மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டதில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வரும் தோனிக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், முதல் இரு போட்டிகளுக்கான அணி மட்டும் தேர்வு செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ரிஷாப் பந்த் முதல் முறையாக ஒருநாள் போட்டித்தொடருக்கு வாய்ப்பு பெற்றுள்ளார். ரிஷாப் பந்த் உள்ளே வந்ததைக் காரணம் காட்டி, தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், கடந்த பல போட்டிகளாக பேட்டிங்கில் படுமந்தமாக விளையாடிய தோனி மீது பல விமர்சனங்கள் எழுந்தபோதிலும் அவருக்குத் தேர்வாளர்கள் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருகின்றனர் என்பது வியப்பாக இருக்கிறது. மூத்த வீரர், கேப்டன்ஷிப்பில் அனுபவமானவர் என்ற காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு எத்தனை நாட்களுக்கு அணியில் இடம் பிடிக்க முடியும். இங்கிலாந்து தொடரிலும் தோனி சோபிக்கவில்லை.
தினேஷ் கார்த்திக்கைப் பொறுத்தவரை ஆசியக்கோப்பையில் 5 போட்டிகளில் களமிறங்கிய அவர் 146 ரன்கள் சேர்த்தார். இவரின் சராசரி 48 ரன்களும், ஸ்டிரைக் ரேட் 71 ஆக இருந்தது.
ஆனால், இது தோனியுடன் ஒப்பிடும் போது அதிகமாகும். தோனியின் ஆசியக்கோப்பை ஸ்டிரைக் ரேட் 62 மட்டுமே தினேஷ் கார்ததிக் சேர்த்த ரன்களைக் காட்டிலும் பாதியளவு (அதாவது 80 ரன்களுக்கு உள்ளாகவே) தோனி சேர்த்தார். ஆனால், தோனிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டில் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட அரை சதம் அடிக்கவில்லை. இந்த 16 போட்டிகளில் பிப்ரவரி மாதம் ஜோகன்ஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 42 ரன்கள் தோனி சேர்த்ததே அதிகபட்சமாகும். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிராக தர்மசலாவில் நடந்த போட்டியில் தோனி அரை சதம் அடித்துள்ளார். அதன்பின் அடிக்கவில்லை.
அதேசமயம், கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் 2017ம் ஆண்டு வாய்ப்பைப் பெற்ற தினேஷ் கார்த்திக் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதில் 2 அரை சதங்கள் அடங்கும். 2018-ம் ஆண்டில் இதுவரை 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 150 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதில் அதிகபட்சம் 44 ரன்கள் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கார்த்திக் சேர்த்திருக்கிறார்.
ஆசியக்கோப்பையில் இந்திய அணி நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் ரன்கள் அதிகமாகச் சேர்க்கவில்லை என்பது மட்டுமே காரணமாகப் பார்க்க முடியும். ஆனால், நடுவரிசை மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில், தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு அளிக்கப்படும் போது, உலகக்கோப்பைக்குள் நடுவரிசை வலுவடையும்.
ஏறக்குறைய 3 ஆண்டுகள் இடைவெளியில் இந்திய அணியின் ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக் கடந்த ஜூலை மாதம் இடம் பெற்றார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 13 பேட் செய்துள்ள தினேஷ் கார்த்திக் 350 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரியாக 50 ரன்களும், 71.57 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார்.
அதேநேரத்தில் தோனி 24 முறை பேட் செய்து 681 ரன்கள் குவித்துள்ளார். இதில் தோனியின் சராசரி 42.56, ஸ்டிரைக் ரேட் 73.14 ஆகும். கீப்பிங்கைப் பலப்படுத்தவும், பேட்டிங்கை வலுப்படுத்தவும் ரிஷாப் பந்த்தை தேர்வு செய்துள்ளதாகக் கூறும் தேர்வாளர்கள் , சராசரியும்,ஸ்டிரைக் ரேட்டும் தோனியைக் காட்டிலும் கூடுதலாக வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கை நீக்கியது ஏன் எனத் தெரியவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago