இந்திய கிரிக்கெட்டில் குறைந்தது சுனில் கவாஸ்கர் காலத்திலிருந்தே ஒரே பேட்ஸ்மென் மீது அணியின் ஒட்டுமொத்த சுமையும் வீழ்வதைத்தான் பார்த்து வருகிறோம், அந்த வரிசையில் 90-களில் தொடங்கி 10-11 ஆண்டுகளுக்கு சச்சின் அயல்நாடுகளில் (ஆஸி., தெ.ஆ. இங்கிலாந்து, நியூஸி.) எப்படி தனிநபராகச் செயல்பட்டாரோ அதே போல்தான் விராட் கோலி தோள்களிலும் 2013 முதல் சுமை இறக்கி வைக்கப்பட்டுள்ளது.
புள்ளி விவரங்கள் ரீதியாகவே சச்சின் டெண்டுல்கரிடமிருந்து பொறுப்புத் தண்டத்தை விராட் கோலி பெற்றதாகவே புள்ளி விவரங்கள் அடிப்படையில் கூற வேண்டியுள்ளது.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் கோலி மட்டுமே 200 ரன்கள் மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் சேர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் 214 ரன்கள்!
விராட் கோலி சுமையை தான் மட்டுமே சுமப்பது இது முதல் முறையல்ல, கடந்த தென் ஆப்பிரிக்க தொடரிலும் இதே நிலைமைகளைத்தான் நாம் பார்த்தோம். கோலியின் இந்த தனிமனித தீரம் 90களில் தொடங்கிய சச்சினின் தீரத்துடன் ஒப்பிடத்தக்கது.
நவம்பர் 91 முதல் 2001 டிசம்பர் வரை சச்சின் டெண்டுல்கர் அயல்நாடுகளில் (ஆஸி., தெ.ஆ. இங்கிலாந்து, நியூஸி.) 23 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1991 ரன்களை 52.39 என்ற சராசரியில் எடுத்துள்ளார், இதில் 9 சதங்கள், 5 அரைசதங்கள். விராட் கோலி 2013 டிசம்பர் தொடங்கி அயல்நாடுகளில் 17 டெஸ்ட் போட்டிகளில் 1798 ரன்கள் சராசரி 54.48, 8 சதங்கள், 5 அரைசதங்கள்.
ஆனால் சச்சின் இப்படி ஆடியும் இந்தியா 13 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி தழுவ, விராட் கோலி ஆடும் இந்தக் காலக்கட்டத்தில் 17 டெஸ்ட்களில் 2-ல் இந்தியா அங்கு வென்றுள்ளது 10-ல் தோல்வி தழுவியுள்ளது.
ஆஸி., தென் ஆப்பிரிக்கா, நியூஸி, இங்கிலாந்தில் கோலியின் சராசரி விகிதம்:
2013-14 தெ.ஆ.வில் இந்திய அணி: 68
2013-14 நியூஸி.யில் இந்தியா: 71.33
2014 இங்கிலாந்தில் இந்தியா: 13.4
2014-15 ஆஸி.யில் இந்தியா: 86.5
2017-18 தெ.ஆ.வில் இந்தியா: 47.66
2018 இங்கிலாந்தில் இந்தியா (எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் வரை):100.
மேலும் இந்திய டாப் 7 வீரர்களில் சச்சின் ஆடிய போது அவரது சராசரி 52.39, மற்றெல்லோரும் 26.48.
தற்போது கோலி 54.48 சராசரி, மற்றெல்லோரும் சேர்ந்த சராசரி 28.13.
டெண்டுல்கர் காலக்கட்டத்தில் அவர் ஆஸி., இங்கிலாந்து, நியூசி., தென் ஆப்பிரிக்காவில் வைத்துள்ள சராசரி 41 இன்னிங்ஸ்களில் 52.39 என்றால், இதே காலக்கட்டத்தில் இதே இடங்களில் 40-க்கும் மேல் சராசரி வைத்திருந்த வீரர்கள், ராகுல் திராவிட் (46.66), கங்குலி (45.19), லஷ்மண் (41.10)
இதே போல்தான் கோலி தற்போது ஆதிக்கம் செலுத்தும் காலக்கட்டத்தில் புஜாரா, தவண், ரோஹித் சர்மா, ராகுல் ஆகியோரது சராசரி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முரளி விஜய் கூட கடும் ஏமாற்றமளித்து வருகிறார். இன்னொரு கொடுமை என்னவெனில் இந்த நாடுகளில் புஜாரா, தவன், ரோஹித், ராகுலை ஒப்பிடுகையில் புவனேஷ்வர் குமாரின் பேட்டிங் சராசரி (சுமார் 31) சொல்லிக்கொள்ளும்படியாக உள்ளது.
டெண்டுல்கர் காலக்கட்டத்தில் 2002- முதல் திராவிட், லஷ்மண், கங்குலி, கம்பீர், சேவாக் ஆகியோர் அயல்நாடுகளில் பங்களிப்பு செய்யத் தொடங்கியவுடன் சச்சினின் சுமை குறைந்தது. ஆனாலுமே சச்சினின் சராசரி இதன் பிறகும் கூட இந்நாடுகளில் மற்றவர்களை ஒப்பிடும் போது அதிகமே, திராவிட் மட்டுமே சச்சினுக்கு அருகில் வருகிறார்.
ராகுல் திராவிட்டின் சராசரியும் சதங்களும், சேவாக் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்ட பிறகு கடுமையாக உயர்ந்திருப்பதையும் இதே போன்று புள்ளிவிவர ஆய்வுக்குட்படுத்துவதும் அவசியமாகிறது. சேவாக் புதிய பந்தை அடித்து நொறுக்கி பவுலர்களின் லைன் அண்ட் லெந்தை காலி செய்த தருணங்களில் திராவிடின் எழுச்சியமைந்தது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஆகவே இப்போதே தொடக்க, நடுக்கள வீரர்களை மாற்றும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் இந்தியத் தேர்வாளர்கள். குறிப்பாக மயங்க் அகர்வால், பிரிதிவி ஷா ஆகியோரை விரைவிலேயே தவன், விஜய்க்குப் பதிலாக இறக்க வேண்டும். புஜாரா, ரஹானேவுக்கும் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் உள்ளிட்டோரை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
புள்ளிவிவரங்கள்: ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago