ஆஸ்திரேலிய இடது கை வேகப்புயல் மிட்செல் ஜான்சன் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான மிட்செல் ஜான்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்பே ஓய்வு பெற்றாலும் தனியார் டி20 லீகுகளில் ஆடிவ்ந்தார், இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டிகளின் போது முதுகுவலிப் பிரச்சினை ஏற்பட்டது, இதனால் உடல் ஒத்துழைக்கவில்லை என்று அவர் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.
பெர்த் நவ் ஊடகத்தில் மிட்செல் ஜான்சன் எழுதியபோது, “முடிந்தது, நான் என் கடைசி பந்தை வீசினேன்...என் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தினேன். இன்று நான் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன்.
என்னுடைய போட்டி மனப்பான்மை என்னை விட்டு விலகவில்லை, இதனைப் பயன்படுத்தி பயிற்சியளிக்கும் அல்லது ஆலோசனைப் பொறுப்புகளில் பங்காற்றுவது பற்றி யோசிப்பேன்.
என்னால் 100% ஆட முடியாதபோது, என்னால் அணிக்கு 100% பங்களிப்பு செய்ய முடியாத போது என்ன செய்வது, எனக்கு அணிதான் முக்கியம்.” என்று கூறியுள்ளார்.
73 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜான்சன் 313 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 153 ஒருநாள் போட்டிகளில் 239 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இவர் சில வேளைகளில் ஆல்ரவுண்டராகவும் பங்களிப்பு செய்துள்ளார் ஒரு டெஸ்ட் சதமும் 11 அரைசதங்களும் அடித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 123 நாட் அவுட்டாகும். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் 73 நாட் அவுட்டாகும்.
2013/14 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை கடுமையாக அச்சுறுத்தியதில் இங்கிலாந்து அணியின் வரிசையே சீரழிந்தது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரில் இங்கிலாந்திலிருந்து முக்கிய வீர்ர்கள் ஒன்று விலகினர், அல்லது ஓய்வு பெற்றனர், கெவின் பீட்டர்சன் ஆடிய கடைசி தொடரும் அதுதான், இங்கிலாந்து அவரை பல்வேறு சர்ச்சைகள் காரணமாக நீக்கியதும் மிட்செல் ஜான்சன் உச்சத்தில் இருந்த அந்தத் தொடர்தான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago