ஆசிய விளையாட்டு போட்டியைக் காண ஜகார்த்தாவில் குவிந்த ரசிகர்கள்

By ஏஎஃப்பி

ஆசிய விளையாட்டுப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கான வெளி நாட்டு ரசிகர்கள் ஜகார்த்தாவில் குவிந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 18-ம் தேதி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடி வடைந்துள்ளன. போட்டி தொடங்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் குவிந்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்த படியாக உலகில் நடைபெறும் 2-வது மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியாக ஆசிய விளையாட்டு உள்ளது. இந்தப் போட்டிக்காக சுமார் 16 ஆயிரம் வீரர், வீராங் கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், மேலாளர்கள், டாக்டர் கள் வரவுள்ளனர். போட்டிகள் ஜகார்த்தா, பாலேம்பாங் நகரங் களில் கட்டப்பட்டுள்ள ஸ்டேடி யங்களில் நடைபெறவுள்ளன.

போட்டிக்காக ஜகார்த்தாவுக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த ரசிகர் கள் வந்து குவிந்துள்ளனர். அதே போல உள்நாட்டு ரசிகர்களும் இந்த நகரங்களுக்கு படையெடுத் துள்ளனர்.

45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சுமார் 40 விதமான விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். இந்தோனேசியாவில் நிலநடுக்க அபாயம், வனப்பகுதி யில் ஏற்படும் தீ போன்ற பிரச் சினைகள் இருந்தாலும், ரசிகர்கள் போட்டியைக் காணக் குவிந்துள்ள னர். சமீபத்தில் இந்தோனேஷியா வில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 13 பேர் கொல்லப் பட்டனர். இதுபோன்ற அபாயங்கள் இருந்தும் ரசிகர்கள் பாலேம்பாங், ஜகார்த்தா நகரங்களை மொய்க்கத் தொடங்கிவிட்டனர். இரு நகரங் களில் உள்ள ஓட்டல்கள், விடுதிகள், அருகிலுள்ள நகரங்களில் உள்ள ஓட்டல்களிலும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதுகுறித்து போட்டி அமைப் பாளர் எரிக் தோஹிர் கூறிய தாவது: போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் எந்தவித பிரச்சினை யும் இன்றி நடந்து முடிந்துள்ளது. அப்படி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும் அதை நாங்கள் உடனடியாகத் தீர்த்து வைப்போம்.

இந்த விளையாட்டுப் போட்டி யில் சில உள்ளூர் விளையாட் டுக ளையும் சேர்த்துள்ளோம். இதனால் இந்தோனேஷியா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்