மெதுவாக வந்து முதல் ஸ்லிப்பில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது. 121/5 என்று சரிவு கண்டது.

ஷேய் ஹோப் பிரமாதமாக ஆடி 113 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்தார், கலீல் அகமடை ஒரு பளார் ஷாட் மூலம் பவுண்டரி கண்டு அரைசதம் கண்டார். ஜேசன் ஹோல்டர் ஒருமுனையில் நிற்க ஹோப் கொஞ்சம் வேகம் கூட்டினார். குல்தீப்பை ஸ்வீப், கலீல் அகமடை ஒரே தூக்கு என்று வேகம் காட்டினார் ஹோப். ஹோல்டர் குல்தீப்பை ஒரு நேர் சிக்ஸ் அடித்து 32 ரன்கள் எடுத்திருந்த போது குமார் பந்தை லாங் ஆஃபில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். ஷேய் ஹோப் அடுத்தடுத்த செஞ்சுரிக்கு தயாராக இருந்த போது பும்ராவின் பிரமாதமான யார்க்கரில் ஆஃப் ஸ்டம்பை இழந்து வெளியேறினார். அதன் பிறகு கிமார் ரோச்சும் ஆஷ்லி நர்ஸும் 36 பந்துகளில் 56 ரன்கள் விளாசினர். ஆஷ்லி நர்ஸ் புவனேஷ்வரின் கடைசி ஓவரில் வெளுத்துக் கட்டி 21 ரன்கள் விளாசினார், கடைசியில் பும்ராவிடம் எல்.பி.ஆனார். ஒரு வழியாக மே.இ.தீவுகள் 121/5 என்பதிலிருந்து 283 ரன்களை எட்டியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்