ஆசிய நாடுகள் இடையே ஒற்றுமை, தோழமையை ஏற்படுத்தும் வகையில் இந்தியாதான் இந்த போட்டியை 1951-ம் ஆண்டு நடத்தியது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த விளையாட்டு போட்டிகள் ஆசியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் நடைபெறுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டி 2 நகரங்களில் நடைபெறுவது இதுவே முதன்முறை. தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஆகி யவை ஜகார்த்தாவில் உள்ள கலேரா புங் கர்னோ மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு போட்டியை நடத்தும் நகரத்தை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வியட்நாம் நகரான ஹனோய் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக அந்நகரம் போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து போட்டியை நடத்தும் உரிமையை இந்தோனேஷியாவுக்கு வழங்கியது ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பு.
முறைப்படி இந்த போட்டி 2019-ம் ஆண்டு தொடக்கத்தில்தான் இந்தோனேஷியா நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் பொதுத்தேர்தல் காரணமாக இந்த ஆண்டே நடத்தப்படுகிறது.
போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங் களாக பிகின் பிகின் பறவை, அட்டுங் மான், காண்டாமிருகம் ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கான ஜோதி ஓட்டம் கடந்த மாதம் 16-ம் தேதி டெல்லியில் தொடங்கியது. இந்த ஜோதி ஓட்டமானது ஆசிய கண்டத்தின் 54 நகரங்கள், இந்தோனேஷியாவின் 18 மாகாணங்கள் வழியாக வரும் 17-ம் தேதி ஜகார்த்தாவை சென்றடைகிறது.
ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பில் உறுப்பினர் களாக உள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மற் றும் நிர்வாகிகள் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கின்றனர். ஜகார்த்தா வில் உள்ள மைதானங்களில் 30 போட்டிகளும், பாலேம்பங்கில் உள்ள மைதானங்களில் 10 போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இந்த விளையாட்டு திருவிழாவுக்காக 20 ஆயிரம் பேர் தங்கும் வகையில் விளையாட்டு கிராமம் வடக்கு ஜகார்த்தாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேவேளையில் ஊடகவியலாளர்களுக்கான கிராமம் தெற்கு ஜகார்த்தாவில் அமைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மற்றொரு நகரமான பாலேம்பங் நகருக்கு ஜகார்த்தாவில் இருந்து விமான வழியாக சென்றடைய 47 நிமிடங்கள் ஆகும்.
மொத்தம் 40 விளையாட்டுகளில் 462 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 540 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. வட கொரியா, தென் கொரியா நாடுகள் ஒருசில விளையாட்டுகளில் ஒருங் கிணைந்த அணியாக கலந்து கொள்கிறது. இம்முறை இந்தியா 34 விளையாட்டுகளில் பங்கேற்கிறது. பேஸ்பால், கால்பந்து ஜெட் ஸ்கி, மார்டன் பென்டத்லான், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய 7 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி பங்கேற்கவில்லை. ஹாக்கி, டேபிள் டென்னிஸ், வில்வித்தை, பாட்மிண்டன், கபடி, தடகளம், மயல்யுத்தம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் திறன் ஏற்ற, இறக்கங்களாகவே இருந்து வந்துள்ளது. அதிகபட்சமாக போட்டி அறிமுகமான 1951-ம் ஆண்டு இந்தியா 2-வது இடத்தை பிடித்திருந்தது. ஆனால் தற்போது 5 முதல் 8-வது இடத்தை பிடிப்பதற்காக மல்லுக்கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மாறாக அண்டை நாடான சீனாவே, காலம் காலமாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவை தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான் ஆகிய அணிகளும் கோலோச்சி வருகின்றன. இந்த நாடு களுடன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவையும் இந்தியாவுக்கு கடும் போட்டியாளர்களாக இருந்து வருகின்றன.
இம்முறையும் சீனாவே அதிக பதக்கங்களை வேட்டையாடும் என கருதப்படுகிறது. அந்த நாட்டுக்கு தென் கொரியா கடும் சவால் அளிக்கக் கூடும். இந்த இரு நாடுகளுடன் ஜப்பான், ஈரான், கஜகஸ்தான், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடு கள் இடையே முதல் 7 இடங்களை பிடிப்பதற்கு போட்டி நிலவக்கூடும். ஆசிய விளையாட்டு போட்டிகளை உருவாக்கிய இந்தியா 1982-ம் ஆண்டும் இந்த போட்டிகளை நடத்தியுள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளதால் இம்முறை ஆசிய விளையாட்டு போட்டி இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தத் தொடரில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்கள், ஒலிம்பிக் போடியம் திட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா 26 தங்கத்துடன் மொத்தம் 66 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்திருந்ததால் இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியிலும் சிறப்பாக செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா பாட் மிண்டன், டேபிள் டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றில் பதக்கங்களை குவித்தது. ஆனால் ஆசிய விளையாட்டில் இதேபோன்று பதக்கங்களை அள்ளுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. கிட்டத்தட்ட இந்தத் தொடரானது ஆசிய அளவில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஒரு முன்னோட்ட தொடராகவே பார்க்கப்படுகிறது.
2014-ம் ஆண்டு இன்ஜியானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார் பில் 541 பேர் பங்கேற்ற நிலையில் மொத்தம் 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலப் பதக்கத் துடன் 57 பதக்கங்களை கைப்பற்றி 8-வது இடத்தையே பிடித்திருந்தது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டிருந்ததால் இம்முறை பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேற்றம் காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள போட்டிகள், நட்சத்திர வீரர், வீராங்கனைகள் குறித்து வரும் நாட்களில் பார்ப்போம் சற்று விரிவாக...
எந்தெந்த விளையாட்டுகள்
நீச்சல்(டைவிங், நீச்சல், ஆர்ட்டிஸ்டிக் ஸ்விம்மிங், வாட்டர் போலோ), வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால் (பேஸ்பால், சாப்ட்பால்), கூடைப்பந்து (3X3 கூடைப்பந்து, கூடைப்பந்து), பவுலிங், குத்துச்சண்டை, பிரிட்ஜ், படகு வலித்தல் (டிராகன் போட், சாலோம், ஸ்பிரின்ட்), சைக்கிளிங் (எம்எம்எக்ஸ், மவுண்டைன் பைக், ரோடு, டிராக்), குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், டிராம்போலைன்), ஹேண்ட்பால், ஜெட் ஸ்கி (சாகச விளையாட்டு), ஜூடோ, கபடி, கராத்தே, தற்காப்பு கலைகள் (ஜூஜிட்சு, குராஷ், பென்காக் சிலாட், சம்போ, வூஷூ), மார்டன் பென்டத்லான், பாரா கிளைடிங், ரோலர் ஸ்போர்ட்ஸ், படகுப்போட்டி, ரக்பி செவன்ஸ், பாய்மரப்படகு, செபக் டக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்போர்ட் கிளிம்பிங், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, டென்னிஸ் (டென்னிஸ், சாப்ட் டென்னிஸ்), டிரையத்லான், வாலிபால் (பீச் வாலிபால், உள்ளரங்க வாலிபால்), பளு தூக்குதல், மல்யுத்தம்.ஆசிய கண்டத்தின் பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் வரும் 18-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பங்கேற்கும் நாடுகள்
இந்தியா, ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீனா, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜப்பான், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மலேசியா, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், நேபாளம், ஓமன், பாகிஸ்தான், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், இலங்கை, சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன்.எந்தெந்த விளையாட்டுகள்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago