புரோ கபடி தொடரின் 6-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நாளை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, நடப்பு சாம்பியனான பாட்னா அணியுடன் மோதுகிறது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி அனுபவம்வாய்ந்த வீரர்களு டன் களமிறங்குகிறது.
பழைய வீரர்களில் அஜய் தாக் குர், அமித் ஹூடா ஆகியோர் மட் டுமே தக்கவைக்கப்பட்ட நிலையில் இம்முறை மன்ஜித் சில்லார், ஜஸ் வீர் சிங் ஆகியோருடன் துடிப்பான ரைடரான சுகேஷ் ஹெக்டேவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத னால் தமிழ் தலைவாஸ் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்தபடி இந்த சீச னில் புதிய பயிற்சியாளராக நியமிக் கப்பட்டுள்ள எடச்சேரி பாஸ்கரனும் அணியை தீவிரமாக தயார்படுத்தி உள்ளார். இந்நிலையில் இந்த சீசன் குறித்து எடச்சேரி பாஸ்கரன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:
அமித் ஹூடா, மன்ஜித் சில்லார், அஜய் தாக்குர், சுகேஷ் ஹெக்டே கூட்டணி இந்த சீசனில் எப்படி இருக்கும்?
இவர்கள் அருமையான கூட் டணி. உலகத் தரம் வாய்ந்த இந்த வீரர்களுடன் இளம் வீரர்களும் இணைந்துள்ளது அணியை சம பலம் அடையச் செய்துள்ளது.
மன்ஜித் சில்லார் சிறந்த ஆல்ர வுண்டர் அதேபோன்று ஜஸ்வீர் சிங்கும் சிறந்த ரைடர். ஆனால் இவர்கள் இருவரும் அவுட் பார்மில் உள்ளனர். ராஜஸ்தான் அணிக்காக கடந்த சீசனில் இவர் கள் அதிகம் சோபிக்கவில்லை. இதனால் இவர்களுக்கு இந்த சீசனில் நெருக்கடி இருக்கிறதா?
கடந்த சீசனில் இவர்கள் இரு வருமே காயத்துடன்தான் விளையா டினார்கள். தற்போது காயத்தில் இருந்து முழுமையாக அவர்கள் குணமடைந்துள்ளதால் நிச்சயம் சிறந்த திறனை வெளிப்படுத் துவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
அமீத் ஹூடா மட்டுமே கடந்த முறை டிபன்ஸில் பலம் சேர்த் தார். இம்முறை மன்ஜித் சில்லார் இணைந்துள்ளது பலத்தை அதிகரிக்குமா?
நிச்சயமாக டிபன்ஸ் பலம் அதி கரிக்கும். பயிற்சிகளில் அதிகம் சிரமம் எடுத்துள்ளோம். இரு கார்னர்களிலும் இவர்களது ஒருங்கிணைப்பு சிறந்த பலனை தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த சீசனில் திறமையை நிரூபித்தாக வேண்டும் என்ற நெருக்கடி ஏதும் உள்ளதா?
நிச்சயம் நெருக்கடி உள்ளது. கடந்த முறை அனுபவ வீரரான அஜய் தாக்குர் ஆட்டமிழந்து வெளியே அமரும் போது அணியை வழிநடத்த சீனியர் வீரர்கள் இல்லாமல் இருந்தனர். இதனால் சிறப்பாக விளையாடிய போதும் கடைசி கட்ட நிமிடங்களில் பல்வேறு ஆட்டங்களில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நிலைமை தற்போது நடைபெறாது. ஏனெனில் அனுபவம் வாய்ந்த மன் ஜித் சில்லார், ஜஸ்வீர் சிங் ஆகி யோர் உள்ளனர். இவர்கள் அணியை சிறப்பாக கொண்டு செல்வார்கள்.
கடந்த முறை ரைடரில் பிரபஞ் ஜன் அனைவராலும் அறியப்பட் டார். இம்முறை யாரேனும் தமி ழக வீரர்களில் சிறந்த ரைடர்கள் உள்ளனரா?
இம்முறை தமிழக வீரர்களில் ஜெயசீலன் சிறந்த ரைடராக உள் ளார். அவருக்கு நிச்சயம் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த சி.அருண், ஆல்ரவுண்டர் கோபு, பிரதாப், பார்த்திபன் ஆகியோரும் உள்ளனர். இவர்களில் ஜெயசீலன், பார்த்திபன் ஆகியோர் மட்டுமே புரோ கபடிக்கு புதியவர்கள்.
முதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியனான பாட்னா அணியை எதிர்கொள்கிறீர்கள். சிறந்த ரைடரான பர்தீப்நார்வாலுக்கு எதி ராக ஏதேனும் திட்டம் உள்ளதா?
பர்தீப்நார்வாலை மடக்குவதற் கான திட்டங்கள் உள்ளது. அனைத்து ஆட்டங்களிலும் எதி ரணி ரைடர்களை எப்படி மடக்க வேண்டும், அதற்கு டிபன்ஸில் எப் படி செயல்பட வேண்டும், எதி ரணி டிபன்ஸில் இருந்து எப்படி தப்பிக்க வேண்டும் என்பதற்கான தொழில்நுட்ப ரீதியிலான விஷயங் கள் குறித்தும் ஆலோசித்துள் ளோம்.
ஆசிய விளையாட்டில் இந் திய அணி அடைந்த தோல்வி புரோ கபடி லீக் தொடரில் வீரர்களி டையே ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?
ஆசிய விளையாட்டுப் போட்டி யில் அடைந்த தோல்விக்கு பல் வேறு காரணங்கள் உள்ளது. அது முடிந்துபோன விஷயம். இது அதில் இருந்து மாறுபட்ட விளை யாட்டு. இதற்காக வீரர்களை உத்வேகப்படுத்தி சிறந்த முறையில் தயார்படுத்தி உள்ளோம்.
இம்முறை அனுபவம், திறமை எந்த அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்?
அனுபவம் மட்டும் அல்ல திறமைக்கும், இளம் வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே வீரர் களை தேர்வு செய்துள்ளோம். இவை சரியான கலவையில் அமையும் போது சிறந்த முடிவுகள் கிடைக்கக்கூடும்.
கடந்த முறை டெக்னிக்கல் ரீதியாக பல்வேறு ஆட்டங்களில் தோல்வி கிடைத்தது. இதை சரிசெய்ய என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?
போட்டிக்கு தயார் ஆகுவதற்கான காலம் குறைந்த அளவே உள்ளது. டெக்னிக்கல் ரீதி யாக ஒவ்வொரு வீரர்களின் ஆட்டத் தையும் முழுமையாக மாற்ற முடி யாது. ஆனால் அவர்களிடம் உள்ள குறைகளை களைய முடியும். பொதுவாக வீரர்களிடம் 70 முதல் 80 சதவீத திறன் இருக்கும். அவர்களின் குறைகளை கண் டறிந்து அதனை நிவர்த்தி செய்வ தன் மூலம் கூடுதலாக 20 முதல் 30 சதவீத திறனை அவர்களிடம் இருந்து பெறமுடியும்.
இந்த சீசனில் உங்களது இலக்கு?
இறுதிப் போட்டிக்கு முன்னேறு வது எங்களது இலக்கு. இதற்கு அனைத்து வீரர்களும் ஒட்டுமொத்த அணியாக இணைந்து செயல்படு வதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக அவர்களுக்கு உத்வே கம் அளித்துள்ளோம்.
சுகேஷ் ஹெக்டே கடந்த சீச னில் குஜராத் அணிக்காக அபார மாக விளையாடினார். இந்த சீச னில் தமிழ் தலைவாஸ் அணியில் அவரது பங்களிப்பு எப்படி இருக்கும்?
சுகேஷ் ஹெக்டே சீனியர் வீரர் இல்லை. அவருக்கு 27 வயதுதான் ஆகிறது. எனினும் கபடியில் இந்த வயதில்தான் உச்சநிலையை அடைய முடியும். கடந்த முறை குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர், இம்முறை எங்கள் அணிக்கு விளையாடுவது சாதகமான விஷயம்தான்.
உங்களின் கள வியூகம் தாக்கு தல் ஆட்டமாக இருக்குமா? தடுப் பாட்டத்தில் கவனம் செலுத்து வதாக இருக்குமா?
கபடி விளையாட்டில் தாக்கு தல் ஆட்டம், தடுப்பாட்டம் என இரண்டுமே முக்கியம்தான். ஆட்டத் தின் சூழ்நிலைக்கு ஏற்ப இரு துறை யிலும் கவனம் செலுத்த வேண் டும். மேலும் எதிரணியின் பலம், பலவீனத்தையும் அறிந்து செயல் பட வேண்டும். அதேபோன்று நமது பலம், பலவீனத்தையும் அறிந்திருப்பது அவசியம்.
ஈரான் அணி நமக்கு கடும் சவால் அளித்து வருகிறது இந்த விளையாட்டின் வளர்ச்சியால் இந்தியாவின் ஆதிக்கத்தை தொடர செய்ய முடியுமா?
புரோ கபடியில் ஏராளமான ஈரான் வீரர்கள் விளையாடுகிறார்கள். இத னால் அவர்கள் நமது ஆட்ட நுணுக்கங்களை அறிந்துகொள் வது இயல்புதான். இந்த ஆட்டங் களின் வாயிலாகவும், வீடியோக் களின் பகுப்பாய்வு மூலமும் அவர் கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். ஆசிய விளை யாட்டில் ஈரான் அணி கடந்த முறை வெள்ளிப் பதக்கமே வென்றது. இதனால் அவர்களுக்கு நெருக்கடி இல்லை. ஆனால் 7 முறை தங்கம் வென்றுள்ள இந்திய அணிக்கு பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடியும் இருந்தது.
உலக அரங்கில் கபடியில் இந்தியா வால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியும். அதற்காக இன்னும் கூடுதலாக கடினமாக பாடுபட வேண்டும். இவ்வாறு எடச்சரி பாஸ்கரன் கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago