உலகின் அதிவேக மனிதன், ஒலிம்பிக் தங்கங்கள் வென்ற நாயகன், உசைன் போல்ட் கூட தன்னால் தொழில்பூர்வ கால்பந்தாட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால் இந்த வாரத்தில் ஒரு அமெச்சூர் அணியுடன் அவர் முதல் போட்டியில் களமிறங்க வாய்ப்பிருப்பதால் கடுமையாக தன் உடற்தகுதியை மேம்படுத்த போராடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
8 முறை ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டுக்கு ஆஸ்திரேலியாவின் செண்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் அணி அவரது கால்பந்து கனவை நிறைவேற்ற வாய்ப்பளித்துள்ளது. இதனையடுத்து தன் உடற்தகுதியை அதிகம் எதிர்பார்க்கும் கால்பந்தாட்டத்துக்காக மேம்படுத்த கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் உசைன் போல்ட்.
சிட்னி நகருக்கு வடக்குப்பகுதியில் உள்ள கோஸ்போர்டில் தன் அணியின் மற்ற வீரர்களுடன் சரிசமமாகத் திகழ போராடி வருகிறார்.
சிறிது உடற்பயிற்சிக்குப் பின் கொஞ்சம் ஜாக்கிங் போனார், பிறகு பந்துகளை அடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பந்துகளை பாஸ் செய்வது சரியாக இருந்தாலும், அவரால் எதிர்பார்ப்புக்கு இணங்க ஓட முடியவில்லை என்கிறது அணி நிர்வாகம்.
கால்பந்தாட்டத்துக்கான உடற்தகுடி இல்லாததால் மற்ற வீரர்களை விட உசைன் போல்ட் விரைவில் களைப்படைந்து ஓய்வுக்குச் சென்று விடுகிறார்.
நிறுத்தி நிறுத்தி ஆட வேண்டியதால் தனக்கு அது பெரும் போராட்டமாக இருப்பதாக உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
“பெரிய சவால் என்னவெனில் நின்று பிறகு கொண்டு செல்ல வேண்டும், பிறகு நிற்க வேண்டும் என்ற முறை எனக்கு போராட்டமாக இருக்கிறது, ஸ்பீட் பிக் செய்ய வேண்டும் பிறகு குறைக்க வேண்டு, பிறகு மீண்டும் ஸ்பீட் எடுக்க வேண்டும் என்பது எனக்கு பழக்கமில்லாத ஒன்று, ஆனாலும் எல்லாமே பயிற்சிதான், இதற்கு நான் தயாராகிவிட்டேன். இப்போது வழிமுறைகளக் கற்று விட்டேன், இனி இப்படியே மேம்படுத்த வேண்டியதுதான்” என்றார் உசைன் போல்ட்.
குறித்த காலத்தில் ஏ-லீக் வீரராக உசைன் போல்ட்டைக் களமிறக்க மரைனர்ஸ் அணி தயாராக உள்ளது.
சீசனுக்கு முந்தைய நட்பு முறை கால்பந்தட்டம் வரும் வெள்ளியன்று நடைபெறுகிறத், அதில் முதல் முறையாக ஒரு போட்டி சார்ந்த ஆட்டத்தில் களம் காணவுள்ளார் உசைன் போல்ட். ஆனால் இதில் பதிலி வீரராக களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளப் பயிற்சியாளர் மைக் முல்வி கூறும்போது, “வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் சில நிமிடங்கள் அவர் ஆடுவார் என்றே கருதுகிறேன்” என்றார், இந்த நட்பு முறை ஆட்டம் பே-டிவியில் நேரலையாக ஒளிபரப்பாகிறது உசைன் போல்ட் இதில் ஆடுவதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பயிற்சியாளர் மேலும் கூறுகையில், “அவர் நன்றாக ஆடுகிறார், ஆனால் நாங்கள் அவரைச் செய்யச் சொல்லும் விஷயங்களை அவர் கடந்த சில ஆண்டுகளாகச் செய்ததில்லை என்பதுதான். அத்லெட்டிக் போட்டிகளுக்கிடையே கால்பந்து ஆடியிருக்கிறார், அவருக்கு ஒரு அடிப்படையான கால்பந்து திறமை உள்ளது. அதில் பிரச்சினையில்லை. ஆனால் கால்பந்தாட்டத்துக்குரிய வேகத்தில் ஆட வேண்டும். இதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்” என்றார் முல்வி.
ஆனால் கால்பந்தாட்டத்தை ஒரு ‘கை’ பார்த்துவிடுவது என்று அவர் தீவிரமாக உள்ளார் என்கின்றன ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட வட்டாரங்கள்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago