அடிதடி வழக்கிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு

By ஏஎஃப்பி

இரவு விடுதியில் தகராறில் ஈடுபட்டதாகத் தொடரப் பட்ட வழக்கிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் விடுவிக் கப்பட்டார்.

இங்கிலாந்து, மேற்கிந் தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி இங்கிலாந்தின் பிரிஸ்டால் நகரில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைக் கொண்டாட பென் ஸ்டோக்ஸ் தனது நண்பர் ரையான் அலியுடன் அங்குள்ள இரவு நேர கிளப்புக்குச் சென்றார். அங்கு இளைஞர் ஒருவருக்கும், பென் ஸ்டோக்ஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் அந்த இளைஞரைத் தாக்கியதாக ஸ்டோக்ஸ் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டார். ஆனால் வழக்குப் பதிவு செய்யா மல், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் போலீஸார் அவரை விடுவித்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணியிலிருந்து ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டார். இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு பிரிஸ்டால் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது பென் ஸ்டோக்ஸும், அவரது நண்பர் ரையான் அலியும் ஆஜராயினர். விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஸ்டோக்ஸ் குற்றமற்றவர் என்று நீதிபதி அப்போது அறிவித்தார். இதை யடுத்து அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அவர் அறிவித்தார். மேலும் இந்த வழக்கில் ரையான் அலியும் விடுவிக் கப்பட்டார். வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்