லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 2 நாட்களில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததையடுத்து இந்திய அணி மீது பரிதாபத்துடன் கூடிய வேதனை எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன.
2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டு ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் படுதோல்வியடைந்தது, பிராட், ஆண்டர்சன் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கிறிஸ் வோக்ஸ் 137 ரன்களையும் பேர்ஸ்டோ 93 ரன்களையும் எடுத்து இந்திய அணியிடமிருந்து ஆட்டத்தை தொலை தூரம் கொண்டு சென்றனர்.
இந்த டெஸ்ட்டில் மொத்தம் 82.2 ஓவர்கள்தான் இந்திய அணி தாக்குப் பிடித்தது, ஆண்டர்சன், பிராட் கூட்டணி 14 இந்திய விக்கெட்டுகளை சட்டைப்பையில் போட்டுக் கொண்டனர். விராட் கோலிக்கு லேசான முதுகுவலி இதனால் 5ம் நிலையில் களமிறங்கினார். அடுத்த போட்டிக்குள் சரியாகி விடும் என்கிறார்.
இந்நிலையில் இந்திய அணி தைரியமாக அடித்து ஆட வேண்டும் என்று கூறும் தாதா கங்குலி. ரிஷப் பண்ட்டை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் தினேஷ் கார்த்திக்கைத் தூக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:
இந்திய வீரர்கள் ஆட்டமிழந்த விதம் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இன்னும் மோசம் என்னவெனில் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளன.
இந்திய வீரர்கள் எப்படி தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வேண்டுமானால் ஷிகர் தவனை மீண்டும் அணியில் சேர்ப்பார்கள்.
புஜாராவிடம் பேசலாம், அவர் மட்டுமே 70 பந்துகள் நின்றார், ஆனால் அணிக்குத் தேவை ரன்கள். அழுத்தத்தையும் சுமையையும் குறைக்க வேண்டுமெனில் வெறுமனே நிற்பது மட்டும் போதாது, ரன்கள் தேவை. அடித்து ஆடினால்தான் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மெனுக்கும் தன்னம்பிக்கை வரும்.
ரிஷப் பண்ட் அணிக்கு வர வேண்டும், தினேஷ் கார்த்திக் மிக மோசமான பார்மில் இருக்கிறார். காலையில் நான் வலைப்பயிற்சியில் கார்த்திக் பேட் செய்ததைப் பார்த்தேன். வலையில் கூட அவரால் பந்துடன் மட்டையை தொடர்பு படுத்த முடியவில்லை.
மேலும் ஒரு இடது கை வீரர் அணிக்குத் தேவை, இந்திய அணியின் தோல்விகள் ரிஷப் பண்ட்டை பாதித்திருக்காது. மேலும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்.
இவ்வாறு கூறினார் சவ்ரவ் கங்குலி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago